மழைகாலத்தில் ட்ரிப் போறிங்களா ? இதை தெரிஞ்சிட்டு போங்க! | ThaenMittai Stories

மழைகாலத்தில் ட்ரிப் போறிங்களா ? இதை தெரிஞ்சிட்டு போங்க !

மழைக்காலத்திற்கு ஏற்ப பயண திட்டங்கள் !

மழைக்காலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது சுற்றுலாப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக அமையும். ஏனெனில் மற்ற சமயங்களை விட இயற்கையை அதன் கண்ணோட்டத்திலேயே முழுமையாக ரசிக்க முடியும். கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் பசுமை நிலப்பரப்புகளை காண்பது. கலாச்சாரத்துடன் தொடர்புடைய பாரம்பரிய விழாக்கள் நடைபெறுவது. குறைவான மக்கள் கூட்டம் என மழைக்கால பயணம் மறக்கமுடியாததாகவும் ,சுவாரஸ்யமாகவும் அமையும். அதனை தக்க வைப்பதற்கு சில திட்டமிடுதல்களை மேற்கொள்வது அவசியமானது

இடத்தேர்வு

இந்தியாவில் உள்ள சில இடங்கள் பருவ மலையின் போது சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு உகந்தவை. கோவா மற்றும் கேரளா போன்ற கடலோர பகுதிகள் கனமழைக்கு பெயர் பெற்றிருந்தாலும்,பருவ மழையின் போது பார்வையிடுவதற்கு ஏற்ற பசுமையான காட்சிகளை வழங்கும்.

Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food
மூணாறு ,கூர்க் போன்ற மலைவாசத்தலங்கள் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிளிரும். இந்த சமயத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் நிதானமாக, சுதந்திரமாக இயற்கையின் அழகியலை ரசிக்க முடியும்.

தேர்வு செய்தல்

பருவமழைக்கு ஏற்றவாறு ஆடைத்தேர்வும், பொருட்கள் தேர்வும் அமைவது அவசியமானது. மலையில் நனைய நேர்ந்தால் அணியும் ஆடைகள் விரைவாக உலரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஆடைகள் அதிக எடை கொண்டதாகவோ, அலங்கார வேலைப்பாடுகளுடன் பெரியதாகவோ இருக்க கூடாது. அவை பேக்கில் அதிக இடத்தை பிடித்து கொள்ளும்.

Read Also: தூக்கத்தை தவிர்க்கும் உயிரினங்கள்
மழைகாலத்தில் ட்ரிப் போறிங்களா ? இதை தெரிஞ்சிட்டு போங்க
குடை மற்றும் ரயின்கோட் எடுத்துச்செல்ல மறக்க கூடாது. கால்களை உலர்வாகவும்,சவுகரியமாகவும் வைத்திருக்க நீரிப்புகா காலணிகள் அணிவது அவசியம். செல்போன், கேமரா, டேப்லெட், போன்ற எலெக்ட்ரோனிக் பொருட்களை பாதுகாப்பதற்கு கூடுதல் பிளாஸ்டிக் பைகளை உடன் வைத்திருப்பது நல்லது.

வானிலை

பருவமழைக்காலத்தில் வானிலை கணிக்க முடியாததாக இருக்கும். அதனால் வானிலை முன்னறிவிப்பு மீதும் கவனம் கொள்ள வேண்டும். அந்த பகுதியில் நிலவும் வானிலை குறித்து இணைய தளங்கள் மூலமாகவோ உள்ளூர் நிர்வாகம் மூலமோ அறிந்து கொள்வது வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க உதவும். தொடந்து வானிலையை கண்காணித்து வருவது எத்தகைய காலநிலை மாற்றத்தையும் எதிர்கொள்ள தயாராகுவதற்கு வழிவகை செய்யும்.

Read Also: வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்-

மாற்றுத்திட்டம்

பருவ மழைக்காலத்தின்போது சுற்றுப்பயணம் மேற்கொள்வது உடலையும், மனதையும், குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் உணர வைக்கும். என்றாலும் வானிலை முன்னறிவைப்பையும் மீறி எதிர்பாராமல் கண மழை பொழிய நேர்ந்தால் வெளியிடங்களுக்கு சென்று இயற்கை அழகை ரசிக்க முடியாது.

அந்த சமயங்களில் அருங்காட்சியங்களை பார்வையிடுவது, ஷாப்பிங் மால்களுக்கு செல்வது, அங்கு ரசிக்கப்படும் பாரம்பரிய உணவுகளை சுவைப்பது என பயணத்தை ரசனைக்குரியதாக மாற்றுவதற்கான மாற்று திட்டமிடலை முன்கூட்டியே மேற்கொள்வது சிறந்தது.

Read Also: கவனச்சிதறலை தடுக்கும் வழிகள்

பாதுகாப்பிற்கு முன்னுரிமை

மழைக்காலத்தில் பயணம் செய்யும்போது உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கிருமி நாசினிகள், கொசு விரட்டிகள் , தலைவலி, சளி,இருமல், காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை உள்ளடக்கிய மருந்து பெட்டி, முதலுதவி பெட்டி உள்ளிட்டவற்றை உடன் எடுத்து செல்ல வேண்டும். நீரினால் பரவும் நோய்களைத் தவிர்க்க சுத்திகரிக்கப்பட்ட ,காய்ச்சப்பட்ட தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook