சரும அழகை பராமரிக்கணுமா? அப்போ தினமும் இதை பண்ணுங்க !ThaenMittai Stories

சரும அழகை பராமரிக்கணுமா? அப்போ தினமும் இதை பண்ணுங்க !

காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியவை ! சரும அழகை மெருகூட்டுவதற்கு அழகு சாதனப் பொருட்களை மட்டுமே சார்ந்திருப்பதில் பயனில்லை. சில பழக்கவழக்கங்களை தினமும் தொடர்ந்து பின்பற்றினாலே போதுமானது. இயற்கையாகவே சருமம் பளபளப்புடன் காட்சி தரும். விரைவில் வயதான தோற்றமும் எட்டிப்பார்க்காது.

உணவு வழக்கம்

Read Also: கவனச்சிதறலை தடுக்கும் வழிகள்
உடல் போதுமான ஊட்டச்சத்தை பெறும் போது சருமத்தின் செயல்பாடும் சரியாக நடக்கும். ஏனெனில் உண்ணும் உணவும் சருமத்தில் நேரடி விளைவுகளை ஏற்படுத்தும். பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் சுமார் 15 வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பருப்பை தினமும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கும், விரைவில் சுருக்கங்கள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். நிறமியால் சரும நிறம் மாறுவதை தடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்க்கும்.
Read Also: 20 வயதை கடந்து விட்டீர்களா! அப்போ முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!

நீரேற்றம்

சருமத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு சரியான நீரேற்றம் இன்றியமையாதது. உடலில் நீர்ச்சத்து குறைவது சரும செல்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வதை உறுதி செய்வது அவசியமானது.

மன அழுத்தம்

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தத்தை நிர்வகிப்பது அவசியமாகிவிட்டது. நாள்பட்ட மன அழுத்தத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. மன அழுத்தத்தால் அவதிப்படும் நபரின் சருமம் சோர்வாகவும், பொலிவின்றியும் காணப்படும். மன அழுத்தத்தை நிர்வகிக்க யோகா, தியானம், ஆழ்ந்த சுவாசம் போன்ற பயிற்சிகளை தினசரி வாழ்க்கையில் இணைத்துக்கொள்வது சருமத்துக்கு மட்டுமல்ல, நல்வாழ்க்கைக்கும் வழிவகை செய்யும்.
Read Also:வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதையும் ஈர்க்கவும் & பெறவும் இது உங்களுக்கு உதவும்
சரும அழகை பராமரிக்கணுமா? அப்போ தினமும் இதை பண்ணுங்க !

தூக்கம்

உடல் போதுமான தூக்கத்தை பெறுவதை உறுதிசெய்வதும் முக்கியமானது. ஏனெனில் பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும் பணி தூக்கத்தின்போதுதான் நடைபெறும். போதுமான தூக்கமின்மை சருமத்தை பலவீனமடைய செய்யும் அறிகுறிகளுடன் தொடர்புடையது. உடலின் மிகப்பெரிய உறுப்பாக விளங்கும் தோல், ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய 7-8 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
புகைப்பிடிப்பது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்ட பலகாரங்களை உட்கொள்வது, சரும கவனிக்காமல் இருப்பது சுகாதாரத்தை உள்ளிட்ட விஷயங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் நேரடியாக பாதிக்கும். அவற்றை தவிர்த்துவிட வேண்டும்.
Read Also: ஏன் புத்தகங்கள் படிக்க வேண்டும்? அதனால் என்ன மாற்றம் நமக்கு கிடைக்கின்றது ?

சுத்தம் செய்தல்

சரும பராமரிப்பு வழக்கத்தை தினமும் தவறாமல் பின்பற்றுவது முக்கியம். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அது முகத்தில் படியும் அசுத்தங்களை அகற்ற உதவும். அதுபோல் தினமும் மாய்ஸ்சுரைசிங் பூசுவதற்கும் மறக்கக்கூடாது. அது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். அத்துடன் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பூசுவதும் நல்லது. தினமும் 5-6 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதும் புற ஊதாக்கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும்.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook