தங்கத்தை பின்னுக்கு தள்ளிய கிராம்பு | ThaenMittai Stories

தங்கத்தை பின்னுக்கு தள்ளிய கிராம்பு

தங்கத்தை விட மிக அதிக விலைக்கு 16 -ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்ட அபூர்வமான உணவியல் வாசனைப் பொருள், கிராம்பு. அப்போது ஒரு கிராம் தங்கம் என்ன விலையோ, அதைவிட அதிகமான விலை கொடுத்து ஒரு கிராம் கிராம்பினை போட்டி போட்டு மக்கள் வாங்கிருக்கின்றனர்.

Read Also: குறைகளை நிறைகளாக பார்க்கலாமே !
உலகிலேயே அதிக மவுசுமிக்க உணவு பொருட்களில் ஒன்றாக அது இருந்ததால், அதனை அபகரிக்க ஏராளமான போர்கள் நடந்திருக்கின்றன. இன்னொரு புறத்தில் கிராம்பின் மீது இருந்த மோகத்தால், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கடல் மார்க்கத்தில் புது புது வழிப்பாதைகளும் கண்டறியப்பட்டிருக்கின்றன.

கிராம்பு மரமானது, பூப்பூக்கும் தாவர வகையை சார்ந்தது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் மீட்டர் வரை உயரமுள்ள மலை பிரதேசங்களில் 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ண நிலையில் கிராம்பு மரம் 25 முதல் 40 அடி உயரம் வரை வளரும். எவ்வளவு உயரமான பகுதிகளில் அது விளைகின்றதோ, அதற்க்கு ஏற்றபடி அதன் தரமும் உயர்ந்ததாக அமைகின்றது. ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 34 கிலோ கிராம்பு அறுவடை செய்ய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Read Also: மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்க வைக்கும் சாலை பயணங்கள் !
விதைத்த ஒரு வருடத்தில் பெரிய நாற்றாக வளரும் தன்மை கொண்டது. அதை இடம் பார்த்து நடவு செய்தால், பெரிய மரமாக வளரும். 4 -ல் இருந்து 5 வருடத்தில் அறுவடை தொடங்கும். அதன் மொட்டுக்கள் பச்சை நிறத்தில் இருந்து இளம் சிவப்பு நிறத்திற்கு மாறி, பூவிதழ் விரியாத தொடங்குவதற்கு முன்பு அதனை கையல்பறித்து பறித்து, நான்கு நாட்கள் இளம் வெயிலில் காயவைத்தால் கிரம்பாகிவிடுகிறது.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மொலகன் என்ற மலுக்கு தீவுக்கூடம்தான் கிராம்பின் பூர்விகம். அங்குள்ள மழைக்கால காடுகளில் அவை தோன்றியிருப்பதாக அறியப்படுகிறது. அங்குள்ள பூர்வ குடிகள், கிராம்பை கடவுளாக வணங்கினார்கள்.

Read Also: கொரியர்களின் உலக புகழ்பெற்ற வாழ்வியல் முறைகள்
மலுக்கு தீவுகளில் இருந்து கடல் வணிகம் மூலமாக உலகெங்கிலும் கிராம்பு பரவிருக்க வேண்டும். கிராம்புவால் நிகழ்ந்த வாரற்றுச் சிறப்புமிக்க பலன் என்னவென்றால், அதனை அள்ளி கொண்டுபோக உலகின் பல பகுதிகளில் இருந்து கடல்வழிப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் "ஸ்பைஸ் ரூட்" என்ற புதிய "மசாலா வழித்தடங்கள் " கண்டறியப்பட்டன. எப்படி மலுக்கு தீவில் இருந்து கிராம்புவை கப்பலில் அள்ளி கொண்டு போன ஸ்பெய்ன் நாட்டவர் , கிராம்பை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க ஆசைப்பட்டனர். அதற்காக, மலுக்கு தேவையும், அங்கு வாழ்ந்த பூர்வ குடி மக்களையும் அடிமைப்படுத்தினர்.

கிராம்பினை கொள்ளையடிப்பது மட்டும் அவர்கள் நோக்கமல்ல. கிராம்பினை தங்களை தவிர வேறு யாரும் பயிரிடக்கூடாது என்ற பேராசையோடு மாலுக்கு தீவுக்குள் புகுந்தனர். அவர்களை அங்குள்ள பூர்வகுடிமக்கள் எதிர்த்தனர். டச்சுக்காரர்கள் அவர்களை கூண்டோடு அளிக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றனர். கிராம்பு மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார். அதன் விதைகளை யாரும் பயன்படுத்தி பயிரிட்டுவிடக்கூடாது என்பதற்காக "விதை அழிப்பினையும்" மேற்கொண்டனர்.

தங்கத்தை பின்னுக்கு தள்ளிய கிராம்பு
அந்த பகுதியில் உள்ள தீவுகளை கைப்பற்றிய டச்சுக்காரர்கள் , கொன்றது போக மீதமுள்ள மக்களை அடிமைகளாக்கிருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்தி அங்கே கிராம்புகளை மட்டுமே விளைவித்தனர். அதனால் தங்களது அன்றாட தேவைக்கு கூட உணவுப்பொருட்களை பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். தங்களது அன்றாட உணவுக்கு கூட டச்சுக்காரர்களிடம் கையேந்தும் நிலையும் உருவானது.

Read Also: மழைகாலத்தில் ட்ரிப் போறிங்களா ? இதை தெரிஞ்சிட்டு போங்க !
இதில் இன்னோரு அதிர்ச்சியான சம்பவமும் நடந்துள்ளது. டச்சுக்காரர்கள், உலகிலேயே அதிக மதிப்புமிக்க பொருளாக கிராம்பு இருக்க வேண்டும் என நினைத்து அதற்க்கு உலக அளவில் எப்போதுமே கிராக்கி ஏற்படும் விதத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தினார்கள். அதனால் அடிமைகள் கஷ்டப்பட்டு விளைவித்த கிராம்பு அதிக விளைச்சலை கொடுத்து அறுவடை அதிகரிக்கும் போது , அதனை கொண்டு போய் கடலில் கொட்டிவிடுவார்கள். அல்லது தீயிட்டு எரித்துவிட்டு, போலியான பற்றாக்குறையை உருவாக்கி விலையை உயர்த்திருக்கிறார்கள். நமது வீடு சமையல் அறையில் சிறிய டப்பாவில் இருக்கும் கிராம்புக்குள் எத்தனை சரித்திர அதிர்ச்சிகள் இருக்கிறதென்று பார்த்தீர்களா?
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook