நீங்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டுமா?
ஒரு சின்ன வேலை செய்ய வேண்டும்
Read Also: ஆக்கபூர்வமான சிந்தனை ஏன் அவசியமான ஒன்று ? உங்கள் நிறை குறைகளை பட்டியலிடவேண்டும். உங்கபட்டியலில் உங்கள் கல்வித்தகுதி மட்டுமின்றி பிற தகுதிகள் திறமைகள் அறிந்தவை,அறியாதவை,எல்லாவற்றையும் கொண்டு வர வேண்டும். நடை,உடை,பாவனை,மொழி,காலை, இலக்கியம்,அறிவியல்,கணிதம்,தொழில்நுட்பம் அத்தனையும் அதில் சேர்த்து கொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் இதில் குறைபாடு கொண்டுருக்கிறீர்கள் என்பதை கண்டறியுங்கள்.தயக்கமின்றி அந்த குறைகளையும் பட்டியலில் பதிவு செய்யுங்கள். இந்த பட்டியலை உங்களை தவிர வேறு யாரும் பார்க்கப்போவதில்லை. எதையெல்லை சரி செய்யலாம், எதையெல்லாம் சரி செய்ய முடியாது என்றும் குறித்து கொள்ளுங்கள். நிறைகளை எப்படி முன்னெடுத்து செல்லலாம் என்று திட்டமிடுங்கள். குறைகளை எப்படி சரி செய்யலாம் என்று சிந்தித்து பாருங்கள்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரைஇந்த நிலையில் உங்களது இலக்கை நிர்ணயம் செய்யலாம் .பின் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழிகளை மட்டுமின்றி தடங்கல்களையும் கண்டறியுங்கள். இப்போது செயலில் இறங்குங்கள்.
சரி செய்ய முடியாத குறைகளை புறந்தள்ளி உங்கள் நிறைகளில் முழு கவனத்தை செலுத்துங்கள் .உங்களால் முடியும் என்று நினைத்து ஒவொன்றாக செய்து முடியுங்கள்.குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள்.தன்னம்பிக்கை தானாக வரும்.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்உங்களை நீங்களே உயர்வாக என்ன வேண்டும். எந்த சொல்லலையும் சமாளிக்க முடியும் என்ற துணிச்சல் பிறக்க வேண்டும்.இவை இரண்டும் நடக்க உங்களை நீங்களே அறிந்து கொண்டு உங்களிடம் உள்ள குறைகளை களைய முன்வர வேண்டும். உங்கள் மனதை உறுத்தும் நிகழ்வுகளையோ மனிதர்களையோ ஒதுக்கிவிட்டு புதிய வாழ்விற்கான தேவைகளை எண்ணிப்பாருங்கள் அதுதான் தன்னம்பிக்கையின் முதல் அடி.நீங்கள் முன்னெடுத்து வைக்கும் அடி. அளவில் சிறியதாக இருந்தாலும் அதுவே உங்களை அடுத்த கட்டத்திற்கு அலுத்து செல்லும்.
உங்களை வருங்காலம் எத்தனை பயமுறுத்தினாலும் முயற்சியை கைவிடாதீர்கள். உங்கள் ஒவொரு முன்னேற்றத்திற்கும் பாராட்டிக்கொள்ளுங்கள். பிறரது வார்த்தைகளுக்கு மட்டும் முக்கியதுவம் அளித்தால் அவை சாதகமாக கிடைக்கவில்லை என்றல் அந்த நேரத்தில் தன்னம்பிக்கை உடையும். அதற்க்கு பதிலாக உங்களை நீங்களே உற்சாக படுத்திக்கொண்டால் அதுவே உங்கள் தன்னம்பிக்கை நீடிக்க சிறந்த வழி.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்முதலில் தன்னம்பிக்கை பற்றிய வீடியோ,மற்றும் புத்தகங்களை படிப்பதை தவிர்க்கலாம். அவை அனைவருக்கும் பொதுவாக வெளியிடப்பட்டவை .ஒவொருவரின் வாழ்வும் எண்ணங்களும் தனிப்பட்டவை.
தன்னம்பிக்கை குறையும் நிறத்தில் நீங்கள் இதற்கு முன்பு அடைந்த வெற்றிகளை நினைத்து கொள்ளுங்கள்.
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறுமற்றவரிடம் ஆலோசனை மட்டும் கேளுங்கள். முடிவு என்பதை நீங்கள் உங்களிடமே ஒப்படையுங்கள். உங்களால், உங்களுக்குள் மற்ற முடிவதை மாற்ற முயலுங்கள். மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒருவரின் உயரம்,தோலின் நிறம், தலை முடியின் அளவு,போற்றவற்றை மாற்ற முடியாது.
அவை குறித்து தாழ்வு மனப்பான்மையை சுமந்துகொண்டு இருப்பது வீண்வேலை. ஆனால் உடை தூய்மை,சுகாதாரம், முகத்தில் புன்னகை, ஆரோக்கியம், உடலுக்கு ஏற்ப உடை அணிதல் எவை மூலமாக தோற்றத்தில் ஒரு பொலிவை உண்டாகி கொள்வது இவை நமக்கு சாத்தியம்.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லாகடவுள் எல்லார்க்கும் எல்லாத்திறமையும் கொடுத்துவிடுவதில்லை. அதே சமையம் ஒரு திறனும் இல்லாதவராகவும் யாரையும் படைப்பதில்லை. எத்தனை கற்றும், முயன்றும் உங்களுக்கு வராத திறன்கள் உண்டு என்றால் அவற்றை பெற உங்கள் சக்தியை விரயமாக்கதிர்கள்.
உங்களுக்கு உங்கள் வாழ்கை ,பணி, வருமானம், இவற்றில் முன்னேற்றம் காண அத்தியாவசியமான திறன்கள் எவையெவை என்றும் அவற்றுள் உங்களால் முயன்று மேலும், திறனையும், அறிவையும் தனித்தன்மையும் வளர்த்துக்கொள்ள சத்தியமாய் உள்ளவை எவை எவை என்று ஆராயுங்கள்.
அந்த துறையில் கூடுதல் கவனம் செலுத்தி ,நேரம்,பொருள் செலவழித்து ,படித்தும்,கற்றும்,அறிந்தும், ஒரு வெற்றியாளராக எல்லா முயற்சியுமெடுங்கள்.
முடியும் என்பதை முடியும் என்றும் , முடியாது என்பதை முடியாது என்றும் சொல்லும் துணிவு உங்களுக்கு வேண்டும். முடியாததை தலைமேல் போட்டுகொண்டு சிரமப்பட்டால் அது தன்னம்பிக்கையை குலைக்கும்.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லாஎதிர் கருத்துக்களை சொல்பவர்கள் எதிரிகள் இல்லை என்பதை புரிந்து கொள்வது மிக அவசியம்.விமர்சனங்கள் இல்லாமல் முன்னேற்றம் இல்லை.விமர்ச்சனைகள் ஏற்று அவற்றின் மூலம் பலன் பெற முடியும் என நம்புங்கள். தொட்டால் சிணுங்கியாக இருந்தால் அது தன்னம்பிக்கையின் எதிரி தான்.
பொறாமை, முன்னேறியவர்களை கண்டு எரிச்சல், திறமை, அதிகம் உள்ளவர்களோடு ஒப்பிட்டு பார்த்து மனஉளைச்சல் இவை இருந்தாலும் தன்னம்பிக்கையின் எதிரிகள் தான்.
தகுதிக்கு மீறிய ஆசை, திறமை இங்கு மீறிய எதிர்பார்ப்பு, விரலுக்கு தகாத வீக்கம், இவை இருந்தால் அவை நாளடைவில் உங்கள் தோல்விகளை வெற்றி உண்மைகளை பெரிதுபடுத்தி காட்டி உங்கள் தன்னம்பிக்கையை கெடுக்கும்.
உங்களுக்கு மேலான ஒரு சக்தி (இறைவன்) உங்களை வழி நடத்தி செல்கிறது என்பதை நம்புங்கள். அந்த சக்தியிடம் பணிந்து உங்கள் நியாயமான முயற்சிகளுக்கு உதவ பிரதியுங்கள்.