இந்திய தேர்தலில் இளம் வாக்காளர்கள் |இந்தியா தேர்தல் பற்றி தெரிந்ததும்/ தெரியாததும் - ThaenMittai Stories

இந்திய தேர்தலில் இளம் வாக்காளர்கள் |இந்தியா தேர்தல் பற்றி தெரிந்ததும்/ தெரியாததும்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா 'கிளைமாக்சை' நெருங்கிக்கொண்டிருக்கிறது. வேட்பாளர்கள் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு, பொதுக்கூட்டம், கொடி, தோரணம், வாகனங்கள் என்று பிரசார களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.இந்த தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் வரை செலவிடலாம் என்று தேர்தல் கமிஷன் வரம்பு நிர்ணயித்து இருக்கிறது. இதனால் வேட்பாளர்களுக்கு, அந்த வரம்புக்குள் செலவு கணக்கை காட்டியாக வேண்டிய கட்டாய நிலை ஒருபக்கம் என்றால், பிரசாரத்தில் பின்தங்கிவிடக்கூடாது என்ற நெருக்கடி மற்றொரு பக்கம்.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
“தேர்தலுக்காக இவ்வளவு செலவு செய்கிறார்களே? வெற்றி பெற்று எம்.பி.யானால் இவர்களுக்கு எவ்வளவு சம்பளம்கிடைக்கும்?” என்ற கேள்வி பலருடைய மனதிலும் எழத்தான் செய்யும். அரசியல் பணி மக்கள் சேவை என்றாலும், டெல்லி சென்றுநாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் மக்களுடைய பிரதிநிதிகளான எம்.பி.க்களுக்கு, அரசாங்கம் மாதாமாதம் சம்பளமும், பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது. 1954-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தின்படி குறிப்பிட்ட தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. அதன்படி, எம்.பி.க்களின் மாத சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்.

இதில் ரூ.50 ஆயிரம் அடிப்படை சம்பளம் ஆகும். இதுதவிர'படி'கள் (அலவன்ஸ்) என்ற முறையில் அவர்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும். நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நாளும் எம்.பி.க்களுக்கு தினசரி 'படி'யாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். தொகுதி படியாக மாதம் ரூ.70 ஆயிரம் கிடைக்கும். எம்.பி.யாக இருக்கும் காலகட்டத்தில் அவர்களுக்கு டெல்லியில் இலவசமாக வீடு கிடைக்கும். அதாவது அவர்கள் தங்கும் வீட்டுக்கு வடக்கை செலுத்த வேண்டியது இல்லை. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. என்றால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடும்,ஏற்கனவே எம்.பி.யாக இருந்தவர் என்றால் தனி பங்களாவும் ஒதுக்கப்படும்.மின்சாரம் (50 ஆயிரம் யூனிட் வரை), மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (4,000 லிட்டர் வரை) இலவசமாக கிடைக்கும். எழுதுபொருள் உபகரணங்கள், தபால் செலவுக்கான ரூ.15 ஆயிரம் உள்பட மாதம்தோறும் அலுவலக செலவுக்காக ரூ.60 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம். கூட்டங்கள் உள்ளிட்ட பணி நிமித்தமான காரியங்களுக்கு செல்லும் போது, அதற்கு ஆகும் செலவுத்தொகையை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
இந்தியாவுக்குள் ஆண்டுக்கு 34 முறை இலவசமாக விமான பயணம் செய்து கொள்ளலாம். இருப்பிடத்தில் இருந்து சாலை வழியாக விமானநிலையம் செல்லும் போது கிலோ மீட்டருக்கு16 ரூபாய் வீதம் 'போக்குவரத்து படி' கிடைக்கும். எம்.பி.க்கள் மாதம் 500 ரூபாய் செலுத்தி தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவ வசதி பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எம்.பி.க்களுக்கான படிகள் உயர்த்தப்படும். பதவிக்காலத்துக்கு பின் மாதம் ரூ.25 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைக்கும்.

(இதேபோல் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும், சம்பளமும், 'படி'கள் மற்றும் சலுகை களும் உண்டு) ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரான பிரதமரின் மாத சம்பளம் ரூ.2 லட்சம். இதில் அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம் ஆகும். சம்பளத்தில் தினசரி படியான ரூ.2 ஆயிரமும் (மாதம் ரூ.62 ஆயிரம்), நாடாளுமன்ற படியான ரூ.45 ஆயிரமும், பார்வையாளர் செலவின படியான ரூ.3 ஆயிரமும் அடங்கும். இந்த படிகள் தவிர மேலும் பல சலுகைகள் மற்றும் வசதிகளும் உண்டு. பயணப்படியாக ஒரு நாளைக்கு ரூ.4,500 கிடைக்கும்.

Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
இந்தியா தேர்தல் பற்றி தெரிந்ததும்/ தெரியாததும்
பிரதமர் வசிக்க தனி பங்களா ஒதுக்கப்படும். அதற்கு வாடகை கிடையாது. அலுவலகம் மற்றும் பங்களா பராமரிப்புக்காக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். அவர் தனது பயணங்களுக்கு அரசு வாகனங்களையும், விமானத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். பிரதமர் வெளிநாடு செல்லும் போது அங்கு அவர் தங்குவதற்கான இடம், உணவு, போக்குவரத்துஆகியவற்றுக்கான செலவினங்களை அரசே ஏற்றுக்கொள்ளும்.

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் (எஸ்.பி.ஜி.) பாதுகாப்பு அளிப்பார்கள். ஓய்வு பெற்றபின் டெல்லியில் வசிக்க தனிபங்களா ஒதுக்கப்பட்டு, பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள். மின்சாரம் மற்றும் குடிநீர் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும், ஆண்டுகளுக்கு சிறப்பு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பும் கிடைக்கும். இலவசமாக மருத்துவ வசதி மற்றும் விமான, ரெயில்பயண வசதிகள் கிடைக்கும்.சிறப்பு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பும் வழங்கப்படும்.

Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
2018-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், எம்.பி.க்கள், மாநில கவர்னர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்போரின் மாத சம்பளம் உயர்த்தப்பட்டது. அதாவது ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், துணை ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், கவர்னர்களின் சம்பளம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரமாகவும், எம்.பி.க்களின் சம்பளம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும் உயர்ந்தது. அந்த சமயத்தில்தான் எம்.பி.க்களின் தொகுதி படி ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக உயர்ந்தது. மற்று படிகளும் அதிகரிக்கப் (கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருந்த ஓராண்டில் (2020) மட்டும் இவர்களுடைய சம்பளத்தில் 30 சதவீதம் 2 குறைக்கப்பட்டது)

Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
தற்போதைய மக்களவை எம்.பி.க்களில் பலர் கோடீசுவரர்கள். இவர்களில் சிலர் பெரும் பணக்காரர்கள். மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதி காங்கிரஸ் எம்.பி. நகுல்நா ரூ.660 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் பணக்கார எம்.பி.க்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக “ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு” தெரிவித்து இருக்கிறது. இந்த பட்டியலில் பெங்களூரு புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. டி. கே.சுரேஷ் ரூ.338 கோடி சொத்துகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆந்திர மாநிலம் நரசபுரம் தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி. கணுமுரு ரகுராம கிருஷ்ணராஜூ ரூ.325 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மக்களவை மொத்த எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு 20.47 கோடி ஆகும். நடைபெற இருக்கும் தேர்தலில் எத்தனை கோடீசுவரர்கள் வெற்றி பெற்று எம்.பி. ஆகிறார்களோ? வெற்றி பெற்று எம்.பி.யான பிறகு எத்தனை பேர் கோடீசுவரர்கள் ஆகிறார்களோ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook