கல்லூரிக்காலத்திலேயே வாழ்க்கையை திட்டமிடுங்கள் | ThaenMittai Stories

கல்லூரிக்காலத்திலேயே வாழ்க்கையை திட்டமிடுங்கள்

பன்னிரெண்டு ஆண்டுகால பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, அடுத்த கட்டமாக கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போது வாழ்வின் அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது.

ஒரு இளைஞனின் வாழ்வில் மிக முக்கியமான அதே வேளையில் மிகக்குழப்பமான காலகட்டம் என்பது, அவன் கல்லூரிப் படிப்பை முடித்தது முதல் நிரந்தரப் பணியில் அமரும் வரையான காலகட்டம்தான். பெரும்பாலான இளைஞர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை எதிர்காலத்தைப் பற்றிய திட்டவட்டமான குறிக்கோளோ, குடும்பப் பொறுப்புகள் குறித்த கவலைகளோ இல்லாமல் இருக்கிறார்கள்.

Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food
ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் குடும்பப் பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டிய அல்லது முழுவதும் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். இந்த சூழ்நிலையில் மேற்படிப்பை தொடர்வதா? வேலைக்குச் செல்வதா? அரசு பணிக்கு செல்ல போட்டித்தேர்வு எழுதுவதா அல்லது ஏதேனும் ஒரு தனியார் பணியை தேர்ந்தெடுப்பதா? அல்லது படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை காத்திருப்பதா? என்று பல்வேறு குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளும்.

இந்தக் குழப்பத்தில் இருந்துவிடுபட்டு இளைஞர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தங்களுக்கென ஒரு 'கேரியர் பிளானை` வகுத்து அதனை செயல்படுத்தி தகுதியான வேலை பெற திட்டமிட வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும்போது, கடைசி செமஸ்டரில் தான் சிலர் இது குறித்து யோசிக்கின்றனர். ஆனாலும் எந்த துறையில் வேலைக்கு செல்ல வேண்டும், அத்துறையில் வேலை பெற தேவைப்படும் திறன்கள் எவை?, எவ்வளவு காலம் அதில் பணியாற்ற வேண்டும்? அதன் பின்பு என்ன செய்ய வேண்டும்?, அத்துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? போன்றவை குறித்து அறிந்து இருப்பதில்லை. ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையிலேயே உள்ளனர்.

Read Also: உயிர் காக்கும் தாய்ப்பால்
அந்த துறையில் அடைய வேண்டிய இலக்கு என்ன? என்பது குறித்து ஒரு தெளிவான திட்டம் அனேக மாணவ, மாணவிகளிடம் இருப்பதில்லை.

கல்லூரிக்காலத்திலேயே  வாழ்க்கையை திட்டமிடுங்கள்
கேம்பஸ் இன்டர்வியூ மூலமோ அல்லது படித்து முடித்து கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு கிடைக்கும் ஏதாவது ஒரு வேலைக்கோ செல்கின்றனர். வேலை குறித்த சரியான புரிதல் அல்லது முறையான தேடல் இருப்பதில்லை. பட்டப்படிப்பை முடித்த பின்பு 'பிளேஸ்மெண்ட்' மூலம் பணிக்குச் செல்பவர்களில் சிலர் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தை விட்டு விலகி விடுகின்றனர். அல்லது நீக்கப்பட்டு மீண்டும் வேலை தேடும் படலத்தை ஆரம்பிக்கின்றனர். 21-ம் நூற்றாண்டானது தொழில்நுட்பத் துறையின் அசுர பாய்ச்சலால், கடந்த சில ஆண்டுகளில் நாம் கேள்விப்பட்டிராத பல புதிய பணிகள் உருவாகி வருகின்றன.

Read Also: 20 வயதை கடந்து விட்டீர்களா! அப்போ முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!
பணியின் தன்மைகள் மாறிக் கொண்டே வருகின்றன. சில பணிகள் மறைந்து வருகின்றன. எனவே, கடந்த நூற்றாண்டைப் போல் இல்லாமல் இந்த நூற்றாண்டு சவால்களும், வாய்ப்புகளும் நிறைந்ததாக உள்ளது. நான்காம் நிரந்த தொழில் புரட்சியில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மேச்சிங் லேர்னிங், இன்டர்நெட் ஆப் திங்ஸ், ஜெனிட்டிக் என்ஜினீயரிங், குவாண்டம் கம்ப்யூட்டிங், நானோ டெக்னாலஜி, ரோபோடிக்ஸ், பயோடெக்னாலஜி ஆகியவற்றின் தாக்கம் வேலைவாய்ப்புகளில் பெரிய அளவில் இருக்கிறது.

தற்போது உள்ள சில வேலைகளை இருபது ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்த்திருக்க முடியாது. பீப்பிள் அண்ட் கல்ச்சர் மானேஜர், வெதர் கண்ட்ரோல் என்ஜினீயர், ஜெனிட்டிக் கவுன்சலர்,வேஸ்ட் மானேஜ்மெண்ட் கன்சல்டண்ட், டிஜிட்டல் கண்டண்ட் ஸ்பெஷலிஸ்ட், ஆன்டி-ஏஜிங் பிராக்டிசனர், ரோபோட்டிக்ஸ் என்ஜினீயர், ஹூயூமன் மெஷின் இன்டிராக்ஷன் டிசைனர், ஆக்மென்ட் ரியாலிட்டி டெவெலப்பர், அர்பன் அக்ரிகல்ச்சர் ஸ்பெஷலிஸ்ட், டிரோன் டெவெலப்பர், இ-காமர்ஸ் ஸ்பெஷலிஸ்ட், டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் ஆபீசர், விரிச்சுவல் ரியாலிட்டி டிசைனர், டிஜிட்டல் ரீஹப் கவுன்சலர் போன்ற பணியிடங்களை எதிர்காலத்தில் சாதாரணமாக காணலாம்.

Read Also: பேசுவதை நிறுத்திவிட்டு வேலையை செய்ய ஆரம்பியுங்கள்!
அடுத்த சில ஆண்டுகளில் ஏறத்தாழ 9 சதவீதத்தினர் இதுவரை முந்தைய ஆண்டுகளில் கேள்விப்பட்டிராத பணிகளில் இருப்பார்கள். மேலும் 37 சதவீத பணிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட திறன் தொகுப்புகள் (Skill sets) தேவைப்படும் என்கிறது, ஒரு ஆய்வறிக்கை.

எதிர்கால வாழ்க்கை குறித்து திட்டமிடுவது (Career Planning) உங்கள் செயல்திறனை அதிகரிப்பதுடன் உங்கள் பயணத்தில் குறுக்கிடும் இடையூறுகளை வெற்றிகரமாகத் தாண்டிச் செல்ல உதவும். உங்களின் தனித்திறன், ஆர்வம், ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் இது அமைய வேண்டும். உங்களது வாழ்க்கைப் பயணம் குறித்து தெளிவான திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கைக்கான நோக்கத்தை, அர்த்தத்தை கண்டயுங்கள். நோக்கம் இருந்தால்தான் திசையை தேர்ந்தெடுக்க முடியும். இலக்கு இல்லாத பயணம் மாலுமி இல்லாத கப்பலைப் போன்றது. காற்றடிக்கும் திசையில் நகருமே தவிர இலக்கை சென்றடையாது. வேலைவாய்ப்புகளில் அரசுப்பணி, தனியார்துறை பணி, சுயதொழில் என மூன்று பிரிவுகள் உள்ளன.

Read Also: வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதையும் ஈர்க்கவும் & பெறவும் இது உங்களுக்கு உதவும்
இதைத்தவிர ஆராய்ச்சிப்பணி, அயல்நாட்டுப்பணி, கலைகள் தொடர்பான பணி (ஓவியம், இசை, நடனம், நடிப்பு), இலக்கியப்பணி (பிரீலான்ஸ் ரைட்டர், ஆர்.ஜே. டி.ஜே., கண்டண்ட் கிரியேட்டர்) தொழிற்கல்வி சார்ந்த பணிகள் (வழக்கறிஞர், சார்டர்ட் அக்கவுண்டண்ட்) போன்று பலவகைப் பணிப்பிரிவுகள் உள்ளன. நீங்கள் செல்ல விரும்பும் எந்தவொரு பணியாக இருந்தாலும் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அதற்கான திட்டமிடலை செய்து, செயல்படுத்துவது மிகச்சிறப்பு.

எனவே படிக்கும் காலத்திலேயே உங்களுக்கான வாழ்க்கை பயணத்தை தயார் செய்யுங்கள். எதிர்கால பணி வாழ்க்கைக்கு இப்போதே தயாராகுங்கள். உங்கள் தகுதிக்கும், திறமைக்குமான வேலை உங்களைத் தேடி வரும். வாழ்த்துக்கள்!

Read Also: ஏன் புத்தகங்கள் படிக்க வேண்டும்? அதனால் என்ன மாற்றம் நமக்கு கிடைக்கின்றது ?
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook