நீதிக் கதைகள்
ஒரு குட்டிக்கதை: ஒரு பணக்கார முதலாளிக்கு ஒரு அழகான பெண் ஒருவள் இருந்தாள்!. அவளுக்கு திருமண வயது வந்து விட்டதால் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தார் அவளுடைய தந்தை. அதனை முன்னிட்டு ஊரில் இருக்கும் தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைத்து, அந்த போட்டியில் வெற்றி பெறும் வாலிபவர்க்கு தன் மகளை கல்யாணம் செய்து வைப்பதாகவும் அறிவித்தான்!. போட்டி நடக்கும் நாளன்று, அந்த ஊரில் வசித்த திறமை வாய்ந்த, உடல் வலுவான, மிக புத்திசாலியான இளைஞர்கள் அனவரும் ஒன்று கூடினார்கள்.
சில இளைஞர்களின் கையில் பேனாவும், பேப்பரும் இருந்தது. சில இளைஞர்கள் கையில் வீச்சரிவாளுடனும், சில இளைஞர்களின் கையில் கத்தியுடனும், இன்னும் சில இளைஞர்களோ கையில் துப்பாக்கியுடன் வந்து இருந்தார்கள்!. அவர்கள் எல்லோரையும் தன்னுடைய மிகப்பெரிய நீச்சல் குளத்திற்கு அழைத்துப் போனான். இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து மறுமுனைக்கு முதலில் யாரால் நீந்தி செல்ல முடிகிறதோ!, அந்த பையனுக்கு என் மகளை திருமணம் செய்துக் கொடுப்பேன் என்றார்.
அந்த பெண்ணின் அப்பா சொல்லி முடித்த அடுத்த வினாடியே, அனைவரும் நீச்சலுக்கு தயாராக இருந்தார்கள். விரைவாக அந்த இளைஞர்கள் ஆடைகளை கழற்ற ஆரம்பித்தார்கள். அப்பொழுது அந்த பணக்கார மனிதன் சொன்னான் திருமணம் மட்டுமில்லை கூடவே ஒரு 10 Million டாலர்கள் பணமும், வசிக்க ஒரு தனி பங்களாவும் கூட தருவேன் என்றார். அப்போது தானே, என் பாசமிகு மகளின் இல்லற வாழ்வை இனிதாக தொடங்க முடியும் என்றார். சரி, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகள்!.
என்னுடைய வருங்கால மருமகனை இந்த நீச்சல் குளத்தின் மறுகரையில் சந்திக்கிறேன் என்று சொல்லியவாறு அந்த இடத்திலிருந்து நடந்து சென்றான். இப்படி அவர் சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக நீச்சல் குளத்தின் தண்ணீரில் இறங்க முற்பட்டனர்கள். அப்பொழுது அந்தப் பணக்காரனுடைய ஹெலிகாப்டர் மூலம், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து - நிறைய முதலைகளை அந்தக் குளத்தில் கொட்டிவிட்டு சென்றது.
இதனை பார்த்த இளைஞர்கள் அத்தனை பேரும் மரண பயத்தில் உடனே பின்வாங்கினார்கள். அவர்கள் ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடுத்தி இருந்த உடைகளை மாட்டிக் கொண்டார்கள். அந்த பணக்கார மனிதன் இளைஞர்களை பார்த்து சொன்னான். இது என்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது?. யாராலும் இந்த போட்டியை வெல்ல முடியாது. நிச்சயமாக எவனாலும் ஜெயிக்க முடியாது என்று சத்தமாய் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது உடனே ஒரு இளைஞன் நீச்சல் குளத்தில் குதிக்கின்ற சத்தம் கேட்டது. அருகில் இருந்த அத்தனை பேரும் திகைத்து போய் ஆச்சிரியமாக அந்த இளைஞனையே கண் இமைக்காமல் பார்த்தார்கள்.
அந்த குளத்தில் நீந்திய திறமையான இளைஞன், மிக சாதுரியமாக அத்தனை முதலைகளிடம் இருந்து விலகி மிக வேகமாக நீந்தி மறு கரையில் சட்டென்று ஏறினான். அந்த பணக்கார மனிதனால் நம்ப முடியவில்லை. அவன் ஆச்சரியப்பட்டான். மிக அருமை!, என்று கூறினார் பணக்கார மனிதன். அவன் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல இன்னும் நிறைய தருகிறேன் என்றான். அந்த இளைஞனிடம் சென்று அவனைப் பார்த்து உனக்கு என்னென்ன வேண்டும் என்று சொல். அதனை தருவதற்கு ரெடியாக உள்ளேன் சொன்னான். எதுவாக இருந்தாலும் அதனை தருவதற்கு ரெடியாக இருக்கிறேன். அந்த இளைஞனோ இன்னமும் அந்த கடுங்குளிர் நடுக்கத்தில் இருந்து மீளவில்லை.
அவன் கண்கள் மிரட்சியில் அரண்டு போய் இருந்தன. அதன் பின், ஒரு மாதிரி முகப்பவனையை மாற்றி கண்களில் வெறியுடன் கேட்டான். இந்த விஷயமெல்லாம் இருக்கட்டும் என்னை யார் இந்த குளத்தில் தள்ளி விட்டார். முதலில் தள்ளிவிட்டவனை மட்டும் யாரென்று என்னிடம் காட்டுங்கள் என்றான் அந்த இளைஞன். ஹெலிகாப்டர் மூலம் அந்த நீச்சல் குளத்தில் கொட்டிய அனைத்து முதலைகளையும் உயிரற்ற இரப்பர் முதலைகளே ஆகும். ஆனால் இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயத்தில் முதலைகள் எல்லாம் இரப்பர் முதலைகள் என்று பக்கத்தில் சென்று கூட பார்க்கவில்லை.
நீதி-1: முதலைகள் இருந்த நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் தள்ளிவிடப்படும் வரை உன் மீது இருந்த திறமை என்னவென்று, உனக்கே தெரியாது. அந்த இரப்பர் முதலைகள் போன்றே, நம் வாழ்வின் பிரச்சினைகளும் போலியானது தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நீதி-2: அந்த இளைஞனை முதலைகளுக்கு காவு கொடுக்க நினைத்தவர்களால் தான், உனக்குள்ளே இருந்த திறமையை வெளிக்கொண்டுவர உதவியவர் என்றே நம் புரிந்து கொள்ள வேண்டும். நீதி-3: சில நேரங்களில் இது போன்ற மிகவும் மோசமான மற்றும் கடினமான தருணங்களை கடக்கும் பொழுதுதான், நம் மீது இருக்கும் உண்மையான திறமை வெளிப்படுகிறது. நீதி-4: சில மனிதர்கள் இந்த மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும் பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர்ந்த இலக்கை அடைய முடிகிறது!.
நீதி கதைகளை படிக்கும் போது நம் மனது தெளிவு அடைகிறது. எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன. பல பெயர்களில் நீதிக் கதைகள் உண்டு. நீதிக் கதைகள், உலக நீதி கதைகள், சிறுகதைகள், சிறுவர் நீதிக் கதைகள், தெனாலிராமன் நீதி கதைகள், அரச நீதி கதைகள், ஜென் நீதி கதைகள், தன்னம்பிக்கை தரும் நீதி கதைகள், பஞ்சதந்திர நீதி கதைகள், மாணவர் நன்னெறிக் கதைகள், வரலாற்று நீதிக் கதைகள், ஈசாப் கதைகள், அக்பர் மற்றும் பீர்பால் நீதி கதைகள், கருத்து கதைகள், திருக்குறள் நீதி கதைகள், நீதி நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என பலவாறு உள்ளன.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.