கொரியர்களின் உலக புகழ்பெற்ற வாழ்வியல் முறைகள் | ThaenMittai Stories

கொரியர்களின் உலக புகழ்பெற்ற வாழ்வியல் முறைகள்

கொரியா நாட்டு மக்கள் பின்பற்றும் உணவுப்பழக்கமும், வாழ்வியல் முறையும் உலகளவில் பாராட்டை பெற்று வருகிறது. அதற்கேற்ப சரும பராமரிப்பு முதல் சமசீர் உணவுகள் வரை ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். இளமையையும், சுறுசுறுப்பையும் தக்க வைத்துக்கொள்ளவும் செய்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற 10 கொரிய பழக்கவழக்கங்களி பற்றி பார்க்கலாம்.
Read Also: ஆக்கபூர்வமான சிந்தனை ஏன் அவசியமான ஒன்று ?

குடல் ஆரோக்கியம்

கொரிய உணவில் கிமிச்சி,தயிர் போன்ற புளித்த உணவுகள் பிரதானமாக இடம் பெறுகின்றன. இந்த உணவுகளில் ப்ரோபயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. அவை குடல் நுனியிரிகளின் செயல்பாடுகளை ஊக்குவித்து வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர், ஊறுகாய் மற்றும் பாரம்பரிய புளித்த பானங்களை விரும்பி உண்கிறார்கள்.இத்தகைய உணவு பதார்த்தங்களை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

பார்லி தேநீர்

பார்லியில் தயாராகும் பிரபலமான பானம் பெயர் "போரி சா" இது கொரியாவின் மிக பிரபலமானது. இது உடலில் நீர்ச்சத்து தக்கவைக்கவும், செரிமானம் சுமுகமாக நடைபெறவும் உதவும். இந்தியர்கள் பார்லி டீ பருகுவது டீ,காபி போன்ற காபின் சேர்க்கப்பட்ட பானங்களுக்கு மாற்றாக அமையும். உடலில் நீர்ச்சத்தை பேணவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலுக்கு புத்துணர்ச்சியூட்டவும் உதவும்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை

உடல் செயல்பாடு

கொரியர்கள் நடைப்பயிற்சி,ஜாக்கிங் மற்றும் ஜிம் உடற்பயிற்சிகளுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கிறார்கள். உடலை கட்டுக்கோப்பை வைத்திருக்கவும், மன அழுத்ததை குறைக்கவும் காலி நேர நடைப்பயிற்சி, யோகாசனம் மேற்கொள்ளலாம். வார இறுதி நாட்களில் கூறுகிற தோன்ற பயணம் மேற்கொள்ளலாம். கொரியர்கள் போலவே இந்த உடல் செயல்பாடுகளை அன்றாட வளாகத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பயன் அடையலாம்.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்

சரும பராமரிப்பு

கொரியர்கள் சரும பராமரிப்புக்கு கூடுதல் முக்கியதுவம் கொடுப்பார்கள். சருமத்தில் படியும் மாசுகளை நீக்குவது, இரண்டு முறை சருமத்தை சுத்தம் செய்வது , ஈரப்பதத்தை தக்க வைப்பது , சூரிய ஒளிக்கதிர்களிடம் இருந்து பாதுகாப்பது என சரும நலனில் அக்கறை கொள்வார்கள்.காற்று மாசுபாடு மற்றும் கடுமையான வானிலையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாத்து கொள்ள இந்த வழக்கங்களை பின்பற்றலாம்.

சமச்சீர் உணவு

கொரிய உணவுகளில் காய்கறிகள் ,சத்து குறைந்த புரத உணவுகள் மற்றும் கிமிட்சி போன்ற புளிக்கப்பட்ட உணவுகள் தவறாமல் இடம் பிடிக்கின்றன. அது போல் இந்தியர்கள் தங்கள் உணவில் அதிக காய்கறிகள் மற்றும் புளித்த உணவுகளை சேர்ப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும் துணை புரியும்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்

பெரியவர்களுக்கு மரியாதை

கொரியர்கள் குடுமபத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு உரிய மதிப்பையும், மரியாதையும் வழங்குகிறார்கள். தியானம் மற்றும் நினைவாற்றல் போன்ற பயிற்சிகள் மூலம் மன நலனுக்கு முன்னரிமை அளிக்கிறார்கள். பிறர் செய்த உதவிகளுக்கு நன்றியுணர்வை கடைப்பிடிப்பதில், குடும்ப மரபுகளை மதிப்பதிலும் தனித்துவமிக்கவர்களாக விளங்குகிறார்கள்.இதனை பின்பற்றுவதன் மூலம் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
கொரியர்களின்  உலக புகழ்பெற்ற வாழ்வியல் முறைகள்

பாரம்பரிய மூலிகை தேநீர்

கொரியர்கள் ஜின்ஜெஸிங் டீ ,க்ரீன் டீ உட்பட பல்வேறு மூலிகை தேநீர்களை உட்கொள்கிறார்கள். செரிமானம் மற்றும் மன நிலையை மேம்படுத்தும் தனிமைகளுக்காக மூலிகை தேநீரை ருசிக்கலாம்.

உணவு சாப்பிடும் முறை

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உணவை பகிர்ந்து சாப்பிடுவது கொரியர்கள் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாகும். வெளி இடங்களில் சாப்பிட அதிகம் விரும்ப மாட்டார்கள். வீட்டில் தயாராகும் உணவுகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவும் விரும்புவார்கள். அதன் மூலம் குடும்ப ஒற்றுமை உணர்வை மேம்படுத்தி கொள்கிறார்கள். இத்தகைய வழக்கத்தை பின்பற்றி குடும்ப பிணிப்புகளை வலுப்படுத்தலாம்.
Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food

காலை உணவின் முக்கியதுவம்

கொரியர்கள் ஒரு போதும் காலை உணவை தவிர்க்க மாட்டார்கள். பெரும்பாலும் சத்தான ,சமச்சீரான காலை உணவை உட்கொள்கிறார்கள். அதில் முழு தானியங்கள், பழங்கள், புரதங்கள் உட்பட ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்கிறார்கள். காலை உணவை தவறாமல் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆற்றலையும்,ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook