மகிழ்ச்சியாக வேலை செய்வது எப்படி?ThaenMittai Stories

மகிழ்ச்சியாக வேலை செய்வது எப்படி

ஒவ்வொரு நாளும் நாம் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நாம் விருப்பத்துக்கும் 'இலக்குகளுக்கும் ஏற்றவாறு வேலை செய்கிறோம். என்னதான் மாதச் சம்பளம் என்ற ஒரு விஷயம் இருந்தாலும் சில விஷயங்கள் நம்மை சிறப்பாக வேலை செய்ய தூண்டும். நமது அலுவலக வேலை என்பது சூழ்நிலை , ஆர்வம் ,தேவை என பல விஷயங்களை கொண்டு அமைகின்றனது. ஆனால் இந்த மூன்று காரணங்களுக்காக நீங்கள் வேலை செய்வது சம்பளம், பதவி என்பதைத் தாண்டி உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும். நீங்கள் அலுவலகத்தில் மகிழ்ச்சியாக பணியாற்ற உதவும், 3 முக்கிய யுக்திகள் இவை…

Read Also: சரும அழகை பராமரிக்கணுமா? அப்போ தினமும் இதை பண்ணுங்க !

நீங்கள் கற்றுக்கொள்வது உங்களுக்காக

அலுவலகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை அலுவலக இலக்குகளுக்காக மட்டும் என்று நினைக்காமல் நீங்கள் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் உங்கள் வளச்சிக்காகவும் என்று மிகுந்த ஆர்வதோடும், திறந்த மனதோடும் கற்றுக்கொள்ள முயலுங்கள். நீங்கள் கற்றுக் கொள்வது உங்களுக்காகத்தான். இது உங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். அதிகம் கற்றுக் கொள்ளுங்கள்.

நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்!

நீங்கள் ஒரே வேலையைச் செய்கிறீர்கள். சம்பளம் மட்டும் மாறுகிறது, வேலை அதே வேலை தான் என நினைக்காமல், நீங்கள் செய்யும் வேலைகளை முன்பை விட புதிய யுக்திகள், வேகத்தோடு அணுகுங்கள். அந்த வேலையில் நிபுணத்துவம் பெறுங்கள். நற்பெயர் கிடைத்துவிட்டால் உங்களது பதவி உயர்வு மற்றும், சம்பளம் போன்ற பொதுவான விஷயங்களில் நல்ல மாற்றத்தை காண்பிர்கள்.

Read Also: நீங்க உயரம் குறைந்தவரா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க !உயரமாக தோற்றமளிக்க 'ஸ்டைலிஷ் டிப்ஸ் !

இன்ப்ளுயன்ஸ் செய்யுங்கள்!
மகிழ்ச்சியாக வேலை செய்வது எப்பட
இன்ப்ளுயன்ஸ் செய்யுங்கள்

உங்களது வேலையைத் தாண்டி உங்களது குணத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துங்கள். அருகில் இருப்பவர்களை இன்ப்ளுயன்ஸ் செய்யுங்கள். இது செயல்திறனையும், தனிப்பட்ட முறையில் தலைமைப் பண்பையும் வளர்க்கும். அணியில் சில தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் நீங்கள் சொல்லும் போது அதனை ஏற்றுக் கொள்ளும் சூழலும், நீங்கள் தவறு செய்யும் போது உங்களிடம் தயக்கமின்றி கூறி அதனை திருத்தவும் அணியினருக்கு இந்த செயல்கள் உத்வேகத்தை தரும்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook