4 போட்டி தேர்வுகளில் வெற்றி! சாதனையை படைத்த தையல் தொழிலாளி மகன்- ThaenMittai Stories

4 போட்டி தேர்வுகளில் வெற்றி சாதனையை படைத்த தையல் தொழிலாளி மகன்

அரசு வேளையில் சேர வேண்டும் என்பது கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் கனவாகும். பலருக்கு அது கனவாகவே கலந்து விடுகிறது. காரணம் அரசு வேலைக்கு கடும் போட்டி நிலவுகிறது.

Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food
இந்நிலையில், மராட்டிய மாநிலம் லாத்தூரை சேர்ந்த நர்சிங் ஜாதவ் என்ற 24 வயது வாலிபர் 4 போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அசாதாரண சாதனை படைத்துள்ளார் . அவரது தந்தை ஒரு தையல் தொழிலாளி.ஏழை குடுமத்தை சேர்ந்த நர்சிங் ஜாதாவுக்கு சிறு வயது முதலே பெரிய அரசு அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. படிப்பு மட்டுமே தன்னை அதிகாரியாக உயர்த்தும் என்பதை அவர் நன்கு உணர்திருந்தார்.

தந்தை தைக்கும் பொது ஆடையில் குத்தும் ஊசியை போல அரசு அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை இவரை இடைவிடாமல் குத்திக்கொண்டே இருந்தது. எனவே அவர் இளமை மற்றும் பல்வேறு தடைகள் வந்த போதும் படிப்பை தொடர்வதில் உறுதியாக இருந்தார்.

Read Also: தூக்கத்தை தவிர்க்கும் உயிரினங்கள்
அங்குள்ள பள்ளியில் படிப்பை முடித்ததும் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ முடித்தார். அதன் பிறகு பொரியல் கலோரி ஒன்றில் இன்ஜினியரிங் படித்தார். அதன் பிறகு முழு வீச்சில் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆனார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதினார். இதில் உதவி சிவில் என்ஜினீயர் தேர்வில் வெற்றி பெற்று பர்பானி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் வேலைக்கு சேர்ந்தார். இதற்கிடையே அவர் எழுதிய போட்டி தேர்வு முடிவுகள் கடந்த 16 -ஆம் தேதி வந்தது.

4  போட்டி தேர்வுகளில் வெற்றி! சாதனையை படைத்த தையல் தொழிலாளி மகன்
இது தவிர இளநிலை பொறியாளர் தேர்வில் குரூப் 2 முதல் தரத்திலும், நீர் வளத்துறை உதவி சிவில் என்ஜினீயர் தேர்விலும் தேர்ச்சி பெற்று இருந்தார்.

Read Also: வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்-
இந்நிலையில் சமீபத்தில் வெளியான உதவி சிவில் தேர்விலும் குரூப் 3 தேர்ச்சி பெற்றுள்ளார். ஒரு ஆண்டு கால கட்டத்திற்குள் நர்சிங் ஜாதவ் 4 போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பித்ததக்கது.

4 போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற போதிலும் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று கெஜடட் அதிகாரி ஆக வேண்டும் என்பதே நர்சிங் ஜாதாவின் லட்சியமாக உள்ளது. அதற்காக தொடர்ந்து படித்து வருகிறார்.

Read Also: கவனச்சிதறலை தடுக்கும் வழிகள்
குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாக வேண்டும் என்று தான் எனது பயணத்தை தொடங்கினேன். தொடர்ந்து அதற்காக படித்து வந்தேன். நான் பொதுப்பணித்துறையில் சேர்ந்த போதும் ,படிப்பை விடமாட்டேன் .குரூப் 1 அதிகாரி ஆகும் வரை தொடர்ந்து அதற்காக உழைப்பேன் என்று உற்சாகமாக பேசினார்.

கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் கடின உழைப்பும், விட முயற்சியாலும் 4 போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற நர்சிங் ஜாதவ் அரசு வேலைக்காக படித்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்துள்ளார்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook