ஆக்கபூர்வமான சிந்தனை
ஒரு மனிதன் எப்போது தன்னை மட்டுமே தன் உழைப்பை மட்டுமே நம்பி நேர்மறையான எண்ணத்துடன் முன்னேறுகிறானோ, அவன் மனதின் உள்ளே உள்ள நல்ல எண்ணங்கள், செயல்கள்,விடாமுயற்சி, எப்போதும் முன்னேறிப்போகும் தொலைநோக்கு பார்வை இவை எல்லாமே ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழிவகுக்கும்.
Read Also: கோடைகாலத்தில் உங்களை குளிச்சியாகவும் | நீரோட்டமாகவும் வைக்கக்கூடிய பழங்கள் | காய்கறிகள்
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழியைப்போல நம் உடம்பில் பலம் இருக்கும்போதே, நமக்கு நல்ல தெளிவான சிந்தனைகள் உருவாகிறபோதே அதை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறி செல்ல முனைப்பு வேண்டும். எப்போதுமே நன்றாக ஓடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்படி நன்றாக ஓட முடியாத சூழ்நிலை என்றால் வேகமாக நடக்க செய்ய வேண்டும். அப்படியும் வேகமாக நடக்க முடியாத சூழ்நிலை என்றால்,வேகமாக தவழ்ந்து செல்ல முயற்சிக்க வேண்டும்.அப்படியும் தவழ முடியாத நேரத்தில் உருண்டு செல்ல முயற்சி செய்ய வேண்டுமே தவிர என்னால் எதுவும் முடியாது என்று ஓர் இடத்தில் முடங்கியிருந்தல் கூடாது.
யாருக்கும் இறைவன் எதையும் மொத்தமாக அள்ளி கொடுப்பது கிடையாது. அதேபோல யாரையும் எந்த வித திறமையும் இன்றி படைப்பதும் இல்லை.நாம் ஏன் மற்றவரை தொடர்ந்து செல்ல வேண்டும். உனக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை வைத்து அதில் இன்னும் மெருகேறி உன்னை வலிமையாக தயார் செய்து உன் பலத்தை காட்ட வேண்டும்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
ஆக்கப்பூர்வமான சிந்தனை எப்போது பிறக்கும் ?
ஒரு மனிதன் எப்போது ஒரு நேர்மறையான எண்ணத்துடன் இருக்கிறானோ அவனுக்குள் எப்போதும் தெளிவான ஆக்கப்பூர்வ சிந்தனை இருக்கும், சரி அவன் எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும் அதிகாலையில் சீக்கிரம் எழவேண்டும், அதிகாலை நேரம் என்பது எப்போதும் நமது எண்ணத்தை,நமது சிந்தனையை, தெளிவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும், நமது உடலும் ,உள்ளமும், ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருக்கும் அந்த நேரத்தில் நம் மனதின் உள்ளே என்ன நினைக்கின்றோமோ அதை நிறைவேற்றிக்கொடுக்கும் சக்தி அந்த இயற்கைக்கு உண்டு.
அதிகாலையில் எழுந்து, உடலை சுத்தம் செய்து, உடற்பயிற்சி,யோகாசன முறைகளை பின்பற்றி, நினைத்த காரியங்கள் நிறைவேற மனதில் அந்த எண்ணத்தை ஓடவிட்டு வேண்டும். அதில் வெற்றி பெறுவது போலவும், வெற்றி பெற்று பின்பு நம் தொடரும் நல்ல நல்ல செயல்களை நினைத்து நாம் நம்மை பற்றி நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
அப்போது தானாகவே நாமும், நம் உடலையும், நம் எண்ணங்களும் நேர்மறையாகவே இருக்கும், நம் சிந்தனைகள் நம் வெற்றியை பற்றியே இருக்கும், முன்னேற்ற பாதையில் நம்மை பயணிக்க வைக்கும்.இதனால் நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் நேர்மறையாகவே அணுகுவோம். நம்மிடத்தில் எதிர்மறை எண்ணங்கள் சுத்தமாக வராது எனவே வெற்றியே உண்டாகும்.
இளைஞர்களுக்கு சொல்வது என்னவென்றால்
ஒரு தொழில் அல்லது அலுவலக பணியில் நம்மால் வெற்றி பெற முடியவில்லை என்றோ துவண்டு போகாதீர்கள். ஒரு செயலை நாம் கற்றுக்கொள்ள நிறைய வழிகள் உண்டு. ஒரே நாளில் ஏதும் நமக்கு வந்து சேர்ந்து விடுவது இல்லை. ஒரு வழியை அடைய நீ எவ்வளவு முயற்சிகள் எடுக்கிறாயோ, அவ்வளவு துன்பத்தைதை நீ அடைகிறாயோ அவ்வளவு காலம் அது உன்னோடு இருக்கும். முயற்சிகள் மட்டுமே வேண்டும். இன்றைய காலகட்டத்தில் வழிகள் நிறைய வந்துவிட்டது.தொழில்நுட்பம் மேலோங்கி இருக்கிறது. ஆனால் முயற்சிகளை யாரும் தொடர்ந்து மேற்கொள்ள தயாராக இல்லை. அதுவே வருத்தமான செய்தி.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
நாம் எவ்வளவு முயற்சிகள் எடுத்து தோல்வி அடைந்திருந்தாலும் வெற்றி பெரும் வரை விடாமல் போராட மனதை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். நிறைய பேர் செய்யும் தவறு மிகவும் சிரமப்பட்டு ஒரு வேலையை செய்து அதில் முக்கால்வாசி வரும்போது என்னால் இதில் வெற்றி பெற முடியவில்லை. இது என்னால் முடியாது போல . நான் இதை செய்ய முடியாது என்று நிறுத்திவிடுவார்கள். அனால் அவர்களுக்கு தெரியாது நாம் அறைகிணறுக்கு மேல் தாண்டி விட்டோம் என்று. இதுவே சரியான எடுத்துக்காட்டு. நம்மை போன்றவர்கள் தானே எல்லாம் துணிந்து செய்கிறார்கள். சைக்கிள் ஓட்ட பயப்படும் நீ உன்னை போன்ற ஒரு பெண்மணி விமானம் இயக்குவதை பார்த்து பயத்தை விடுத்தது ,மனதையும் ,உடலையும் தயார் செய்து விடாமுயற்சியுடன் முன்னேறி போக சிந்தனையயை வளர்க்க வேண்டும்.
நல்ல எண்ணங்களும், செயல்களும் நம்மை ஒருஒரு நாளும் மென்மேலும் மெருகேற்ற செய்யும். புது விஷயங்களை கற்று, ஒருஒரு நொடிப்பொழுதையும் வீணாக்காமல் எவன் அதை முன்னேற்ற பாதைக்கு பயன்படுத்துகிறானோ அவனது வாழ்வில் வெற்றி நிச்சயம். அவனும் அவனை சுற்றி இருப்பவர்களும் எப்போதும் நேர்மறையான சிந்தனை, மகிழ்ச்சி, ஆரோக்கியம், வாழ்வில் முன்னேற்றம் என்று போதும் ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் எளிதில் எதையும் வெற்றி கொள்வார்கள்.