உங்களின் அடுத்த இலக்கு என்ன ? இதை ட்ரை பண்ணுங்க !
இந்த வருடத்தில் முதல் 6 மாதங்கள் முடிந்துவிட்டது. இது வரைக்கும் ஏதும் செய்ய முடியவில்லையே என நினைப்பவர்கள் இன்று முதல் 6 மாதங்களுக்கு சிறிய இலக்குகளை வைத்து செயல்படலாம்.
Read Also: கவனச்சிதறலை தடுக்கும் வழிகள் தொழில் மற்றும் வேலை சார்ந்த இலக்கு
சேமிப்பு இலக்கு
ஆரோக்கிய இலக்கு
தனிப்பட்ட விருப்ப இலக்கு
என இலக்குகளை வைத்து கொள்ளலாம்.
Read Also: 20 வயதை கடந்து விட்டீர்களா! அப்போ முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!எடுத்துக்காட்டாக அடுத்த 6 மாதத்திற்கான என்னுடைய இலக்காக
1 .ஏதாவது ஒரு மொழி கற்க ஸ்டார்ட் பண்ணி அதை தொடர்வது.
2 .நல்ல மோட்டிவேஷன் கன்டென்ட் எழுதி போடுவது.
3 .சேமிப்பில் குறைந்தது 30 ஆயிரம் சேமித்து வைப்பது.
4 .தினசரி 2 .5 km நடப்பது.
5 .3 முதல் 5 புத்தகங்கள் வாசித்து முடிப்பது .
6 . ஒரு சுற்றுப்பயணம் நல்ல நினைவுகளாக
Read Also:வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதையும் ஈர்க்கவும் & பெறவும் இது உங்களுக்கு உதவும்ஏன் இலக்குகளை வைக்க வேண்டும்
உங்கள் மீதான பொறுப்பு அதிகரித்து தன்னபிக்கையுடன் செயல்பட துவங்குவீர்கள்.இதனால் கற்றல் திறன் திகரிக்கும்.கற்றல் திறன் அதிகரித்தல் உங்கள் வேலை செய்யும் திறம் மேம்படும். உங்கள் வேலைத்திறன் மேம்பட்டால் உங்கள் பொருளாதாரம் மேம்படும்.
Read Also: ஏன் புத்தகங்கள் படிக்க வேண்டும்? அதனால் என்ன மாற்றம் நமக்கு கிடைக்கின்றது ? நிறைய பேர் டிசம்பர் கடைசி நாள் வந்தவுடன் நான் 2024 நாளில் இதையெல்லாம் செய்தேன் என எழுதுவார்கள். அப்போது ஒரு எண்ணம் வரலாம். எல்லாரும் ஏதாவது செய்தார்கள் நாம் என்ன செய்தோம் என்ற குற்ற உணர்வில் இருக்காதீர்கள். எல்லாம் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளாம் என்பார்கள். ஆனால் அப்படி நினைத்து கொண்டிருந்தால் வருடங்கள் தன ஓடுமே தவிர நாம் ஒரே இடத்தில தான் இருப்போம்.
நமது இலக்கை அடைய எந்தெந்த செயல்களுக்கு முன்னுரிமை தர வேண்டுமென்பது தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். நாம் இலக்குகளை முடிப்பதற்காக செயல்களை தெரிந்து கொண்ட பின்பு அதிக நேரத்தை மற்றும் கவனத்தை செலுத்துவதன் மூலம் நம்முடைய இலக்குகளை எளிதில் அடைய முடியும்.
Read Also: இளைஞர்களின் வளர்ச்சி படிக்கட்டுகளுக்கான வழிமுறைகள் !உங்கள் சொந்த அனுபவத்தை ஆராய்தல். தேவையானவற்றை ஆராய்ந்து எடுத்துக்கொள்ளுதல். தேவையில்லாததை ஒதுக்கிவிடுதல். நீங்கள் சுயமாக கற்றதை இதோடு சேர்த்தல்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக வேறு யாரிடமும் இல்லாததை அடைய, வேறு யாரும் செய்யாததை நீங்கள் செய்ய வேண்டும். பலரும் படிக்கும் புத்தகத்தை படித்தால், பலருக்கும் தெரிந்தவை தான் உங்களுக்கும் தெரியுமே தவிர புதிதாக ஒன்றும் தெரியாது. எல்லாரும் செய்ய முடியாத விஷயங்களை செய்து , யாரும் படிக்காத விஷயங்களை படித்து கொண்டு இருந்தால் உங்களின் இலக்கு வெறும் தொட்டு விடுகிற தூரத்தில் தான் உள்ளது நண்பர்களே.
Read Also: எப்போதுமே தன்னம்பிக்கையோட இருக்கணுமா ? அதனால் எதுவாக இருந்தாலும் சின்ன இலக்குகளை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக, நிலையாக முன்னேறுங்கள் . ஒரே நாளில் எல்லாம் மாறாது. சின்ன இலக்குகள் உங்களை எளிதில் வெற்றி அடைய செய்யும். அது உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். நீங்களும் அடுத்த இலக்குகளை நோக்கி பயணம் செய்விர்கள் சலிப்படியாமல். சிறிய இலக்குகளை வெற்றிகரமாக முடித்தாலும் கொண்டாடுங்கள். உங்களுக்கு நீங்களே பரிசு கொடுத்து மகிழுங்கள். இது உங்களை சுறுசுறுப்புடன் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வைக்கவும்.
ஆனால் சிறிய பழக்கங்கள் ஒரு நாள் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொண்டு வரும்.