கல்வி, கலைகளில் கலக்கும் இளம் நாயகி ! ThaenMittai Stories

கல்வி, கலைகளில் கலக்கும் இளம் நாயகி !

இளமையில் கல் என்பது முதுமொழி. அதற்கேற்ப திண்டுக்கல் ஏர்போர்ட் நகரை சேர்ந்த ஏ.கே.தன்மயா, பல மொழிகளை கற்பதையே முழுமூச்சாக கொண்டுள்ளார். 9-ம் வகுப்பு பயிலும் தன்மயா, கல்வி, விளையாட்டு, யோகா, ஆன்லைனில் பயிற்சி அளித்தல் என பல துறைகளில் சாதனை படைக்கும் வித்தகியாக திகழ்கிறார்.
Read Also: கவனச்சிதறலை தடுக்கும் வழிகள்
தாய் மொழி தமிழில் குயிலாக குரலெடுக்கும் தன்மயா,ஆன்லைனில் பல மொழிகளை கற்றுத்தேர்ந்துள்ளார்.அதன்மூலம் பதக்கங்கள், கேடயங்கள், பாராட்டு சான்றிதழ்களை குவித்துள்ளார். விளையாட்டு, கல்வி என எதிலும் புதுமை படைக்கும் தன்மயாவை சந்தித்து உரையாடினோம்.

எந்தெந்த விளையாட்டுகளில் பதக்கம் வென்றுள்ளீர்கள்?

பெண் குழந்தையாக இருந்தாலும் ஏதாவது ஒரு விளையாட்டில் இடம்பிடித்திருக்க வேண்டும் என்று பெற்றோர் கூறுவார்கள். அதன்படி, எனது 4 வயதிலேயே பேட்மிண்டன் பயிற்சியில் சேர்த்து விட்டனர். குழந்தையாக இருந்தாலும் பேட்மிண்டன் ஆர்வமுடன் விளையாடியதால், பெரிய நகரங்களில்அதிகமாக விளையாடும் டேபிள் டென்னிசிலும் சேர்த்துவிட்டனர். பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் என ஒரே நேரத்தில் இருவிளையாட்டுகளிலும் கவனம் செலுத்துகிறேன். தினமும் 2 மணி நேரம் பயிற்சி பெறுகிறேன். இதனால்டேபிள் டென்னிசில் மாநில அளவில் 10 பதக்கங்களும், பேட்மிண்டன் போட்டியில் 9 பதக்கங்களும் வென்று இருக்கிறேன். தேசிய அளவில் பதக்கம் வெல்வதில் குறியாக இருக்கிறேன். அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
Read Also: 20 வயதை கடந்து விட்டீர்களா! அப்போ முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!

யோகா கற்று கொண்டது குறித்து கூறுங்கள்?

நான் படித்த பள்ளியில் விளையாட்டு, யோகா உள்ளிட்டவை இருந்தன. எனவே 3 வயதில் யோகாவில் சேர்ந்தேன். அந்த வயதில் நான் உடலை வளைத்து யோகா செய்வதை பார்த்த யோகா ஆசிரியை எனக்கு தனியாக பயிற்சி அளித்தார். மேலும் பள்ளியில் நடந்த போட்டியில் 5 ஆசனங்களை செய்வதற்கு பதிலாக நான் ஆர்வத்தில் 10 ஆசனங்களை செய்தேன். இதனால் என்னை போட்டிகளில் பங்கேற்க வைத்தனர். அதற்காக பல பயிற்சிகளை அளித்தனர். நானும் மிகவும் ஆர்வமாக கற்றுக் கொண்டேன். இதையடுத்து மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றேன். தேசிய அளவில் 3 முறையும், சர்வ தேச அளவில் 2 முறையும் பதக்கம் பெற்றுள்ளேன். மாவட்ட, மாநில அளவில் பல முறை பதக்கம் வென்றுள்ளேன்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குழந்தைகளுக்கு யோகா கற்றுக் கொடுப்பது குறித்து கூறுங்கள்?

யோக போட்டிகளில் பதக்கங்களை பெற்றதால், அதை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக ஆன்லைனில் இளம் வயதினருக்கு யோகா கற்றுக் கொடுக்கும் பயிற்சியை முடித்தேன். இதைத் தொடர்ந்து வார விடுமுறை நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்திய குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளித்து வருகிறேன். இதற்காக குழந்தைகளுக்கு குழந்தைகளுக்கு காமெடி தன்னம்பிக்கை, கதைகளை கூறி சகஜ' நிலைக்கு கொண்டு" வந்து பின்னர் யோகாபயிற்சி அளிப்பேன். என்னை பார்த்து குழந்தைகள் யோகா செய்வார்கள். கடந்த சில மாதங்களாக குழந்தைகளின் பெற்றோரும் யோகா கற்றுக்கொள்ள வருகின்றனர்.
Read Also:வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதையும் ஈர்க்கவும் & பெறவும் இது உங்களுக்கு உதவும்

நீங்கள் பயிற்சி அளிக்கும் அனைவரும் வெளிநாடு வாழ் தமிழர்களா?

தமிழர்கள் மட்டுமின்றி வடமாநிலங்களை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்களில் பலர் வெளி நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். நான் ஆங்கிலத்தில் தான் அவர்களுக்கு எடுக்கிறேன்.

அமெரிக்காவில் பேசுவது போன்ற உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுவீர்களா?

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளிலும் பேசும் ஆங்கிலத்தை, அதே உச்சரிப்புடன் பேசுவேன். அதுமட்டுமின்றி ஜப்பானிஸ், ஸ்பேனிஸ், பிரெஞ்ச்,ஜெர்மனி, போர்ச்சுக்கீஸ் ஆகிய மொழிகளிலும் பேசுவேன்.

இத்தனை மொழிகளை எவ்வாறு கற்று கொண்டீர்கள்?

கொரோனா காலத்தில் ஆன்லைனில் வகுப்பு நடந்தது. இதனால் நிறைய நேரம் கிடைத்தது. அதை பொழுதுபோக்குக்கு பயன்படுத்தாமல் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதையடுத்து ஆன்லைனில் பிற மொழிகளை கற்றுக்கொள்ள தொடங்கினேன். இதற்காக ஆன்லைனில் நடத்தும் தேர்வுகளை எழுதி சான்றிதழ் வாங்கி இருக்கிறேன். இன்னும் பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.
கல்வி, கலைகளில் கலக்கும்  இளம் நாயகி !

கல்லூரி மாணவிகளுக்கு நீங்கள் ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கிறீர்களாமே?

தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் பேசுவது குறித்து வகுப்பு எடுக்க அழைத்தனர். அதன் பேரில் கல்லூரி மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் பேசுவது குறித்து அவ்வப்போது சென்று பயிற்சி அளிக்கிறேன். ஆங்கிலத்தில் பேசுவதற்கு இருக்கும் தடைகள், பேசும் யுக்திகள், உச்சரிப்பு குறித்து கூறுவேன். மேலும் அவர்களின் தயக்கத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப பேசுவேன். ஆங்கில வார்த்தை உச்சரிப்பை விளக்குவேன். 'இந்த சின்னபொண்ணு நன்றாக பேசுகிறாளே, நாம் ஏன் பேசக்கூடாது' என்று அவர்களும் ஆர்வமுடன் ஆங்கிலத்தில் பேச கற்றுக் கொள்கின்றனர்.
Read Also: ஏன் புத்தகங்கள் படிக்க வேண்டும்? அதனால் என்ன மாற்றம் நமக்கு கிடைக்கின்றது ?

பல மொழிகளை கற்று கொள்ள வேண்டுமா?

ஆங்கிலம் உள்பட எந்த மொழியாக இருந்தாலும், ஒரு தகவல் தொடர்பு கருவியே. அது அறிவு அல்ல. அதேநேரம் வேலைவாய்ப்புகள் பெருகி கிடக்கின்றன. அத்தகைய வேலைவாய்ப்புகளை பெற்றால் மட்டுமே நாம் உச்சத்தை அடைய முடியும். உலக அளவில் அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. எனவே ஆங்கிலத்தை சரியாக கற்றுக்கொள்ளவேண்டும். அதோடு நமது இந்திய மொழிகள் மற்றும் பிறவெளிநாட்டு மொழிகளையும் கற்றுக்கொள்வது வேலைவாய்ப்பை எளிதாக்கும்.

பிற மொழிகளை கற்றுகொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஒரு நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள, அந்த நாட்டின் கலாசாரத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதோடு மொழியின் தன்மை, உச்சரிப்பை புரிந்து கொள்ள வேண்டும். அதன்மூலம் மொழிகளை எளிதாக கற்று கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஆங்கிலம் உள்பட எந்த மொழியாக இருந்தாலும், முதலில் நம்மால் பேச முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். அடுத்தவர்கள் கேலி பேசுவார்கள் என்று தயங்காமல், தவறாக இருந்தாலும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். நாம் புதிய மொழியை கற்க தொடங்கியதும் சிலர் வெறுப்பேற்றி நம்மை முடக்க நினைப்பார்கள். எனவே பிறரின் கேலி, கிண்டல், வெறுப்பேற்றும் செயலை கண்டு கொள்ள கூடாது. ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் பேசும் நபர்கள், பேச ஆர்வமுள்ள நபர்களிடம் பேச வேண்டும். நாம் பார்க்கும் வீடியோ, நாடகம், பாடல், கதைகள் என அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். முக்கியமான விஷயம் ஒவ்வாரு எழுத்தின் ஒலியின் வித்தியாசத்தையும் புரிந்து கொண்டால் பிற மொழிகளை கற்பது மிகவும் எளிது. ஜாலியாக கற்க வேண்டுமே தவிர கஷ்டப்பட்டு கற்க கூடாது.
Read Also: இளைஞர்களின் வளர்ச்சி படிக்கட்டுகளுக்கான வழிமுறைகள் !

எதிர்கால லட்சியம் என்ன?

யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி ஐ.எப்.எஸ். அதிகாரியாகி வெளிநாட்டு தூதராக பணியாற்ற வேண்டும் என்பதே எனது லட்சியம். இதன்மூலம் வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் பிற நாடுகளின் வளர்ச்சி, வசதிகள், மக்களின் வாழ்வாதாரம், மொழியை அறிந்து கொள்ள முடியும். நமது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் சேவையாற்ற வேண்டும் என்பது விருப்பமாகும்.
இவ்வாறு உற்சாகமாக முடித்தார், வித்தகி தன்மயா.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook