பள்ளி விடுமுறை விட்டாச்சா? அப்போ இதெல்லா சொல்லி குடுங்க ! பெற்றோருக்கான வீட்டுப்பாடம் !
"ஏப்ரல் மாதம் தொடங்கியதுமே பள்ளி மாணவ - மாணவிகள் கோடை கால விடுமுறையை ஆவலோடு எதிர்பார்க்க தொடங்கிவிடுவார்கள். அதிலும் தொடக்கப்பள்ளி படிக்கும் சிறுவர்-சிறுமியர்கள் கோடை விடுமுறைக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது என்று எண்ணத்தொடங்கிவிடுவார்கள். வருடத்தில் 10 மாதங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியவர்கள் கோடை விடுமுறையில் தான் ஆட்டம், பாட்டம், விளையாட்டு என கொண்டாடுவார்கள். அவர்களின் எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்யும் கோடை விடுமுறை வந்துவிட்ட நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். அது படிப்பு'சார்ந்த பாடமாக அல்லாமல் வாழ்வியல் பாடமாக அமைய வேண்டும்.
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
அவர்களை சுற்றி நடக்கும் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை பற்றி பயிற்சி அளித்து விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அதற்கான சில வழிமுறைகள்.
தாயார் சமைக்கும் போது சிறு, சிறு சமையல் வேலைகளை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்து உங்களுக்கு உதவியாக இருக்க பழக்குங்கள். அவர்களுக்கு தேவையான சிற்றுண்டிகளை அவர்களே சமைப்பதற்கும் பயிற்சி கொடுங்கள். தொடக்கப்பள்ளியில் படிக்கும் சிறுவர்-சிறுமியர்களாக இருந்தால் அடுப்பில் சமைக்காமல் காய்கறிகள், பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் சாலட் போன்ற எளிய சமையல் முறையை கற்றுக்கொடுங்கள்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
தினமும் ஒரு முறையாவது. கட்டாயம் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுங்கள். சாப்பிட்ட பிறகு அவர்களின் தட்டுக்களை அவர்களே கழுவுமாறு அன்பு கட்டளையிடுங்கள்.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
கோடை விடுமுறையில் டி.வி, மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து பிள்ளைகளை விலகி இருக்க செய்வது சாத்தியமில்லாதது. அதற்காக அதிலேயே மூழ்கிவிட அனுமதிக்காதீர்கள். அவர்களுடன் இணைந்து நீங்களும் தினமும் சிறிது நேரம் விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
குழந்தைகளை இசை கேட்பதற்கு நேரம் செலவிட அனுமதியுங்கள். நாட்டுபுற பாடல்களையும், சமூக விழிப்புணர்வு பாடல்களையும் கேட்பதற்கு ஊக்குவியுங்கள். பாடவும், இசைக்கவும் ப்யிற்சி கொடுங்கள். அது சார்ந்த வகுப்புகளுக்கு அனுப்பியும் உற்சாகப்படுத்துங்கள்.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
குழந்தைகளை வெளியே சென்று விளையாடவிடுங்கள். காயம் ஏற்படும், சட்டை அழுக்காகும் என்று வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க அனுமதிக்காதீர்கள். சோபா, மெத்தைகள், ஏ.சி. போன்ற வாழ்க்கை முறை அவர்களை சோம்பேறியாக்கும்.உங்கள் வீட்டிற்கு அருகே வசிக்கும் குடும்பத்தினருடன் உங்கள் குழந்தைகளை பழக விடுங்கள். அவர்களை பற்றி தெரிந்து கொள்ளட்டும்.
ஏதாவது சிறிய போட்ருட்கள் வாங்குவதற்கு குழந்தைகளை கடைக்கு அனுப்புங்கள். எவ்வாறு வாங்க வேண்டும்? அந்த பொருளின் விலை என்ன? மீதி எவ்வளவு தொகை திரும்ப வாங்கி வர வேண்டும். அந்த பொருளை எதற்காக பயன்படுத்துகிறோம் விஷயங்களை கூறுங்கள்.
Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
அவர்களையே வீட்டை சுத்தம் செய்யும்படி செய்யலாம். அவர்களின் துணியை அவர்களே துவைக்க கற்று தரலாம்.வீட்டு தோட்டம் அமைத்து செடிகளை அவர்களாகவே பராமரிப்பதற்கு ஊக்குவிக்கலாம்.
குடும்பத்திற்காக நீங்கள் எவ்வளவு கடின மாக உழைக்கிறீர்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, உங்களுடைய பணியிடத்திற்கு அழைத்து செல்ல அனுமதி இருந்தால் அங்கும் ஒரு முறை கூட்டிச் செல்லுங்கள்.
Read Also: The Role Of Tamilnadu Freedom Fighters In The India | இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு
உங்கள் சிறு வயது வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளோடு பகிருங்கள். அதனை அவர்கள் ஆர்வமாக கேட்கும் விதத்தில் கதை வடிவில் கூறுங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தயங்காமல் பகிர்ந்து கொள்ள சொல்லுங்கள்.அவர்களின் கனவுகளையும் எதிர்கால ஆசைகளையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் திறமைகளை கண்டறிந்து அதனை மெருகேற்ற உதவி செய்யுகள்
Read Also: The Role Of Tamilnadu Freedom Fighters In The India | இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு
அவர்களுக்கு பிடித்த சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அது விடுமுறை காலம் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைவதற்குவழிவகை செய்யும்.
காலையில் எழுந்ததும் செய்தித்தாள் வாசிக்க பழக்கப்படுத்துங்கள்.
செல்லப்பிராணிகள், மீன் வளர்ப்பதில் ஆர்வம் இருந்தால் அவற்றை அவர்களாகவே பராமரிக்க கற்றுக் கொடுங்கள்.
இத்தகைய வீட்டுப்பாடங்களை பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து அவற்றை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்தால் அவர்களின் வாழ்க்கையும், எதிர்காலமும் சிறப்பாக அமையும்.