அரசு உதவியுடன் .... அழகுகலையில் வேலைவாய்ப்புக்கள்....ThaenMittai Stories

அரசு உதவியுடன் .... அழகுகலையில் வேலைவாய்ப்புக்கள்....

அழகுக்கலை மிகவும் நவீனமாகிவிட்டது. உலக அளவிலான தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் அழகுக்கலையை கூடுதலாக அழகாக்கி உள்ளது. பெரிய நகரங்கள் மட்டுமின்றி சிறுசிறு நகரங்கள், குக்கிராமங்களில் கூட அழகுக் கலையின் அவசியத்தை பெண்கள் உணர்ந்துள்ளனர். இளைஞர்களும் இன்று பிரபல திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் பாணியில் நவ-நாகரிகமாக சிகை அலங்காரம் செய்து கொள்ள விரும்புவதால் அழகு கலையின் மகிமை அனைத்து இடங்களிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. எனவே இத்துறையின் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன” என்று உற்சாகமாக பேச தொடங்குகிறார்,மஹாலட்சுமி கமலக்கண்ணன்.

Read Also: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 - ஏ தேர்வுக்கு, தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
சென்னையை சேர்ந்தவரான இவர் பிரபல நடிகரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான ஐசரி வேலனின் மகள். சர்வதேச அழகுக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர். அழகுக்கலை தகவல்களை திரட்டி, 'மஹாவின் இயற்கையும் அழகும்' என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அகில இந்திய சிகை மற்றும் அழகுக்கலை சங்கம் (ஏ.ஐ.எச்.பி.ஏ.) மஹாலட்சுமிக்கு விருது வழங்கியும் கவுரவித்துள்ளது.

அழகுக்கலைத்துறையில் 35 ஆண்டுகளாக பல்வேறு புதுமைகளை படைத்து வரும் இவர் இந்தியா மட்டுமின்றி பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில், அட்வான்ஸ்ட் அழகுக்கலையை பயின்று வந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அழகுக்கலைக்கான சர்வதேச அகாடமியை சென்னையில் நடத்தி வருகிறார்.

Read Also: நீங்க உயரம் குறைந்தவரா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க !உயரமாக தோற்றமளிக்க 'ஸ்டைலிஷ் டிப்ஸ் !
இவரது மஹா இன்டர்நேஷனல் அழகுக்கலை அகாடமியில் அழகுக்கலை பயின்றவர்கள் ஏராளம். அவர்கள் இவரது வழிகாட்டுதலின்படி, சர்வதேச அழகு நிலையங்களில் முன்னணி அழகுக்கலை நிபுணர்களாக மிளிர்கிறார்கள்.

Read Also: சரும அழகை பராமரிக்கணுமா? அப்போ தினமும் இதை பண்ணுங்க !
“அழகுக் கலை என்பது தொழில் வாய்ப்புகள் நிறைந்த கலை. இதை தேர்வு செய்வதன் மூலம், உலக தரம் வாய்ந்த அழகு நிலையங்களில் பணியாற்றலாம். சுயதொழில் முனைவோராகவும் ஆகலாம். இதை உணர்ந்துதான், கடந்த 30 ஆண்டுகளாக அழகுக்கலை பயிற்சிகளை வழங்கி வருகிறேன்” என்றவர், கடந்த ஓராண்டாக தாட்கோவுடன் இணைந்து முன்னெடுத்து வரும் புரட்சிக்கர தொழில்பயிற்சிதிட்டம் குறித்து பேசினார்.

“தமிழ்நாடு அரசு நிறுவனமான தாட்கோவும், என்னுடைய மஹா இன்டர்நேஷனல் அழகுக்கலை அகாடமியும் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான இலவச அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார பயிற்சியை கடந்த ஓராண்டாக அளித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் தாட்கோ நிறுவனம் இதற்கு முன்பு, நமது மாநிலத்தின் எந்தவொரு அழகுக்கலை பயிற்சி மையத்துடனும் கைக்கோர்த்தது இல்லை. இந்நிலைடாக தாட்கோவுடன் இணைந்து முன்னெடுத்து வரும் புரட்சிக்கர தொழில்பயிற்சி திட்டம் குறித்து பேசினார்.

Read Also: காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியவை !
“தமிழ்நாடு அரசு நிறுவனமான தாட்கோவும், என்னுடைய மஹா இன்டர்நேஷனல் அழகுக்கலை அகாடமியும் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான இலவச அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார பயிற்சியை கடந்த ஓராண்டாக அளித்து வருகிறது.

Read Also: நக அழகை மெருகூட்டும் நெயில் எக்ஸ்டென்ஷன் !
அரசு உதவியுடன் .... அழகுகலையில் வேலைவாய்ப்புக்கள்.
தமிழ்நாடு அரசின் தாட்கோ நிறுவனம் இதற்கு முன்பு, நமது மாநிலத்தின் எந்தவொரு அழகுக்கலை பயிற்சி மையத்துடனும் கைக்கோர்த்தது இல்லை. இந்நிலையில் தாட்கோ நிறுவனம் எங்களுடன் கைக்கோர்த்து, அழகுக்கலை பயிற்சிகளை வழங்கியது, எங்களுக்கு கிடைத்த பெருமை. இந்த வாய்ப்பினை வழங்கிய பெருமைகள் அனைத்தும் தாட்கோ மேலாண்மை இயக்குனர் க.சு.கந்தசாமி ஐ.ஏ.எஸ்-ஐ சேரும்.

இந்த சிறப்பு திட்டத்தின் வாயிலாக, இது வரை 200 மாணவிகள் அழகுக்கலை பயிற்சிகளை முடித்து வெற்றிகரமான தொழில்முனைவோராக முன்னேறி உள்ளனர்.

இந்த அழகுக்கலை பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவ-மாணவிகள். மாதச்சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெற முடியும். மேலும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரத் தொழில்களையும், சுயமாக தொடங்க முடியும். இதற்கு, தாட்கோ நிறுவனம், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கூடிய 10 லட்சம் ரூபாய் கடன் உதவியும் வழங்குகிறது" என்றவர், தாட்கோவுடன் இணைந்து பணியாற்றுவது, மனநிறைவை கொடுப்பதாக கூறினார்.

Read Also: அடுத்து என்ன படிக்கலாம் ? எதிர்காலத்தை தீர்மானிக்கும் படிப்புகள் !
.“அழகுக்கலையின் மூலமாக, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய, தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதை, மனநிறைவான வேலையாக கருதுகிறேன். ஏனெனில், எல்லோரும் சொந்தமாக தொழில் தொடங்கி, சொந்த காலில்நிற்பது என்பது முடியாத காரியம். அந்த கடினமான வேலையைதான், நானும் என்னுடைய அகாடமியும் சுலபமாக்கி கொடுக்கிறோம்” என்று மகிழ்ச்சியுடன் பேசும் மஹாலட்சுமி, வருங்காலத்தில் தன்னுடைய அகாடமியின் மூலமாக, பல்லாயிரக்கணக்கான அழகுக்கலை நிபுணர்களை உருவாக்க இருக்கிறார். இந்த திட்டத்தில் யார் இணையலாம், எப்படி இணையலாம், எவ்வளவு கால பயிற்சி இது... என்பதுபோன்ற தகவல்களை மஹாலட்சுமி பகிர்ந்து கொள்கிறார்.

"10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்,இதில் இணைந்து பயிற்சி பெறலாம். இதன் பயிற்சி காலம், 45 நாட்கள். ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின மாணவ, மாணவிககளுக்கு இந்த பயிற்சியும், தங்குமிடமும், உணவும் முற்றிலும் இலவசம். இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதள LDIT 60T www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம்.

Read Also: கல்லூரிக்காலத்திலேயே வாழ்க்கையை திட்டமிடுங்கள்
தியரி, செய்முறை பயிற்சி, அழகுக்கலை நிலையங்களில் நேரடி பயிற்சி... என ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பாடம் கற்பிக்கப்படும். அழகுக்கலை நிபுணர், சிகை அலங்கார வல்லுநர், ஒப்பனைக் கலைஞர், வரவேற்பாளர், அழகு நிலைய மேலாளர், அழகு சாதன பொருட்கள் விற்பனையாளர், கூந்தல் மற்றும் தோல் பராமரிப்பு பயிற்சியாளர் என ஒரே பாடத்திட்டத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகளை பெறமுடியும்.

Read Also: ஆனந்த் அம்பானியின் திருமணமும் , சில சுவாரஸ்யங்களும்..!
பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த அழகுக் கலை பயிற்சிகளை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணி வாய்ப்பு பெறமுடியும்.

Read Also: நகை வடிவமைப்பு படிப்பும் ,வழிகாட்டுதலும்
அழகுக்கலை என்பது தொழில்வாய்ப்புகள் நிறைந்த கலை. இதை தேர்வு செய்வதன் மூலம், உலக தரம் வாய்ந்த அழகு நிலையங்களில் பணியாற்றலாம். சுயதொழில் முனைவோராகவும் ஆகலாம்.

Read Also: கல்வி, கலைகளில் கலக்கும் இளம் நாயகி !
ஏன்..? வெளிநாட்டு அழகு நிலையங்களில் கூட பணியாற்றலாம்" என்றவர், அழகுக்கலை மீதான ஆர்வம் கொண்டவர் களுக்கு பிரத்யேகஅழகுக்கலை பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்.

"அழகுக்கலை என்பது எல்லோருக்குமான துறை. எல்லோரும் ஆர்வமாக கற்றுக்கொள்ளக் ' கூடிய கலை. புதுப்புது டிரெண்டிற்கு ஏற்ப, தன்னை தானே புதுப்பிக்கும் கலை. இதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், எப்போதும் 'அப்டேட்டாக' இருங்கள். நீங்கள் 'அப்டேட்டாக' ஆக இல்லையென்றால் 'அவுட்டேட்டாக ஆகிவிடுவீர்கள். அதாவது, தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உங்களை புதுப்பித்துக் கொண்டே இருங்கள், இல்லையென்றால் அழகுக்கலை மட்டுமல்ல, எந்த துறையிலும் உங்களால் தாக்குபிடிக்க முடியாது, நிலைத்திருக்க முடியாது” என்ற 'அட்வைஸுடன், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க புறப்பட்டு சென்றார்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook