எஸ்.ஐ.பி எனும் சேமிப்பு திட்டம்! | ThaenMittai Stories

எஸ்.ஐ.பி எனும் சேமிப்பு திட்டம்!

சமீப காலமாக எஸ்.ஐ.பி முதலிடு பற்றிய தகல்வல்களை இணையம்,சமூக வலைத்தளம் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறோம். RD தபால் நிலைய சேமிப்பு திட்டங்களை போலவே, எஸ்.ஐ.பி சேமிப்பு திட்டத்தையும் மக்கள் வரவேற்க தொடங்கி உள்ளனர் . இந்த நிலையில் ,எஸ்.ஐ.பி சேமிப்பு திட்டம் பற்றிய தகவல்களை, சென்னையை சேர்ந்த நிதி ஆலோசகர் இளமுருகு பகிர்கிறார்.

Read Also: தூங்கும் முன்பு சாப்பிடக்கூடாத 5 பழங்கள்
சிஸ்டமேடிக் இன்வெஸ்டிங் பிளான் என்பதை தன சுருக்கமாக சிப் என அழைப்பார்கள். எது மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு முறையாகும் . மியூச்சுவல் பண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்யும் முறைக்கு மாற்றாக, கொஞ்சம் கொஞ்சமாக தவணை முறையில் குறைந்தது ரூபாய் 100 தொடங்கி, முதலீடு செய்யலாம்.

கிட்டத்தட்ட இந்த வழிமுறை வங்கிகளில் செயல்படும் RD (Recurring Deposit ) ,மற்றும் தபால் நிலைய சேமிப்புகள் போலவே செயல்படும். ஆனால் நீங்கள் பணத்தை வங்கிகளில் செலுத்துவதற்கு பதிலாக மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்விர்கள் . இது முற்றிலும் எளிதான முதலீடு திட்டமாகும் .

Read Also: புத்திசாலியாக உங்களை மாற்றும் பழக்கவழக்கங்கள் | புத்திசாலிகள் பின்பற்றும் பழக்கங்கள்
நீங்கள் மாதாமாதம் நியாபகம் வைத்து பணம் செலுத்த முடியவில்லை என்றாலும், வாங்கி கணக்கை இத்திட்டத்தில் இணைப்பது மூலமாக , தானாகவே பணம் எடுத்துக்கொள்ளும்படி பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் SIP முறையில் பணம் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் ,ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு இணையான பங்குகள் உங்களுக்காக ஒதுக்கப்படும். இது மாதாமாதம் தொடர்ந்து நடப்பதால், பங்குகளில் விலை அதிகமாக இருக்கும்போதும் வாங்குவீர்கள். அதனால் நீங்கள் முதலீடு செய்த பணம் சராசரியாக கூட்டு வட்டியின் பயனை பெற உதவும்.

Read Also: 21 இங்கிலிஷ் பேச கஷ்டப்படுறீங்களா அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காகதான்
நீங்கள் நேரடியக ஒரு நிறுவனத்தின் மீது முதலீடு செய்வதற்கு, அந்த நிறுவனத்தின் பங்குகள் எப்போது விலை குறைவாக வருகிறது என காத்திருக்க வேண்டும். ஆனால் SIP முறையில் உங்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. ஏனெனில் நீங்கள் மொத்த பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யம் போகிறீர்கள் என்பதால், பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்ககளை சராசரியாக கணக்கில் கொள்ளப்பட்டு, உங்களுக்கு லாபத்தையே பெற்று தரும். குறைந்த பட்சம் 6 மாதம் தொடங்கி ஆண்டுகளில் முதலீடு செய்யலாம்.

நீங்கள் பங்குசந்தையில் முதலீடு செய்யபோகிறீகள் என்றாலே தொடர்ச்சியும், அமைதியும் மிக முக்கியம். பங்கு சந்தையில் அவசரப்படுபவர்கள் அனைவதையும் இழக்கிறார்கள். எனவே SIP நீங்கள் செய்யும் முதலீட்டில் தொடர் ஒழுக்கம் மிக முக்கியம்.

Read Also: 21 வயதில் மருத்துவர், 57 வயதில் மாடல் அழகி | Ageless Elegance The Journey of a Mature Model
எஸ்.ஐ.பி  எனும் சேமிப்பு திட்டம் !
ஒவ்வொரு மாதமும் தவறாமல் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். பொதுவாக ரிஸ்க் குறைவான முதலீட்டில் ரிவேர்ட் பலன்கள் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் எதுவும் ரிஸ்க் குறைவான முதலீடுதான். ஆனால் இந்த முறையில் தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட கால முதலிட முயற்சி செய்தால், குறைந்த முதலீட்டிலும் அதிகப்படியான லாபத்தை ஒருவ ஈட்ட முடியும் . அதாவது, 10 ஆண்டுகால சேமிப்பு , 20 ஆண்டுகால சேமிப்பு.... இப்படி நீண்ட கால சேமிப்பாக முன்னெடுத்தால், லாபம் அதிகமாக இருக்கும்.

Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food
சரியான மியுச்சுவல் பண்டில் நீங்கள் முதலீடு செய்தால், சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத லாபத்தையாவது நீங்கள் பார்க்கலாம். இது பணவீக்கத்தின் அளவை விட அதிகம் இருப்பதால், ஒரு லாபகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது. எனவே இப்போதே உங்களுக்கான கணக்கை தொடங்கி ,குறைந்தது மாதம் 500 ரூபாயாவது SIP முறையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யுங்கள். இது நிச்சயம் உங்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்க உதவும். நிதி ஆலோசசகரின் உதவியுடன் முதலீடு செய்வது கூடுதல் பலனை தரும் என்று பொறுப்பாக பேசும் இளமுருகு , இது போன்ற புதுப்புது முதலீட்டு திட்டம் குறித்து விளக்கங்களை, தன்னுடைய இன்வெஸ்ட் சென்னை அமைப்பின் மூலமாக முன்னெடுத்து வருகிறார். மேலும் இளைஞர்களுக்கு பங்குசந்தை குறித்த புரிதலையும் உண்டாக்கி வருகிறார்.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook