முன்னோர்கள் பயன்படுத்திய முத்தான அரிசிகள் | ThaenMittai Stories

முன்னோர்கள் பயன்படுத்திய முத்தான அரிசிகள்

நம் முன்னோர்கள் வாழ்ந்த நோயற்ற வாழ்வுக்கும், நீண்ட ஆயுளுக்கும் அவர்கள் பின்பற்றிய பாரம்பரிய வழக்கவழக்கங்களே காரணம் . அவர்கள் விளைவித்து உட்கொண்ட அரிசி வகைகளும் ஆரோக்கியத்தை பாதுகாத்ததில் முக்கிய பங்கு வகித்தன.அவற்றுள் சிலமுக்கியமான அரிசி வகைகள் உங்கள் பார்வைக்கு....
Read Also: குழந்தைகளின் வளர்ச்சியும் பெற்றோரின் பங்கும்

கருப்பு கவுனி அரிசி

நார்ச்சத்து அதிகம் கொண்ட இது செரிமான செயல்பாடுகளை எளிமைப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.உடல் பருமனை தடுக்க உதவும்.type - 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கும்.புற்றுநோயை தடுக்கும்.இதய நோயயை நெருங்க விடாது. இதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் ஈ , சருமம் கண் மற்றும் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.

மாப்பிளை சம்பா

குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.இதில் வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.நரம்பு மண்டலத்தையும் ,தசைகளையும் பலப்படுத்த துணை புரியும்.உடல் ஆற்றலை அதிகரிக்கை செய்யும்.நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.ஹீமோகுளோபின் அளவையும் அளவையும் அதிகப்படுத்தும்.
Read Also: அவமானமும்.. ஐ.ஏ.எஸ். முயற்சியும் / அவமானத்தால் கிடைத்த IAS பயிற்சி
முன்னோர்கள் பயன்படுத்திய முத்தான அரிசிகள்

மூங்கில் அரிசி

அரிசி மற்றும் கோதுமை இவை இரண்டையும் விட அதிகம் புரதம் கொண்டது.மூட்டுவலி, முழங்கால் வலி,மற்றும் வாத வழியை கட்டுப்படுத்தும்.கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். நீரிழிவு நோயை நெருங்க விடாது.
Read Also: பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமன இடங்கள்

இலுப்பை சம்பா

ஹீமோகுளாபின் அளவை அதிகரிக்கும் சுவாசத்திறனை மேம்படுத்தும். பக்கவாதம்,கால் வலி,தோல் நோய்களுக்கு அருமருந்தாக செயல்படும். vaadha நோய் ,மூட்டு வலிக்கு நிவாரணமளிக்கும்.உடல் எடையை குறைக்க உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

கருங்குருவை

எது அதிக இரும்புசத்து கொண்டது. உடலில் உள்ள அனைத்து அசுத்தங்களையும்,நட்சுக்களையும் அகற்ற உதவும். தோல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக செயல்படும்.மூட்டுவலியை போக்கும்.வாந்தி,மலச்சிக்கல்,செரிமானம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும்.
Read Also: வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

சீராக சம்பா

சீராக சம்பா அரிசியில் செலினியம் உள்ளது.எது குடன் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தில் ஐஐந்து பாதுகாக்கும். இதய அமைப்பை வலுப்படுத்த உதவும். மலச்சிக்கலை தடுக்கும். செரிமான செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.நோய் எதிர்ப்பு சக்தியை கூடும்.சரும நலன் காக்கும்.

குடவாழை அரிசி

கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தில் இந்த அரிசி முக்கிய பங்கு வகிக்க கூடியது. சுக பிரசவத்திற்கு உதவும். குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.குடலை சுத்தப்படுத்தவும் செய்யவும்.

கிச்சிலி சம்பா

எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது.நீரிழிவு நோயாளிகள் இந்த வகை அரிசியை உட்கொள்வது நல்லது.ஏனெனில் இதன் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு மிகவும் குறைவு(50 ). இது உடல் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவும்.சருமத்தை பளபளப்பாக ஜொலிக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு நோய்களில் இருந்துகாக்கும்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்

பூங்கார் அரிசி

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகளுக்கு பொங்கற் அரசி அற்புதமான மருந்து. இந்த அரிசியில் உள்ள அந்தோசயனின் உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்ற உதவும்.கர்ப்பிணி பெண்ணுக்கு தேவையான சத்துக்கள் இந்த அரிசியில் நிறைந்துள்ளது.சுகப்பிரசவத்துக்கு உதவி புரியும்.தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். உடலுக்கு ஆற்றலை அளிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும்.இதய நோய் அபாயங்களை குறைக்கும்.உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும். வயிறு சார்ந்த பிரச்சனைகளை போக்கும் இது 'பெண்களில் அரிசி "என்றும் அழைக்கப்படுகின்றது.

தூயமல்லி

இந்த வகை அரிசி நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.உள் உறுப்புகளை வலுப்படுத்த உதவும். ஒட்டுமொத்த நரம்புகளையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க துணைபுரியும்.நீரிழிவு நோயை தடுக்கும்.தோல் சுருக்கங்கள் இல்லாமல் சரும நலன் காக்கும்.சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு

காட்டுயானம்

செரிமான அமைப்பை மேம்படுத்தும்.நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும். குடல் இயக்கத்தை சீராக்கும்.கல்லிரல் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கும்.பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுக்கும். ரத்த சோகையும் தடுக்கும்.மும்மை பருவத்தை எட்டுவதை தாமதப்படுத்தி சருமத்தை பொலிவாக்கும்.சோரியாசிஸ் மற்றும் தோல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.நீரிழிவு நோய்க்கு எதிரியாக செயல்படுத்தும்.மலச்சிக்கலை போக்கும்.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook