சுய முன்னேற்றத்திற்கு வழிகாட்டுபவை
ஒருவர் வாழ்க்கையில் சந்திப்பதற்கும், வாழ்க்கையை மகிழ்ச்சியான முறையில் கட்டமைப்பதற்கும், தன்னை மேம்படுத்திக்கொள்வதற்கும், சுய முன்னேற்றத்திற்கும் முக்கியதுவம் கொடுக்க வேண்டும். அது அவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் அவசியமானது. சுய முன்னேற்றத்திற்கு வழி காட்டும் விஷயங்கள் இவை..
Read Also: வெற்றியை கண்டு அஞ்சாதீர்கள் ! குறுக்கு வழியை தேடாதீர்கள் !
இலக்கு நிர்ணயம்
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் இலக்கு நிர்ணயிப்பது தனிப்பட்ட வளச்சிக்கும், தொழிலுக்கும் நன்மை சேர்க்கும்.தெளிவான, அடையக்கூடிய இலக்குகளை நிணயிப்பது உற்சாகத்துடன் செயல்பட்டு அதனை எட்டுவதற்கான வாய்ப்புகளை எளிமையாக்கும்.
வாசிப்பு பழக்கம்
அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக புத்தகம் வசிக்கும் பழக்கத்தை பின்பற்றுவது அறிவை விசாலப்படுத்தும். படைப்பாற்றல் திறனையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் மேம்படுத்தும். புதிய சிந்தனைகளுக்கு வித்திடும். திறம்பட செயல்படும் ஆற்றலையும் வளர்த்தெடுக்கும். உலகத்தை பற்றிய புரிதலையும் விரிவாக்கும்.
Read Also: உயிர் காக்கும் தாய்ப்பால்
காலை வழக்கம்
அதிகாலையில் எழுந்திருக்கும் வழக்கத்தை தினமும் பின்பற்றுவது அன்றைய நாளை நேர்மறையான சிந்தனையுடன் தொடங்குவதற்கு அடிகோலும். சிந்தனை திறனையும் மேம்படுத்தும். திட்டமிட்டு செயல்படுத்துவதற்கான நேரத்தையும் வழங்கும். தினமும் காலையில் சீக்கிரமாக எழுபவர்களின் மன ஆரோக்யத்திற்கும் சிறப்பாக இருக்கும்.
புதிய விஷயங்கள்
புதிய விஷயங்களை கற்று கொல்வதற்கு ஆற்வம் கட்டுவது மூளையை சுசுறுப்பாக வைத்திருக்க உதவும். வேலை செய்யும் திறனையும் அதிகரிக்க செய்யும். புதிய வாய்ப்புகள் மற்றும் சமூக தொடர்புக்கு வித்திடும்.
புதிய வழக்கம்
நமக்கு பரீசியமில்லாத புதிய வழக்கத்தை பின்பற்றுவதற்கு முயற்சிப்பதும், ஆரோக்கியமான பழக்கங்களை தொடர்வதும் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.நேர மேலைமையை நிர்வகிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
கற்றுக்கொள்ளுதல்
எந்தஒரு சூழலிலும் சாக்கு போக்கு சொல்லும் வழக்கத்தை கைவிட வேண்டும். அதனை தவிர்ப்பது சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளவும், தான் செய்த செயல்களுக்கு பொறுப்பேற்கவும், தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும். சாக்குபோக்கு சொல்லும் பழக்கத்தை முறியடிப்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
தள்ளிப்போதல்
எந்த ஒரு வேலையையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று ஒத்திப்போடுவதற்கு அனுபாதிக்கக்கூடாது.நேர மேலாண்மையை உருவாக்குவாக்குதல், காலக்கெடுவை அமைத்தல் மற்றும் பணிகளை சமாளிக்கக்கூடிய சூழலை உருவாக்குதல் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கி அந்த வேலையை உடனே செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். எந்த வேலையையும் தள்ளிப்போடாமல் சமாளிப்பதற்கு கற்றுக்கொள்வது செயல்திறனை அதிகரிக்கும். மன அழுத்தத்தையும் குறைக்கவும்.
அணுகுமுறை
நீங்கள் உலகத்தை எப்படி உணர்கிறீர்கள் ,எப்படி தொர்பு கொள்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆக பூர்வமான அணுகுமுறையை கையாள வேண்டும். அது நிறைவான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.