21 வயதில் மருத்துவர், 57 வயதில் மாடல் அழகி
"வயது என்பது வெறும் எண்தான். எந்த வயதில் நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ அப்படியே உங்களால் இருக்க முடியும்" என்பதற்கு முன்மாதிரியாகவிளங்குகிறார், கீதா பிரகாஷ். மருத்துவராக இருந்தபோதிலும் இவர் தனது அடையாளமாக மாடலிங்கை முன்னிலைப்படுத்துகிறார். 69 வயதிலும் இளம் மாடலிங் மங்கைகளுக்கு போட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
"மாடலிங் உலகில் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் முகங்களில் ஒருவராக ஜொலிக்கிறார். பிரபலமான வடிவமைப்பாளர்கள், பிராண்ட் நிறுவனங்கள் இவரை அணுகுகின்றன. தங்கள் விளம்பரங்களில் நடிக்கவைத்து புதிய ஆடை ரகங்களை அறிமுகப்படுத்துகின்றன. மாடலிங் செய்வதற்கு இளம் வயதுதான் பொருத்தமானது என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து எந்த வயதினரும் மாடலிங் செய்யலாம் என்ற நிலையை மருத்துவராக ஏற்படுத்தியதில் கீதா பிரகாஷின் பங்களிப்பு அளப்பரியது. டெல்லியை சேர்ந்தவரான கீதா பிரகாஷ், படிப்பை முடித்துவிட்டு 21 வயதில் மருத்துவ பணியை தொடங்கி இருக்கிறார். ஆனால் அவருக்குள் மாடலிங் ஆர்வம் 57 வயதில்தான் எட்டிப்பார்த்திருக்கிறது. மருத்துவர் எப்படி மாடலிங் அழகி ஆனார் என்பதை அவரே வெளிப்படுத்துகிறார்.
மாடலிங் மீது ஆர்வம் ஏற்பட என்ன காரணம்? என்று கேட்கும் போது,
"மாடலிங் செய்ய வேண்டும் என்று சிறுவதிலோ, இளம் பருவத்திலோ விரும்பியதில்லை. அப்படியொரு எண்ணமே எனக்குள் எழுந்ததில்லை. ஆனால் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தேன். படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக என்வேலையை மகிழ்ச்சியாகவே செய்து வந்தேன். 57 வயது வரை அதே நிலையே நீடித்தது. அப்போது கூட மாடலாக மாறுவேன் என்று எனக்குத் தெரியாது. இத்தாலிய புகைப்படக் கலைஞர் ஒருவர் சிகிச்சைக்காக எனது கிளினிக்கிற்கு வந்தார். அவர்தான் மாடலிங் செய்ய முடியுமா?' என்று என்னிடம் கேட்டார். அப்போது கூட நான் ஆர்வம் காட்டவில்லை. இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அவரிடம் இருந்து கடிதம் வந்தது. எனது புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
"அந்த கடிதத்தை படித்துவிட்டு என் பிள்ளைகள்தான் எனது புகைப்படங்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். அந்த படங்கள் அவருக்கு பிடித்து போகவே மாடலிங் உலகிற்குள் அடி எடுத்து வைத்தேன்.
"முதலில் யாருக்காக மாடல் செய்தீர்கள்? என்று கேட்கும்போது, சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண்தஹி லியானியின் குழுவில் இடம்பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பின்னர் ஜெய்பூர் பிராண்ட் நிறுவனம் ஒரு வகை சால்வையை மாடலிங் செய்ய என்னை அணுகியது. அந்த சால்வைகள் பெரும்பாலும் என் வயது பெண்கள் விரும்பி அணிபவை. அதனால் அதனை மாடலிங் செய்யும் வாய்ப்பை பெற்றேன். அதற்கு கிடைத்த வரவேற்பு அனைத்து வகை ஆடைகளையும் மாடலிங் செய்வதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கிவிட்டது. மருத்துவர் பணி மற்றும் மாடலிங்கை எவ்வாறு கையாளுகிறீர்கள்? மாடலிங் செய்வதற்கு நேரம் ஒதுக்கினாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் எந்தவொரு இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.பெரும்பாலும் வார இறுதி நாட்களில்தான் மாடலிங் பணிகளை மேற்கொள்கிறேன். மாடலிங் செய்வதை எவ்வளவு விரும்புகிறேனோ, அதேபோல் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். மக்கள் சுலபமாக அணுகுவதற்கு ஏற்ப வீட்டிலும் மினி மருத்துவமனை நடத்துகிறேன்.
விளம்பரப் பலகைகளில் உங்கள் படங்களை பார்க்கும்போது மகள்கள் என்ன சொல்வார்கள்?
"வெளி இடங்களுக்கு செல்லும்போது ஒவ்வொரு முறையும் என்னை விளம்பரப் பலகையில் பார்க்கும்போது அவர்கள் உற்சாகமடைகிறார்கள். அந்த விளம்பரப்பலகையை படம்பிடித்து எனக்கு அனுப்பிவிடுவார்கள். அதுஎனக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
"நீங்கள் எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. எதற்கும் வயது வரம்பு இல்லை. உங்கள் ஆர்வத்தையும் பொழுது போக்கையும் தீர்மானிக்க வயதை ஒரு போதும்அனுமதிக்கக்கூடாது. உங்கள்விருப்பப்படி செயல்படுங்கள். அதற்கு வயது தடையாக இருக்காது.
"பெண்களின் வயதிற்கும் பார்க்கும் வேலை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் எந்த ஒரு தடையும் தேவை இல்லை ,ஒரு பெண் எப்படி வயதை பொருட்படுத்தாமல் முன்னேறி செல்வது ?
உடல் தோற்றம்:
"தோலின் தரம், உடற்தகுதி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, சிலர் பெண்ணின் தோற்றத்தை அவரது வயதுடன் ஒப்பிடலாம். இருப்பினும், வயது வித்தியாசமாக தனிநபர்களை பாதிக்கிறது, மேலும் சமூக அழுத்தங்கள் பெரும்பாலும் இளமைக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதால் இது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கலாம்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
வாழ்க்கை நிலை:
"மற்றொரு ஒப்பீடு ஒரு பெண்ணின் வயது மற்றும் அவரது வாழ்க்கை நிலை ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம். உதாரணமாக, 20 வயதில் ஒருவர் தங்கள் தொழில் அல்லது கல்வியைத் தொடங்கலாம், அதே சமயம் 40 வயதிற்குட்பட்ட ஒருவர் தங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்தலாம் அல்லது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தலாம். ஒவ்வொரு வயதினரும் அதன் சொந்த அனுபவங்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கொண்டுவருகிறார்கள்.
சமூக எதிர்பார்ப்புகள்:
"திருமணம், குழந்தைப்பேறு மற்றும் தொழில் மைல்கற்கள் போன்ற காலக்கெடு போன்ற சில எதிர்பார்ப்புகளை பெண்களின் வயதின் அடிப்படையில் சமூகம் அடிக்கடி சுமத்துகிறது. இந்த எதிர்பார்ப்புகள் கலாச்சாரங்கள் மற்றும் தலைமுறைகள் முழுவதும் வேறுபடலாம் மற்றும் தனிப்பட்ட ஆசைகள் அல்லது சூழ்நிலைகளுடன் எப்போதும் ஒத்துப்போவதில்லை.
தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாடு:
"ஒரு பெண்ணை அவளது வயதுடன் ஒப்பிடுவது, காலப்போக்கில் அவளது தனிப்பட்ட வளர்ச்சி, முதிர்ச்சி மற்றும் சாதனைகளை மதிப்பீடு செய்வதையும் உள்ளடக்கியது. இந்த முன்னோக்கு வயது என்பது ஒரு நபரின் அடையாளத்தின் ஒரு அம்சம் என்பதை அங்கீகரிக்கிறது மற்றும் தனிநபர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பரிணாமம் மற்றும் கற்றுக்கொள்கிறார்கள்.
"இறுதியில், ஒரு பெண்ணையும் அவளது வயதையும் ஒப்பிடுவது சிக்கலானதாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கலாம், மேலும் இதுபோன்ற ஒப்பீடுகளை உணர்திறன், பச்சாதாபம் மற்றும் மனித அனுபவங்களின் பன்முகத்தன்மை பற்றிய புரிதலுடன் அணுகுவது முக்கியம்.