நக அழகை மெருகூட்டும் நெயில் எக்ஸ்டென்ஷன் ! -ThaenMittai Stories

நக அழகை மெருகூட்டும் நெயில் எக்ஸ்டென்ஷன் !

பேஷன் உலகில் அன்றாடம் புதுமைகள் புகுந்து கொண்டே இருக்கின்றன. உடலையும், முகத்தையும் அழகுபடுத்துதல் என்பதை தாண்டி... உடலின் ஒவ்வொரு பாகங்களையும் அழகுபடுத்தும் புதுப்புது அழகுக்கலைகள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. அந்தவகையில், நெயில் ஆர்ட், நெயில் எக்ஸ்டென்ஷன் எனப்படும் நக அழகு கலையும், செயற்கை நக உருவாக்க கலையும் டீன்-ஏஜ் பெண்களின் பேஷன் உலகில், புதிதாக இணைந்திருக்கிறது.
Read Also: ஆக்கபூர்வமான சிந்தனை ஏன் அவசியமான ஒன்று ?
குறிப்பாக, நெயில் எக்ஸ்டென்ஷன் எனும் செயற்கை நக அழகுக்கலை... டீன்-ஏஜ் பெண்களின் விருப்பமான ஒன்றாக மாறியிருக்கிறது. அந்த புது பேஷன் டிரெண்ட் பற்றிய பல கேள்விகளுடன், நெயில் டெக்னீஷியனான பிரியங்காவிடம் பேசினோம். நக அலங்கார கலையில், பல புதுமைகளை படைத்து வரும் அவர், அந்த கலை பற்றிய பல விஷயங்களை பகிந்து கொள்கிறார்.

நெயில் ஆர்ட், நெயில் எக்ஸ்டென்ஷன் என்றால் என்ன

பொதுவாக நகத்தை அழகுபடுவதுவதும் எல்லோருக்கும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.அதையே, பிரீமியம் லுக்கில் வழங்குவது நெயில் ஆர்ட் கலை. திருமணம் போன்ற விசேஷங்களில், முக அழகுடன் சேர்த்து, நக இல்லாத பெண்களும், சுப நிகழ்ச்சிகளில் நீளமான செயற்கை நகங்களுடன் பங்கேற்க,நெயில் எஸ்ட்டென்ஷன் கலை வழி வகுக்கிறது. இதற்காகவே,பிளாஸ்டிக் மற்றும் அக்ரிகளிக் பொருட்களில், செயற்கை நகங்கள் உருவாக்கப்படுகின்றன. எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்,என்ன நிறத்தில் இருக்க வேண்டும், எத்தகைய ஸ்டைலிலில் இருக்க வேண்டும் என்பது எல்லாம், அவரவர் விருப்பம். அதை நிறைவேற்றி கொடுப்பதுதான், என்னை போன்ற நெயில் எக்ஸ்டென்ஷன் வேலை .

இந்த கலை உங்களுக்கு எப்படி அறிமுகமானது

நான் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருந்தாலும், அழகுக் கலையில் எனக்கு அதீத ஆற்வம் இருந்ததால் அதுபற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் குறிப்குறிப்பாக வெளிநாடுகளில் மிக பிரபலமாக இருக்கும் நெயில் எக்ஸ்டென்ஷன் பற்றி விரிவாக கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். இப்போதுதான் இந்தியாவில் அறிமுகமாகி இருப்பதால், ஆர்டிபிஷியல் நெயில் கிரியேஷன், நெயில் எக்ஸ்டென்ஷன் பற்றி விரிவாக கற்றுக்கொண்டேன். இதற்கு என்னுடைய கணவரும் ஆதரவாக இருந்தார்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை

செயற்கை நக அழகு கலையில் என்னென்ன ஸ்டைல்கள் இருக்கிறது

நிறைய ஸ்டைல் இருக்கிறது. புளோரல் டிசைன் நகங்கள், புதுப்புது நிறங்களில் நகங்கள், போட்டோ பிரிண்ட் நகங்கள், திருமண தம்பதிகளின் பெயர் நகங்கள்... என நிறைய டிரெண்ட் இருக்கிறது. இதில் போட்டோ பிரிண்ட் நகங்கள்தான், திருமண பெண்களால் அதிகம் விருப்பப்படுகிறது.

செயற்கை நகங்கள் உடைந்து விடாதா

இல்லை. இவை உடையாது. செயற்கை நகங்கள் என்றாலும், அவை ஒரு மாத காலம் வரை நன்றாக இருக்கும். அதற்கென தனி பராமரிப்பு முறைகள் உண்டு. அதை பின்பற்றினால்,பத்திரமாக பராமரிக்கலாம்.
நக அழகை மெருகூட்டும் நெயில் எக்ஸ்டென்ஷன் !

நெயில் எக்ஸ்டென்ஷன் பற்றிய புரிதல் டீன்-ஏஜ் பெண்கள் மத்தியில் இருக்கிறதா

அதிகமாகவே இருக்கிறது. அவ்வப்போது டிரெண்டிங்கில் இருக்கும் அழகுக்கலைகளை டீன்-ஏஜ் பெண்கள் முயன்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். அந்தவகையில், நெயில் எக்ஸ்டென்ஷன் கல்லூரி மாணவிகள் தொடங்கி அலுவலகம் செல்லும் பெண்கள் வரை எல்லோரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்

என்னென்ன விசேஷங்களில் இதை விரும்பி செய்கிறார்கள்

திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற விசேஷங்களில் இவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் மணமகள் என்பதை தாண்டி மணமகள் தோழிகள், உறவினர்கள் என அனைவருமே, இந்த அழகுக்கலையை விரும்புகிறார்கள்.

இவை எதிர்காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்குமா

ஆம்..! நிச்சயமாகவே மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். ஏனெனில், நெயில் எக்ஸ்டென்ஷன் என்பது, இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. இதுபோன்ற தேடல் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுப்பதால், இதை முயன்று பார்க்கவும், பயிலவும் நிறைய பெண்கள் ஆசைப்படுவார்கள்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்

இது பெண்களுக்கு, சிறப்பான தொழில் வாய்ப்பாக அமையுமா

ஆம்..! குறைந்த முதலீட்டில், அதிகமான லாபம் தரும் தொழில் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. விசேஷ நாட்களில் மட்டும் வேலை செய்தால் போதும். அதேசமயம், 'பிரஸ் ஆன் நெயில்ஸ்' என்ற ரெடிமேட் செயற்கை நகங்கள் ஆன்லைன் தளங்களில் விற்கப்படுகின்றன. அதையும், நாம் செய்து ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யலாம்.
Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food

நெயில் டெக்னீஷியன் கலையை எத்தனை நாட்களில் கற்றுக் கொள்ளலாம்

கற்றுக்கொடுப்பவர்களை பொறுத்து பயிற்சிகாலம் மாறுபடும். நான் 3 நாட்களிலேயே கற்றுக் கொண்டேன். சிலர், வார கணக்கில் பயில்கிறார்கள். பயிற்சியை விட, அனுபவம்தான் உங்களை சிறந்த நெயில் டெக்னீஷியனாக மாற்றும். நெயில் ஆர்ட் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்ட பிரியங்கா தர்மபுரியை பூர்வீகமாக கொண்டவர். இப்போது கோவையில் செட்டிலாகி இருக்கிறார். என்னவள் இன்ஸ்டா பக்கம் மூலமாக பல கல்லூரி பெண்களுக்கு, நெயில் ஆர்ட் மற்றும் நெயில் டெக்னீஷியன் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook