ஒருங்கிணைந்த பண்ணை (Integrated Farming) மூலம் அதிக வருமானம் பெறுவது எப்படி?
இன்றைய இளம் தலைமுறையினரிடம் நிறைய மாற்றங்களை காண முடிகிறது. நிறைய படித்த பட்டதாரிகள் மற்றும் IT நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் கூட தங்கள் பார்த்த வேலையை விட்டுட்டு அவர்கள் சுயமாக ஒருங்கிணைந்த பண்ணைகள் உருவாக்கி அதில் வெற்றியும் காண்கின்றனர். எந்த தொழிலும் வெற்றி, தோல்வி ஏற்படுவது சகஜமே!. தோல்வியை தழுவியதற்காக அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. மேலும் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை விட எதாவது ஒரு வேலையை தினமும் செய்வது மேல். இளம் வயது பட்டதாரிகள் நிறைய பேர் ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கி அதன் மூலம் நிறைய வருமானம் ஈட்டி வருகின்றனர் அதை பற்றிப் பார்க்கலாம்.
Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்
ஒருங்கிணைந்த பண்ணை (Integrated Farming) என்பது ஆடு, மாடு, கோழி, காடை, முயல், வாத்து, எருமை, பன்றி, மீன் போன்ற உயிரினங்களை வளர்த்து அதன் மூலம் நல்ல வருமானம் (Income) ஈட்டி வரலாம். ஒருங்கிணைந்த பண்ணை வளர்க்க பெரும்பாலும் கிராமப் புற சூழல் ஏற்றதாக இருக்கும். அங்கே பண்ணை அமைக்க செலவுகள் அதிகம் தேவைப்படாது. ஆடுகள், மாடுகள், எருமைகள் போன்றவற்றிக்கு தேவைப்படும் தீவனங்களை அருகில் இருக்கும் குளம், ஏரி போன்றவற்றிலிருந்து கூட பெற்றுக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றாலும் அவைகள் விளைநிலம் அல்லாத தரிசு நிலங்களில் விட்டால் மேய்ந்து கொள்ளும்.
கால்நடைகள் மூலம் கிடைக்கும் சாணம் போன்றவை சேகரித்து அதை விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். ஆடுகள், மாடுகள் வளர்க்கும் போது எருமைகளையும் சேர்த்து வளர்ப்பதால் ஆடுகள், மாடுகள் சாப்பிட்ட மீதி உள்ள உணவுகள் வீணாக்காமல் அதை எருமை மாடுகளுக்கு போட்டால் அதை அவைகள் உண்டு வாழும். அதே போல் வீடுகளில் கோழிகளையும் வளர்த்து அது கொஞ்சம் அதிகமாகும் போது அவைகளையும் பண்ணையில் சேர்க்கலாம். கோழிகளை வளர்க்கும் போது கூடவே கிண்ணி கோழிகளையும் மற்றும் வான்கோழிகளையும் சேர்த்து வாங்கி வளர்க்கலாம். கூடவே வாத்து வளர்க்கலாம். எல்லாமே சேர்த்து வளர்க்கும் போது அவைகள் எளிதாக வளரும். நமக்கும் நஷ்டம் ஏற்படாது. ஒன்று போனாலும் ஒன்று வந்து விடும்.
Read Also: தொழில் முனைவோர்க்கான தகவல்கள்
கோழிகளை முட்டைகள் மற்றும் கறிக்கோழிகளுக்காக பயன்படுத்தலாம். நாட்டுக்கோழிகளை ஒரு கிலோ விலை சராசரி 500 ரூபாய்க்கு மேல் விற்கலாம். முட்டை ஒன்று 10 ரூபாய்க்கு மேல் விற்க முடியும். காடையும், கோழியோடு சேர்த்து விற்க முடியும். காடைகளும் மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருங்கிணைந்த பண்ணை என்பது செலவு குறைவாகவும் அதே சமயத்தில் அதில் நல்ல லாபமும் பார்க்கலாம் என்பதற்காக மக்கள் இதை தேர்வு செய்கின்றனர். நாம் ஒருங்கிணைந்த பண்ணையில் முயல் வளர்ப்பையும் சேர்த்து கொள்ளலாம்.
முயல்கள், பன்றிகள் வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் நாம் அதில் பயிற்சிகள் பெற்ற பின்பு அதை வளர்க்கலாம். முயல் வளர்ப்பில் சில பிரச்சனைகளை சமாளிக்க அதை முறையாக கையாளுவது பற்றி நாம் தெரிந்துக்கொள்வது அவசியம். சில நேரங்களில் அவைகள் நல்ல லாபம் கொடுத்தாலும் அவற்றிக்கு நோய் தொற்றுக்கள் ஏற்பட்டால் மொத்தமாக இறந்துவிடும். அதனால் நாம் சில பயிற்சி வகுப்புகள் சென்று அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பன்றிகளையும் வளர்ப்பதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முயல், பன்றிகள் போன்றவை நாம் எளிதில் பெருக்கி நல்ல வருமானம் பார்க்க முடியும்.
Read Also: சாதிக்க தூண்டும் தங்க தூண்டில் கதை
முயல், பன்றி போன்றவைகள் எளிதில் பெருகுவதால் நாம் அவற்றை நாம் கறிக்காகவோ, வளர்ப்புக்கோ எளிதில் விற்க முடியும். வளர்ப்பதற்கு விற்கும் பொழுது ஆண், பெண் என்று கலந்து கொடுக்க வேண்டும். பன்னிரண்டு பெண் முயல்களுக்கு மூன்று ஆண் முயல்களை விடலாம். முயல் கறி ஐநூறு ரூபாயில் இருந்து அறுநூறு ரூபாய் வரை விற்கலாம். பன்றி கறி முன்னூற்றி ஐம்பது ரூபாய் முதல் நானூறு ரூபாய் வரை விற்கலாம். ஒருங்கிணைந்த பண்ணையில் நாம் அடுத்து பார்ப்பது மீன்வளர்ப்பு. மீன் வளர்க்க நாம் தோட்டத்தில் சிறிது இடம் இருந்தால் குட்டை ஒன்றை நாம் செயற்கையாக உருவாக்கி அதில் நாட்டு மீன்கள் அதாவது நன்னீரில் வளரக்கூடிய மீன்களை விடலாம்.
கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, கட்லா, அயிரை, விரால் போன்ற மீன்களை வளர்க்கலாம். அவற்றிக்கு உணவாக கீரை, சாதம், நோய் தாக்காத கோழியின் கழிவுகள் போன்றவற்றை கொடுக்கலாம். நாம் ஒருங்கிணைந்த பண்ணையில் குறைந்த செலவில் உருவாக்கி அதிக லாபம் பெறலாம்.