நாட்டின் நீளமான நதிகள் பற்றிய சுவாரசியங்கள்
இந்தியாவில் 200 கும் மேற்பட்ட நதிகள் பாய்ந்தோடுகின்றன.அவை வரலாறு மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்புடையவையாகவும், மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் வளப்படுத்துபவையாகவும் உள்ளன. பெரும்பாலான நதிகள் ஆரவல்லி, காரகோரம், இமயமலை பகுதிகளில்தான் உற்பத்தியாகின்றன.நீர் பாசன அமைப்புகளின் உயிர்நாடியாக விளங்கும் அவை, பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.அவற்றுள் நீளமான 10 நதிகள் பற்றி பார்ப்போம்.
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!1.
கங்கை
இது உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரி பனிபாறைகளில் இருந்து உருவாகிறது. இந்தியாவின் மிக நீளமான நதியாகவும், புனித நதியாகவும் விளங்குகிறது. உத்தரகண்ட் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது.கங்கை நதியின் நீளம் தோராயமாக 2,525 கிலோமீட்டர்கள் வங்காள தேசத்தின் வழியாக பயணித்து வங்காள விரிகுடாவி கலக்கிறது. வங்காள தேசத்தில் இதற்கு பத்மா நதி என்று பெயர்.
2.கோதாவரி
இது கங்கைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நதியாகும். இதன் நீளம் தோராயமாக 1,465 கிலோ மீட்டர்கள். மராட்டியத்தில் மேற்குத்தொடர்ச்சிமலையில் அமைந்துள்ளதிரிம்பக் என்ற இடத்தில் உருவாகி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைக் கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதுவும் கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரவரா, மஞ்சிரா, பெங்கங்கா, வார்தா, இந்திராவதி, சபரி உள்பட ஏராளமான துணை நதிகளையும் கொண்டிருக்கிறது.
3.கிருஷ்ணா
இந்தியாவின் மூன்றாவது பெரிய நதியான இதுவும் மராட்டியத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகிறது. இந்த நதி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா வழியாக பாய்ந்தோடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் நீளம் சுமார் 1,400 கிலோமீட்டர்கள். கிருஷ்ணா நதியின் துணை நதிகளில் துங்கபத்திரா, பீமா, கட்டபிரபா, மலபிரபா, மூசி ஆகிய ஆறுகள் குறிப்பிடத்தக்கவை. அதிலும் கர்நாடகாவில் உற்பத்தியாகும் துங்கபத்திரா நதி மிகப்பெரிய துணை நதிகளில்
ஒன்றாக விளங்குகிறது.
4.யமுனா
இது 1376 கிலோமீட்டர் நீளம் கொண்ட நான்காவது பெரிய நதியாகும். உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள யமுனோத்ரி பனிப்பாறைகளில் இருந்து உருவாகிறது. இது கங்கையின் துணை நதியாகும். இது இமாச்சலப்பிரதேசம், அரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் வழியாக பாய்ந்து பிரயாக்ராஜில் கங்கை நதியுடன் கலக்கிறது. கங்கை-யமுனை சங்கமிப்பதால் சனகம் நகரி என்றும் அழைக்கப்படுகிறது.
5.நர்மதா
இது தோராயமாக 1,312 கிலோமீட்டர் தூரம் நீள்கிறது. மத்தியபிரதேசத்தில் உள்ள அமர்கண்டக் பகுதியில் உருவாகிறது. மத்தியபிரதேசம், மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலம் வழிமேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.
இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் ஏராளமான இடங்கள் செழிப்பதற்கு இந்த நதி காரணமாக அமைந்திருக்கிறது. நீர்ப்பாசனம், நீர் மின் உற்பத்தி மற்றும் நீர் விநியோகத்திற்காக இந்த ஆற்றின் குறுக்கே பல அணைகள் மற்றும் நீர்த்தேக்
கங்கள் கட்டப்பட்டுள்ளன. தவா, பர்னா, ஷக்கர் மற்றும் ஹிரன் ஆறுகள் நர்மதையின் முக்கிய துணை நதிகள்.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்6.
சிந்து
இது பாகிஸ்தான் பகுதிக்குள்தான் பிரதானமாக பாய்ந்தோடுகிறது. திபெத்திய பீடபூமியில் உள்ள மானசரோவர் ஏரியில் இருந்து உருவாகி, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் வழியாக பாய்ந்து பாகிஸ்தானை அடைந்து இறுதியில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த நதியின் மொத்த நீளம் சுமார் 3,180 கிலோமீட்டர்கள். ஆனால் இந்தியா வழியாக சுமார் 800 கி.மீ. நீளமே பாய்கிறது.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்7.
பிரம்மபுத்திரா:
இமயமலையில் கைலாஷ் மலைக்கு அருகிலுள்ள செமாயுங்டுங்
பனிப்பாறையில் இருந்து பிரம்மபுத்திரா நதி உருவாகிறது. இப்பகுதி சீனாவில் உள்ளது. பிரம்மபுத்திரா நதியின் மொத்த நீளம் தோராயமாக 2,900 கிலோ மீட்டர். ஆனால் இந்தியாவில் 918 கிலோமீட்டர் மட்டுமே பயணிக்கிறது.
அருணாச்சலப்பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. அசாம் மற்றும் வங்காளதேசம் வழியாகவும் பாய்ந்தோடுகிறது. கங்கை மற்றும் மேக்னா நதிகளுடன் இணைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. சுந்தரவனகாடுகளின் செழுமைக்கு இந்த நதியின் பங்களிப்பும் முக்கியமானது.
8.மகாநதி:
858 கிலோமீட்டர் நீளம் கொண்ட இது இந்தியாவின் எட்டாவது பெரிய நதியாகும். சத்தீஷ்காரின் ராய்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. ஒடிசா வழியாக கடந்து வங்காள விரிகுடா வந்தடைகிறது.சியோநாத், ஜோங்க், ஹஸ்தியோ, ஓங் மற்றும் டெல் ஆகியவை மகாநதியின் முக்கிய துணை நதிகளாகும். சத்தீஷ்கார் மற்றும் ஒடிசாவின் விவசாய பாசனத்திற்கு இந்த நதியின் நீர்தான் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
9.காவிரி:
ஒன்பதாவது பெரிய நதியான இது கர்நாடகாவின் மேற்குத்தொடர்ச்சி மலையில்தலைக்காவிரி என்ற இடத்தில் உருவாகிறது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக கிழக்குநோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இந்த நதி சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. ஹேமாவதி, கபினி, அர்காவதி, ஷிம்ஷா, அமராவதி ஆறுகள்
காவேரி ஆற்றின் கிளை நதிகளில் சிலவாகும்.
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு10.
தப்தி:
இது இந்தியாவின் பத்தாவது பெரிய நதியாகும். மத்திய பிரதேசத்தில் உள்ள சத்புரா மலைத்தொடரில் உருவாகிறது. மராட்டியம் மற்றும் குஜராத் வழியாக சுமார் 724 கிலோமீட்டர் தொலைவை கடந்து அரபிக் கடலில் கலக்கிறது.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா