டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 - ஏ தேர்வுக்கு, தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ThaenMittai Stories

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 - ஏ தேர்வுக்கு

தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II ( தொகுதி II ,IIA ) அடங்கிய பணிகளுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பினை 26 .06 .2024 அன்று வெளியுட்டுள்ளது. இதில் துணை வணிகவரி அலுவலர், பத்திரப்பதிவுத்துறை,சார்பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைபாய்ப்பு அலுவலர் மற்றும் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் அடங்கும். மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 2327 . இத்தேர்வுக்கான இணைய வழி விண்ணப்பம் செய்ய கடைசி நாள் 19 .07 .2024 .

Read Also: சுய முன்னேற்றத்திற்கு வழிகாட்டுபவை !

வயது வரம்பு

1 .07 .2024 அன்று 18 வயது நிறைவுற்றிருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு 32 ஆகும். இதர பிரிவினர் மற்றும் முன்னுரிமை பிரிவினருக்கு அவர்களது பிரிவிற்கேற்ப வயது வரம்பு சலுகை உண்டு.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 - ஏ தேர்வுக்கு,  தமிழக அரசின் கட்டணமில்லா  பயிற்சி வகுப்புகள்

கல்வி தகுதி

குறைந்த பட்சம் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு திட்டம்:

முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு கட்டமாக அமைக்கப்ட்டுக்குள்ளது.

Read Also: வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்-
இது குறித்த கூடுதல் விவரங்களை தேர்வாணையத்தின் இணைய முகவரியான www .tnpsc .gov .in , www .tnpscexam .இந்த-இல் அறிந்து கொள்ளலாம். இப்போட்டித்தேர்வினை கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாவட்டந்தோறும் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் தினசரி நேரடி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

Read Also: 4 போட்டி தேர்வுகளில் வெற்றி! சாதனையை படைத்த தையல் தொழிலாளி மகன்
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க உள்ள அனைவரும் தங்கள் வசிக்கும் மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம். ஒவ்வொரு தன்னார்வ பயிலும் வட்டத்திலும் திறன் பலகையுடன் கூடிய வகுப்பறை வசதி மற்றும் போட்டித்தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் கொண்ட நூலக வசதியும் உண்டு. இந்த நூலகத்தையும் பயன்படுத்தி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்க கொள்ள முடியும்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook