சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் 'ப்ரீநேட்டல்' யோகா பயிற்சி
பெண்களின் கர்ப்ப காலங்களில் நடைப்பயிற்சியும், லேசான உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுவது போல இப்போது ‘ப்ரீநேட்டல்' யோகாசன பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு ஏன் யோகாசனத்தை பரிந்துரைக்கிறார்கள்?, இந்த முயற்சி எத்தகைய மாற்றங்களை உண்டாக்கும்? போன்ற கேள்விகளுக்கு யோகா பயிற்றுனர் கற்பகவல்லியின் பதில்கள் .
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
சென்னையை சேர்ந்தவரான இவர், யோகாசன பயிற்றுனர்.அதுவும் கடந்த 6 ஆண்டுகளாக, மகப்பேறு மருத்துவமனைகளில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி கர்ப்பிணி பெண்களுக்கு யோகாசன பயிற்சிகளை வழங்கி வருகிறார். இவர், கர்ப்பகால யோகாசன பயிற்சி பற்றி விரிவாக பேசுகிறார். மகப்பேறு பெண்களுக்கு சொல்லித்தரப்படும் யோகாசன பயிற்சிகளை 'ப்ரீநேட்டல்' யோகா என்று பெயர் .இது நவீனகால பெண்களுக்கு தேவையான பயிற்சியே. ஏனெனில் முந்தைய காலத்து பெண்களின் வாழ்க்கை முறையும், நவீன காலத்து பெண்களின் வாழ்க்கை முறையும் ரொம்பவே வித்தியாசப்படுகிறது. அலுவலகம், மன அழுத்தம். என பிசியான வாழ்க்கை முறையில் சிக்கி கொண்டிருப்பதால், உடலையும், மனதையும் ஆரோக்கியமாக பராமரிக்க, 'ப்ரீநேட்டல்' யோகா பயிற்சிகளை பரிந்துரைக்கிறார்கள். ஆரம்பத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்காக மட்டுமே இது பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் இப்போது, கர்ப்பிணிகளின் உடல்-உள்ள நலன் கருதியும், கருவில் வளரும் சிசுவின் ஆரோக்கிய நலனிற்காகவும் எல்லோருக்குமே பரிந்துரைக்கப்படுகிறது” என்றவர், கர்ப்பிணி பெண்களுக்குகடந்த 6 ஆண்டுகளாக யோகாசனங்களை கற்றுக் கொடுத்து வருகிறார். யோகா கலையில் முறைப்படி முதுகலை பட்டமும், கர்ப்பிணி பெண்களை கையாள்வதற்கும், அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கும் என பிரத்யேக சர்வதேச படிப்புகளையும் முடித்திருக்கிறார்.இவர், ப்ரீநேட்டல்' யோகா பயிற்சிகளின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
ஒரு தாய் தான் கர்ப்பம் தரித்த 5 மாதங்கள் முதலே , யோகாசன பயிற்சிகளை தொடர இயலும் .நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் உடலுக்கு தான் நன்மை பயக்குமே தவிர, கர்ப்ப காலங் களில் பெண்கள் எதிர்கொள்ளும் குமட்டல், தலைசுற்றுதல், முதுகுவலி, கால் வலி, உடல் நடுக்கம் போன்றவற்றுக்கு தீர்வு வழங்காது. ஆனால், யோகாசன பயிற்சிகள், இவை அனைத்திற்குமே தீர்வாகின்றன.
ஆம்..! கர்ப்பகாலம் முழுவதும் பெண்களுக்கு உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். கூடவே, ஹார்மோன்களால் உண்டாகும் மன நிலை மாற்றங்களும் அவர்களை சிரமப்படுத்தும். உடல்.ஆரோக்கியத்துக்கு உணவுகள், ஊட்டச்சத்து மருந்துகள் பக்கபலமாய் இருந்தாலும், கர்ப்பிணிகளின் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சிசு ஆரோக்கியமாக வளரவும், மன அமைதி கிடைக்கவும், ப்ரீநேட்டல் யோகா பயிற்சிகள் அவசியமாகின்றன. ஏனெனில் கர்ப்பிணிகளின் மனது குழப்பத்தில் இருந்தால், சிசுக்களின் மனதும் குழப்பமாகவே இருக்கும். அது பிரசவத்திற்கு பிறகும் எதிரொலிக்கும். நிறைய குழந்தைகள் சரிவர பேசாமல், சமூகத்துட ஒன்றி வாழாமல், மிகவும் குழப்பத்துடனே இருப்பதற்கு, கர்ப்ப கால மன உளைச்சலும் காரணம்’ என்றவர், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கிராம்ப்’ எனப்படும் தசைப்பிடிப்பு பிரச்சினைகளுக்கு யோக பயிற்சிகள், சிறப்பான மருந்தாகிறது என்றார்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சியானது தாய்க்கும், சேய்க்கும் எந்த பாதிப்பும் வராமல் ,'ஸ்ட்ரெட்சிங்' பயிற்சிகள் சொல்லி தரப்படுகிறது. குழந்தை வயிற்றில் வளரும் பொழுது உடல் எடை அதிகரிப்பதன் முதுகுவலி, இடுப்புவலி, தோள்பட்டை காலத்தில் பல பெண்களுக்கும் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் கர்ப்ப 'கிராம்ப்' எனப்படும் கால்களில் தசைப் பிடிப்பும் உண்டாகும். 'ஸ்ட்ரெச்சிங்' பயிற்சிகள் செய்வதன் மூலம் தசைப்பிடிப்பு ஏற்படாமல்பார்த்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல் உடலும் அதிக நெகிழ்வுத்தன்மை பெறும், தசைகள் வலுவாகி ரத்த ஓட்டம் சீராகும். மேலும் கர்ப்பிணிகள் செய்யும் யோகா பயிற்சிகள், பிரசவத்திற்கு பிறகு உடல் பொலிவு பெறவும், மிக விரைவில் உடல்நிலை தேறவும் வழிவகுக்கும்” என்றவர், கர்ப்பிணிகளுக்கு என வழங்கப்படும் சிறப்பு ஆசன பயிற்சிகள் பற்றி விளக்கினார்.
"யோகாசன பயிற்சிகள் கர்ப்ப கால பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைவதுடன், சுக பிரசவத்திற்கு வழிவகுக்கிறது. ஆம்..! 'ப்ரீநேட்டல்' யோகா வகுப்புகளில் பட்டர்பிளை ஆசனம், திரிக்கோனாசனா, வீர பத்ராசனா, மலாசனா, சுஹாஷனா, பர்வதாசனர்.போன்றவை கற்றுத்தரப்படுகின்றன. இவை, இடுப்பு பகுதியை வலுவாக்குவதுடன், இடுப்பு எலும்புகளுக்கு இடையிலான இடைவெளியையும் அதிகரிக்கிறது. அதனால் இயற்கை முறையிலேயே சுக பிரசவமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் சுக பிரசவவேளையில் மூச்சு பயிற்சி மிக முக்கியமானது. அதையும், யோகா பயிற்சிகளில் கற்றுக்கொள்ளலாம்” என்றவர், செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கும் இது ஏதுவான பயிற்சி என்கிறார்."செயற்கை முறையில் மருத்துவமனையில் கர்ப்பம் தரிப்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
நடக்கக் கூடாது, மாடிப்படி ஏறக்கூடாது, ஏன்..? ஒரு சிலரை படுக்கையிலேயே சில மாதங்கள் இருக்க பரிந்துரைப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு கூட, மகப்பேறு மருத்துவர்கள் யோகாசன பயிற்சிகளை பரிந்துரைக்கிறார்கள்" என்றவர், கர்ப்பிணி பெண்களுக்கு யோகாசன பயிற்சிகளை கற்பித்து, அதன் மூலம் உண்டாகும் உடல்நல, மனநல மாற்றங்களை ஆவணப்படுத்தி வருகிறார். அதைக்கொண்டு பிரத்யேக ஆய்வறிக்கையும் தயாரித்து வருகிறார்.