மனைவியிடம் சொல்லக்கூடாத வார்த்தைகள்
திருமண வாழ்க்கை இனிமையாக அமைவதற்கு கணவன் - மனைவி இருவரிடையே ஆழ்ந்த புரிதல் வேண்டும். திருமணமான சில மாதங்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். எதிர்மறை கருத்துக்கள் வெளிப்படும்போது பொறுமையாக பேசி தன் தரப்பு நியாயத்தை புரிய வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சரிக்கும் வார்த்தை, வாக்குவாதத்தை ஏற்படுத்தி உறவுக்குள் விரிசலை அதிகப்படுத்திவிடும். இருவருக்குமிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும்போதோ, எந்தவொரு சூழ்நிலையிலுமோ மனைவியிடம் பேசக்கூடாத வார்த்தைகள் இருக்கின்றன. அவை உறவையும், திருமண பந்தத்தையும் சிதைத்துவிடும்.
Read Also: குழந்தைகளின் வளர்ச்சியும் பெற்றோரின் பங்கும்'உன்னை மணந்ததற்கு வருந்துகிறேன்'
திருமணம் செய்தது பற்றி பேசுவது, அதிலும் மனைவியிடம்,'அவசரப்பட்டு உன்னை திருமணம் செய்தது தவறு என்று கூறுவது அவரது மனதை புண்படுத்திவிடும். இருவருக்குமிடையேயான அன்பின் அடித்தளத்தை உடைத்தெறிந்துவிடும். துணை மீதான நம்பிக்கையையும் பாழ்படுத்திவிடும். இருவருக்குமிடையேயான அன்னியோனியத்தை சீர்குலைத்துவிடும்.ஒருபோதும் அத்தகைய வார்த்தையை பயன்படுத்தக்கூடாது.கடுமையான வாக்குவாதம் ஏற்படும் சூழலில் யாராவது ஒருவர் அந்த இடத்தில் இருந்து அகன்றுவிடுங்கள். மீண்டும் சச்சரவுகள் ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து உறவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.
'நீயும் உன் பெற்றோரைப் போன்றவர்தான்'
உங்கள் மனைவியை அவரின் பெற்றோருடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். அப்படி பேசுவது எதிர்மறையான அர்த்தங்களையே கொண்டிருக்கும். அதிலும் துணையின் பெற்றோரை விமர்சித்து பேசுவது அவரது மனதை காயப்படுத்திவிடும். மனக்கசப்புக்கு வழிவகுத்துவிடும். புகுந்த வீட்டில் தனக்கு பாதுகாப்பற்ற சூழல் இல்லாத உணர்வை ஏற்படுத்தும். தன் பெற்றோருக்கு அடுத்தபடியாக அன்பான உறவாக கணவரைத் தான் அவர் கருதுவார். அப்படி இருக்கும்போது தன் பெற்றோரையே விமர்சித்து பேசுவது அவருக்குள் வேதனையை உண்டாக்கிவிடும்.
Read Also: அவமானமும்.. ஐ.ஏ.எஸ். முயற்சியும் / அவமானத்தால் கிடைத்த IAS பயிற்சி"இனி உன்னை காதலிக்க மாட்டேன்’
இந்த வார்த்தை உறவுக்குள் பேரழிவை ஏற்படுத்தும். எந்தவொரு சூழலிலும் மனைவி மீது கொண்டிருக்கும் அன்பை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சச்சரவு ஏற்பட்டாலும் அது நீண்ட நேரம் நீடிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. தனது கணவர் அன்பானவர், தன்னை எந்தவொரு சூழலிலும் விட்டுக்கொடுக்கமாட்டார். அன்பு செலுத்துவார் என்ற நம்பிக்கை மனைவியிடம் இருக்கும்.அதற்கு எந்தவொரு பங்கமும் நேர்ந்துவிடக்கூடாது. ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் காதலில் விரிசல் ஏற்படுவதாக உணர்ந்தால், உடனே மனம் விட்டு பேசி நிறை, குறைகளை கண்டறிந்து சரிப்படுத்திவிட வேண்டும்.
'வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்"
வேறொருவரை திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துவது துணையின் மனதை ஆழமாக காயப்படுத்திவிடும். அப்படியொரு வார்த்தை கணவரிடம் இருந்து வெளிப்படுவதை எந்தவொரு பெண்ணும் விரும்பமாட்டார், அத்தகைய வார்த்தை திருமண உறவையே சீர்குலைத்து விடும்.துணை மீது கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையை ஒரு நொடியில் பாழாக்கிவிடும். மனதாலும் அப்படியொரு எண்ணம் எழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உறவை வலுப்படுத்துங்கள்.
Read Also: பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமன இடங்கள்'எல்லா பிரச்சினைக்கும் நீ தான் காரணம்
குடும்பத்தில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் மனைவியை குறை கூறுவது அபத்தமானது.பிரச்சினையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிபடுத்த வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது தன்னிச்சையாக செயல்படக் கூடாது. மனைவியின் கருத்தையும் கேட்டறிய வேண்டும்.
இருவரும் கலந்தாலோசித்து தீர்க்கமாக முடிவெடுத்தாலே பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்த்து விடலாம். அதையும் மீறி பிரச்சினை எழுந்தால் இருவருமே தைரியமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்படலாம்.
'நான் உன்னிடம் சில ரகசியங்களை சொல்லாமல் இருக்கிறேன்'
Read Also: வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?மனைவியிடம் கூறாமல் குறிப்பிடத்தக்க ரகசியங்களை மறைத்து வைத்திருப்பது கணவர் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைத்து விடும். துரோக உணர்வை உருவாக்கும். திருமண பந்தத்தில் இணைந்த பிறகு திறந்த மனதுடன் நேர்மையான தகவல்தொடர்புகளை பின்பற்றி வருவது முக்கியமானது. திருமணத்துக்கு பின் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக முடிவெடுத்து செயல்படுவதோ, மனைவிக்கு துரோகம் செய்யக் கூடிய விஷயங்களை செய்து, ரகசியம் காப்பதோ உறவுக்குள் விரிசலை ஏற்படுத்திவிடும். இருவரும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் அன்பான வார்த்தைகளை உச்சரிப்பதே இல்லற வாழ்வை இனிமையாக்கும்.