நாவல் பழத்தில் இவ்வளவு இருக்கா! நாவல் பழத்தின் மகிமை !ThaenMittai Storie

நாவல் பழத்தில் இவ்வளவு இருக்கா! நாவல் பழத்தின் மகிமை!

இனிப்பு புளிப்பு என இரண்டு சுவையும் கலந்தது நாவல் பலம். இதில் வைட்டமின் சி, இரும்புசத்து, ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்பட பல்வேறு ஊட்டசத்துக்கள் நிரம்பியுள்ளன. இது நாவல் பழம் சீசனாக இருப்பதால் பலரும் அதனை ருசிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். நாவல் பழத்தை எல்லோரும் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் ..

Read Also: வெற்றியை கண்டு அஞ்சாதீர்கள் ! குறுக்கு வழியை தேடாதீர்கள் !
நாவல் பழத்தில் குறைந்த கிளைசீமிக் இன்டெஸ் மற்றும் ஜம்போலின் உள்ளது. இது மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை கட்டுப்படுத்த உதவும். அத்துடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்./div>
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8018253953568089" crossorigin="anonymous">
நாவல் பழத்தில் நார்சத்து நிறைந்துள்ளது. அது செரிமாதத்துக்கு உதவும். மலச்சிக்கலை தடுக்கும். குடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கு உதவிடும். நாவல் பழத்தின் விதைகள் மற்றும் பட்டைகள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

Read Also: உயிர் காக்கும் தாய்ப்பால்
நாவல் பழத்தில் அந்தோசையின்கள் ,பிளவனாய்டுகள்,பாலி பீனால்கள் ,உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடென்டுகள் நிரம்பியுள்ளன. புற்றுநோய் ,இதயநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைகின்றன.

நாவல் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுப்படுத்த உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியதையும் மேம்படுத்தும். பெருந்தமனி தடிப்பு தோல் அலர்ஜி அபாயத்தை குறைக்கும். நாவல் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடும் திறனை அதிகரிக்க செய்யும்.

script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8018253953568089" crossorigin="anonymous">
நாவல் பழத்தில் இவ்வளவு இருக்கா!  நாவல் பழத்தின் மகிமை !
நாவல் பழத்தில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சருமத்திற்கு சேதம் ஏற்படுத்தும் ப்ரீ ரேடிகளுக்கு எதிராக போராடும், விரைவில் வயதானஅறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். முகப்பரு, கரும்புள்ளிகளை எதிராகவும் பாதுகாப்பு அளிக்கும்.

Read Also: கவனச்சிதறலை தடுக்கும் வழிகள்
நாவல் பழத்தில் நார்சத்து அதிகம். கலோரி குறைவு. அதனால் உடல் எடையை சீராக நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு நாவல் பலம் சிறந்த தேர்வாக அமையும். குறைவாக சாப்பிட்டாலே வயிற்றுக்கு திருப்தி அளிக்கும். அதனால் அதிக கலோரிகளை உட்கொள்ள தோன்றாது. ஒட்டுமொத்தமாகவே கலோரி உட்கொள்ளும் அளவை குறைக்கும்.

Read Also: வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்-
நாவல் பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க உதவும். அதன் இலைகள் மற்றும் பட்டைகள் வாய் புண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், ஈறு நோய்களை தடுப்பதற்கும் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8018253953568089" crossorigin="anonymous">

யார் யார் இவ்வளவு சாப்பிட வேண்டும்?

குழந்தைகள் 50 கிராம் முதல் 75 கிராம் வரை நாவல் பழத்தை உட்கொள்ளலாம். அதேவேளையில் அவர்களுக்கு ஒவ்வாமையோ, செரிமான பிரச்சனைகளோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியமானது.

Read Also: தூக்கத்தை தவிர்க்கும் உயிரினங்கள்
மற்றவர்கள் சுமார் 100 கிராம் முதல் 150 கிராம் நாவல் பலம் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் தினமும் 50 முதல் 100 கிராம் வரை சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் உதவும்.

இரைப்பை குடல் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை கொண்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.ஏனெனில் நாவல் பழத்தில் ஆக்ஸிலேட்டுகள் உள்ளன. அதனை அதிக அளவில் உட்கொண்டால் சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8018253953568089" crossorigin="anonymous">
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook