இல்லத்தரசியின் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக சிறப்பாக மாற்றும் வழிமுறைகள்!

இல்லத்தரசியின் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக சிறப்பாக மாற்றும் வழிமுறைகள்!

நிறைய பேர் தங்கள் சூழ்நிலை காரணமாக வேலைக்கு போக முடியாமல்,ஆனால் வேலைக்கு போக விருப்பதோடு அன்றாட வேலைகளை செய்து கொண்டிருப்போம் அல்லவா ? அப்படி செய்பவர்களில் நிறைய பேருக்கு பெரும்பாலும் தங்களது அன்றாட வேலைகள் முடித்த பின் இருக்கும் நேரத்தை எப்படி பயனுள்ளதாக மாற்றலாம் என்று தெரியாமல் இருக்கலாம் அவர்களுக்காக இந்த பதிவு.

Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
யாராவது நம்மை பார்த்து நீங்கள் வேலைக்கு போயிட்டு இருக்கீங்களானு என்று கேட்கும் போது இல்லை நான் வீட்ல தான் இருக்க வீட்டில் இருந்து வீட்டை கவனித்து கொள்கிறேன் என்று சொல்லும் போது நிறைய பேருக்கு மிகவும் வருத்தமாக இருக்கலாம்.
ஒரு சிறந்த இல்லத்தரசியாக நாள் முழுவதும் உங்களை உற்சாகத்தோடும், மகிழ்ச்சியாகவும், உங்கள் நாளை பயனுள்ளதாக மாற்றி உங்களை புது முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன.

Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை

1.ஒரு நாளின் உங்களது வேலைகளை நேரத்தோடு அட்டவணை போடலாம்:

உங்கள் நாளைக் சரியாக வழிநடத்த உதவும் தினசரி அட்டவணையை அமைக்கலாம் . இது உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.மற்றும் உங்களை தன்னம்பிக்கையுடன், சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பல்வேறு செயல்பாடுகளுக்கு குறிப்பிட்ட நேர இடங்களை ஒதுக்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் உங்களுக்கு ஒரு நாளில் எவ்வளவு நேரம் இலவச நேரமாக கிடைக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

2.ஒரு பொழுதுபோக்கைத் தொடரலாம்:

உங்களுக்கு விருப்பமான ஒரு பொழுதுபோக்கை தெரிந்து கொண்டு, அதாவது நீங்கள் எதில் மீதாவது மிகவும் ஆர்வதோடு இருந்திருப்பீர்கள் அவற்றைத் தொடர நேரம் இருந்திருக்காது, ஆனால் இப்போது கிடைக்கும் நேரத்தை அதில் ஒதுக்குங்கள். அது ஓவியமாக இருக்கலாம் நிறைய பேருக்கு ஓவியம் வரைவது, வனங்கள் தீட்டுவது பிடிக்கும், சமையல் சார்ந்ததாக இருக்கலாம் நிறைய பேர் சமையல் சார்ந்த குறிப்புகள் எழுதுவது, சமையல் சார்ந்த வீடியோக்கள் பார்ப்பது, அவர்களே சமையல் செய்து விடியோவாக இன்டர்நெட்யில் பதிவேற்றம் செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம், தோட்டம் சில பேருக்கு தோட்டம் வளர்ப்பு மிகவும் பிடிக்கும். பிடித்தனமான தொட்டிகள் வாங்கி அதில் வண்ண வண்ண பூச்செடிகள் வாங்கி வளர்க்கலாம்.

வீட்டிற்கு தேவையான கீரை வகைகள், காய்கறிகள், இடம் இருந்தால் பழ வகைகள் கூட வளர்க்கலாம், வாசிப்பு- இன்னும் சில பேருக்கு புத்தகம் படிப்பது என்றால் பிடிக்கும் அவர் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம் தன்னம்பிக்கையும் வளரும், புதிதாக ஓன்றை தெரிந்து கொண்டோம் என்ற உணர்வும் வரும். எழுதுதல், கதைகள், கட்டூரைகள், கவிதைகள், எழுதலாம் அதை பிடித்தவருக்கு பரிசளிக்கலாம் அல்லது நாளிதழுக்கு அனுப்பலாம். இதனால் தங்கள் திறமையும் வெளிப்படும், சில நேரங்களில் பண தேவையும் நீங்கலாம், பின்னல் நிறைய பேருக்கு அழகு குறிப்புகள், சிகை அலங்காரம் போன்றவை பற்றி தெரியும் அதை செய்து பார்க்கலாம், அல்லது மேலும் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம். அல்லது இசைக்கருவியை வாசிப்பது என எதுவாகவும் இருக்கலாம். ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுவது திருப்திகரமாக இருக்கும் மற்றும் சாதனை உணர்வை அளிக்கும்.

Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்

3. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள ஆவலோடு இருங்கள்:

உங்கள் வேலைவாய்ப்புக்கு தேவையான அல்லது உங்கள் திறமையை புதுப்பித்து கொள்ள புதியதைக் கற்றுக்கொள்ள நிறைய வழிகளை உள்ளது . அவை ஆன்லைன் மற்றும் புத்தகங்கள் மூலமாக பெறலாம். ஆன்லைன்யில் நிறைய வசதிகள் உள்ளது அதில் இலவசமாக கிடைக்கும் படிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது ஒரு மொழியாகவோ, கைவினைப்பொருளாகவோ, புதிய செய்முறையாகவோ அல்லது நீங்கள் எப்போதும் பெற விரும்பும் திறமையாகவோ இருக்கலாம். தேடல், கற்றல் என்பது மனதை கூர்மையாக வைத்து புதிய வாய்ப்புகளைத் திறக்கும். உங்களை திறமை மிக்கவராக மாற்றும்.

4. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்:

உங்கள் உடல் மற்றும் மன நலனுக்கு உடல் செயல்பாடு முக்கியமானது. உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியை இணைத்துக் கொள்ளுங்கள். அது காலை நடைப்பயிற்சியாக இருக்கலாம், யோகாவாக இருக்கலாம், நடனம் அல்லது நீங்கள் விரும்பும் எந்த வகையான உடற்பயிற்சியாகவும் இருக்கலாம். நீங்கள் ஆன்லைன் உடற்பயிற்சி வீடியோக்களைப் பின்தொடரலாம் அல்லது உடற்பயிற்சி வகுப்பில் சேரலாம். உடற்பயிற்சி தொடர்ந்து செய்யும் போது நமக்கு உடல் சுறுசுறுப்பாக இருப்பது மட்டும் அல்லாமல் அந்த நாள் முழுக்க நாம் உற்சாகத்தோடு இருப்பதை உணரலாம். உடற்பயிற்சி செய்து நாம் அழகான உடல் கட்டமைப்பை பெறும்போது நமக்கு ஒரு புத்துணர்வும், தன்னம்பிக்கையும் கிடைக்கின்றது.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்

5. மற்றவர்களுடன் இணைந்திருங்கள்:

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் மனதிற்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், இல்லத்தரசிகள் அல்லது ஒத்த ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களுடன் பழகுவதற்கும் தொடர்புகொள்வதற்கும் வாய்ப்புகளைத் தேடுங்கள். நீங்கள் உள்ளூர் சமூகக் குழுக்களில் சேரலாம், ஆன்லைன் மன்றங்கள் அல்லது Workshop-ல் கலந்து கொள்ளலாம் அல்லது தன்னார்வப் பணிகளில் பங்கேற்கலாம்.

இல்லத்தரசியின் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக சிறப்பாக மாற்றும் வழிமுறைகள்!, ThaenMittai Stories

6.மறு சீரமைக்கலாம்:

உங்கள் வீட்டை சீரமைக்க அல்லது அழகாக பராமரிக்க உங்கள் நேரத்தைப் பயன்படுத்தலாம். ஒரு நேரத்தில் ஒரு அறையைச் தேர்ந்தெடுத்து அதை ஒழுங்குபடுத்தி அழகாக அறையை சுத்தம் செய்யும் திறமையை வளர்த்து கொள்ளலாம் இதில் தேவையில்லாத பொருட்களை சேகரித்து நன்கொடையாக வழங்கவோ அல்லது விற்கவோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

7.உணவைத் திட்டமிடலாம் மற்றும் புதிய சமையல் குறிப்புகளை முயற்சிக்கலாம்:

புதிய சமையல் குறிப்புக்களை முயற்சி செய்து உங்கள் உணவை முன்கூட்டியே திட்டமிடலாம். இது உங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சத்தான மற்றும் சுவையான உணவை அனுபவிக்க பயனுள்ளதாக இருக்கும்.

8.சுய கவனிப்பில் ஈடுபடுங்கள்:

உங்கள் உடல் மற்றும் மன நலனை கவனித்துக் கொள்ளுங்கள். தியானம், ஓய்வெடுக்கும் குளியல், உற்சாகமளிக்கும் புத்தகங்களைப் படிப்பது அல்லது அழகு அல்லது ஆரோக்கிய வழக்கத்துடன் உங்களைப் பற்றிக் கொள்வது போன்ற சுய-கவனிப்பு நடவடிக்கைகளைப் பயிற்சி செய்யுங்கள்.

Read Also: சாதிக்க தூண்டும் தங்க தூண்டில் கதை

9.ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடலாம்:

எழுதுதல், கைவினை பொருட்களை செய்தல், பின்னல் அல்லது தையல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுங்கள். இந்த நடவடிக்கைகள் நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும், உங்களது பணத்தேவையும் அது பூர்த்தி செய்து விடும்.

10.உங்களை புதுப்பித்து கொண்டே இருங்கள்:

தற்போதைய நிகழ்வுகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள், புத்தகங்களைப் படிக்கலாம், பாட்காஸ்ட்களைக் கேட்கலாம் அல்லது கல்வி சார்ந்த ஆவணப்படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
நினைவில் கொள்ளுங்கள், உங்கள் வீட்டுப் பொறுப்புகளை கவனித்துக்கொள்வதற்கும் தனிப்பட்ட நலன்களில் ஈடுபடுவதற்கும் இடையே சமநிலையைக் கடைபிடிப்பது அவசியம். உங்கள் வாழ்க்கை முறை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு இந்தப் பரிந்துரைகளைச் சரிசெய்து, உங்கள் நாள் முழுவதும் சுய-கவனிப்பு மற்றும் மன நலனுக்கு முன்னுரிமை அளித்து உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுங்கள். வாழ்த்துக்கள்!

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook