அடுத்து என்ன படிக்கலாம் ? எதிர்காலத்தை தீர்மானிக்கும் படிப்புகள் !ThaenMittai Stories

அடுத்து என்ன படிக்கலாம் ? எதிர்காலத்தை தீர்மானிக்கும் படிப்புகள் !

தொழில்நுட்ப முன்னேற்றக்கிற்கு ஏற்ப, நாமும் நம்மை அப்பேட் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான், முன்னேறி வரும் தொழில்நுட்ப உலகில் நமக்கான அங்கீகாரத்தை பெற முடியும்.

Read Also: சுய முன்னேற்றத்திற்கு வழிகாட்டுபவை !
உதாரணத்திற்கு... 20 ஆண்டுகளுக்கு முன்பு, பணம் கொட்டும் ஐ.டி. துறை படிப்பாக இருந்த சி மற்றும் சி++ மென்பொருள் திறன்கள் இன்று, அடிப்படை படிப்புகளாக மாறிவிட்டன. அதேசமயம் 20 வருடங்களுக்கு முன்பு, ஐ.டி. துறையே அறிந்திராத ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று ஐ.டி. துறையையும், ஒட்டுமொத்த தகவல் உலகையுமே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த முன்னேற்றம், சிலரது வேலைகளை பறித்துவிடுகிறது. பலருக்கும் புதுமையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது.

இத்தகைய போட்டி உலகில், உங்களை நிலைநிறுத்த எதிர்கால சிந்தனை அவசியம். குறிப்பாக, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் தொழில்நுட்பங்களை கற்றறிந்து, அது சார்ந்த துறையில் முன்னேற வேண்டும். அப்போதுதான், வளமான எதிர்காலம் அமையும். அப்படி, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் சில துறைகளை பற்றியும், அதில் இருக்கும் படிப்புகளை பற்றியும் அறிந்து கொள்வோம்.

அடுத்து என்ன படிக்கலாம் ? எதிர்காலத்தை தீர்மானிக்கும் படிப்புகள் !

ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ.(A) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பல்வேறு ஆச்சரியத்தக்க மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வடிவமைப்பில் தொடங்கி, உற்பத்தி தொழிற்சாலைகள், டிசைனிங் துறை, சினிமா துறை, தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் லைவ் வரை... எல்லா வேலைகளையும் எளிதாக்க, மனிதர்களை விட சிறப்பாக செய்து முடிக்க... ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. அனைத்து பணிகளும் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது இதன் காரணமாக நிறைய பேர்களுக்கு வேலை எப்போ வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலமைமை பரவி வருகிறது.

இத்தகைய சூழலில் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ. தொடர்பான கல்வி, வேலையை காப்பாற்றுவதோடு, வருமானத்தை பல மடங்கு பெருக்கவும் உதவி புரிகிறது.தொடர்ந்து நாம் முயற்சிக்கும் பி.டெக்., எம்.டெக்., படிப்புகளுக்கு மாற்றாக AI அதாவது செயற்கை நுண்ணறிவு குறித்து கற்பிக்கப்படும் படிப்புகளை தேர்தெடுப்பது ஒரு நல்ல முடிவாக இருக்கும். அதாவது, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றுடன் கூடிய பி.டெக்., மற்றும் எம்.டெக்., படிப்புகள் மிகவும் சிறந்தது. இதையும் தாண்டி, தற்போது வேலையில் இருப்பவர்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து படிக்க விரும்பினால், தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் 5 செயற்கை நுண்ணறிவு சான்றிதழ் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துப் படிக்கலாம்.

Read Also: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 - ஏ தேர்வுக்கு, தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலின் அடித்தளம்

(Foundation of Artificial Intelligence and Machine Learning)

இயந்திர கற்றல் மற்றும் AI-ல் முதுகலை பட்டயம்

(PG Program in Machine Learning and Al)

செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழமான கற்றலின் முத்துக்களை பட்டயம் போன்ற

(Post Graduate Certificate Program in Artificial Intelligence and Deep Learning)

முழு அடுக்கு இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டம்

(Full Stack Machine Learning and Artificial Intelligence Program)

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் முதுகலை பட்டயம்

(Post Graduate Program in Artificial Intelligence and Machine Learning)
தற்போதைய சூழலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், டேட்டா சயின்ஸ் போன்ற படிப்புகளுக்கு நிறைய வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றன. அதோடு சேர்த்து செயற்கை நுண்ணறிவு படிப்பையும் சேர்த்து படிக்கும்போது நிச்சயம் நல்ல சம்பளம் கிடைக்கும் மேலும் எதிர்காலத்தில் பல மடங்கு நல்ல வேலைவாய்ப்பும், நிறைய சம்பளமும் உயரும் வாய்ப்பு உள்ளது.

Read Also: 21 நாட்கள் விரதம் இருந்து உடல் எடையை குறைத்த இளைஞர் !

விண்வெளி அறிவியல்

AI தொழில்நுட்பம் போல விண்வெளி அறிவியல் படிப்பும் எதிர்காலத்தில் நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய படிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும், இந்த படிப்புக்கு முக்கியதுவம் அளித்து அதன் எதிர்கால தேவையை புரிந்து கொண்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

விண்வெளி ஆராய்ச்சி நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்தல் ஆகியவற்றுக்கும் பயன்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சித்துறை மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு, வானவெளியில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

Read Also: சிறந்த தந்தைக்கான 8 குணங்கள் !
இத்துறையில் நல்ல வேலை வாய்ப்புகளும் காத்திருக்ககின்றன. இதன் காரணமாக இந்த துறை சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கும் பொது நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மத்திய அரசின் விண்வெளித்துறையின் கீழ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு பல்வேறு பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன. விண்வெளித்துறை தொடர்பான படிப்புகளை மாணவர்கள் படிக்கலாம்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்விநிறுவனத்தில் நடத்தப்படும் பாட பிரிவுகள்...

இளநிலை: பி.டெக். ஆவியானிக்ஸ், பி.டெக். ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்

இரு பட்டங்கள்: பி.டெக் படிப்புடன் (மாஸ்டர் ஆப் சயின்ஸ்/மாஸ்டர் ஆப் டெக்னாலஜி)

Read Also: கல்வி, கலைகளில் கலக்கும் இளம் நாயகி !

முதுகலை:

எம்.டெக். ஏரோடைனமிக்ஸ் அண்ட் பிளைட் மெக்கானிக்ஸ், எம்.டெக். ஸ்ட்ரக்சர் அண்ட் டிசைன், எம்.டெக் தெர்மல் அண்ட் புரோபெல்ஷன், எம். டெக். கண்ட்ரோல் சிஸ்டம், எம்.டெக். டிஜிட்டல் சிக்னல் புராசசிங், எம்.டெக். மைக்ரோவேவ் என்ஜினீயரிங், எம்.டெக். பவர் எலெக்ட்ரானிக்ஸ், எம்.டெக். எர்த் சிஸ்டம் சயின்ஸ், எம்.டெக். ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், எம்.டெக். மெஷின் லேர்னிங் அண்ட் கம்யூட்டிங்... இப்படி விண்வெளி தொடர்பான படிப்புகள் நிறைய இருக்கின்றன. இவற்றை படிப்பதன் மூலம் வளமான எதிர் காலத்தை உருவாக்க முடியும்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook