சிறந்த தந்தைக்கான 8 குணங்கள் !ThaenMittai Stories

சிறந்த தந்தைக்கான 8 குணங்கள்

குடும்பத்தை பொறுப்பாக வழி நடத்தும் தலைமை பண்பு கொண்டவராகவும், தங்களுடைய ரோல் மாடலாகவும், ஒவ்வொரு பிள்ளைகளும் தந்தையை பார்க்கிறார்கள். குழந்தைகளை வழிநடத்தும் விஷயத்தில் சிறப்பான தந்தையாக விளங்க பின்பற்றவேண்டிய அடிப்படை குணங்கள் இவை

நிபந்தனை இல்லாத அன்பு

தந்தை தன பிள்ளைகளிடம் காண்பிக்கும் அன்பும் , பாசமும் உணவுபூர்வமாக இருக்க வேண்டும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாததாகவும், நிபந்தனையற்றதாகவும் இருக்க வேண்டும். பிள்ளைகள் மீது எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு புரியும்படி அமைய வேண்டும். பிள்ளைகள் பாதுகாப்பாக,சுதந்திரமாக வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும். பிள்ளைகள் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் மனப்பூர்வமாகி பாராட்ட வேண்டும். இவை சிறந்த தந்தைக்கான அடையாளங்களாக அமையும்.
Read Also: ஆக்கபூர்வமான சிந்தனை ஏன் அவசியமான ஒன்று?

பொறுமை

ஒவ்வொரு தந்தைக்கும் நிச்சயம் இருக்க வேண்டிய குணம் பொறுமை. குழந்தைகளை வளர்ப்பதற்கு பொறுமை மிக அவசியம். அவர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கு சற்றென்று கோபத்தை வெளிப்படுத்தி விட கூடாது. அது தந்தை மீதான அவர்களின் அணுகுமுறையில் மற்றதை ஏற்படுத்தி விடும்.தந்தையிடம் பேசுவதற்கு பயமும், அட்ச உணர்வும் மேலோங்கக் கூடும். அதற்க்கு இடம் கொடுத்து விட கூடாது. குழந்தை வளர்ப்பில் உள்ள சிரமங்கள் பற்றியும் அதனை எதிர்கொள்வதற்குள்ள முறைகளை பற்றியும் தெரிந்து தன்னை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்க்கு பொறுமை மிக வசியம்.

ஊக்கம்

ஒரு சிறந்த தந்தையான தகுதி அவரின் பிள்ளைகளின் செயல்பாடுகளை ஒவ்வொரு முறையும் நேரடியாக கண்காணித்து தொடர்ந்து ஊக்கம் அளித்து கொண்டே இருப்பது. படிப்பிலோ, விளையாட்டிலோ சிறந்து விளங்கும் போது வாழ்த்து கூறி உற்சாக படுத்த வேண்டும். உடனுக்குடன் பரிசுப்பொருட்கள் வாங்கி கொடுத்து பாராட்ட வேண்டும். ஒரு வேளை பிள்ளைகள் தோல்வியை தழுவினால் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தி வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அடுத்த செயலை தொடங்குவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

நம்பகத்தன்மை

நெருக்கடியான சூழலோ, மகிழ்ச்சியான தருணமோ எத்தகைய நிலையிலும் தந்தை தனக்கு பக்க பலமாக இருப்பார் என்ற நம்பகத்தன்மையை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும். அதற்கேற்ப தந்தையின் செயல்பாடு அமைந்திருக்க வேண்டும். குழந்தையின் தேவை அறிந்து தக்க சமயத்தில் அதனை நிறைவேற்றி கொடுக்கும் நபராகவும் விளங்க வேண்டும். அது தந்தையின் மீது பிள்ளைகள் வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகரிகச் செய்யும்.
சிறந்த தந்தைக்கான 8 குணங்கள்

முன்மாதிரி

தந்தையானவர் தன் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும். நேர்மையுடன் செயல்பட வேண்டும்.இரக்க குணம் படைத்தரவாகவும்,பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும். அதனை பார்த்து பிள்ளைகளும் நல்ல குணாதிசயம் கொண்டவர்களாக வளர்வார்கள்.
Read Also: அதிகம் - குறைவான சர்க்கரை அளவு கொண்ட பழங்கள்

கேட்கும் திறன்

சிறந்த தந்தைக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணாதிசயங்களில் ஒன்று பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேட்பது. குழந்தைகளின் மன நிலைக்கு சென்று அவர்களுடைய மனநிலை , உணர்வு,யோசனை, சிந்தனை போன்றவற்றை புரிந்து அந்த நிலைக்கு ஏற்ப அவர்களிடம் அணுக வேண்டும். எந்த மாதிரி நேரங்களில் எந்த மன நிலையில் இருக்கின்றனர் என்பதை தெரிந்து அவர்களிடம் பேசினால் நல்லது.அவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்து ஆதரவு அளிக்க வேண்டும்.

பங்கேற்பு

குழந்தைகளுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவரே சிறந்த தந்தியாக இருக்க முடியும். பள்ளிகளில் குழந்தைகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுவது, பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பில் தவறாமல் கலந்து கொள்வது என பிள்ளைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அது தந்தையுடனான பந்தத்தை வலுப்படுத்தும்.
Read Also: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய பழக்கவழக்கங்கள் 5

ஒழுக்கம்

சிறந்த தந்தை ஒழுக்கத்தை கடைபிடிப்பவராக இருக்க வேண்டும். அவரின் நடத்தையிலும்,செயலிலும் அது வெளிப்பட வேண்டும். தந்தையை பார்த்தே பிள்ளைகள் வெளியுலக வாழ்க்கையை கற்றுக்கொள்கிறார்கள் என்பதால் பிள்ளைகளின் முன்பு கவனமாக வெளியுலக நடவெடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook