ஏன் வெற்றி பெற்றவர்களின் கதைகளை மட்டும் படிக்கிறார்கள்?

ஏன் வெற்றி பெற்றவர்களின் கதைகளை மட்டும் படிக்கிறார்கள்?

வெற்றிகரமான மற்றும் சாதனை படைத்தவர்களின் கதைகளை பலர் படித்து மகிழ்கிறார்கள். அந்த கதைகள் பெரும்பாலும் அந்த சாதனையாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் கஷ்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிருக்கும். அந்த சவால்களை அவர்கள் எவ்வாறு சமாளித்தார்கள். அவர்கள் அனுபவித்த தோல்விகள் மற்றும் இறுதியில் அவர்கள் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் போன்ற பல நேர்மறையான செய்திகளைக் கொண்டிருக்கும்.
தொழில்முனைவோர் என்பது வெற்றிகரமான வணிகங்கள், தயாரிப்புகள் அல்லது பிராண்டுகளை உருவாக்கும் நபர்கள். தொழில்முனைவோரைப் பற்றி பல கதைகள் உள்ளன. மற்றவர்கள் கற்றுக் கொண்டு வெற்றி பெற அவை பயனுள்ளதாக இருக்கும். ஒரு நிறுவனத்தின் படத்தை உருவாக்கவும், அதை பிரபலப்படுத்தவும் தொழில்முனைவோர் கதைசொல்லலைப் பயன்படுத்துகின்றனர். இது புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் நிறுவனத்தை மேலும் பிரபலப்படுத்தவும் உதவும். உங்கள் கதையைச் சொல்லும்போது அல்லது உருவாக்கும் போது, அதை முடிந்தவரை சக்தி வாய்ந்ததாக மாற்ற இந்த முக்கியமான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றலாம்.

Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்
கதைகள் அனிமேஷன் போன்றவை. உங்கள் வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு நீங்கள் சொல்லும் விதம் முக்கியமானது. வாசகரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளடக்கம், உரை மற்றும் வாக்கியங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். கதைகள் கேட்பவர்களையும், வாசகர்களையும் கவர்ந்திழுக்க வேண்டும். அவர்களை மகிழ்விக்க வேண்டும், உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் மற்றும் தேவையான அனைத்து விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, 1882ல் கையில் வெறும் 400 ரூபாயுடன் கோவையை விட்டு வெளியேறி மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள், இன்று ரூ.3700 கோடிக்கு மேல் மதிப்புள்ள Thyrocare எனும் நிறுவனத்தைத் உருவாக்கி உள்ளார். கதையின் முக்கிய கதாபாத்திரம் யார்? கதையின் முக்கிய கதாபாத்திரம் யார் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திடல் வேண்டும்.

Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை
கதையின் பாத்திரம் எதை அடைய விரும்புகிறது மற்றும் அவரது நோக்கம் என்ன என்பதை விளக்குங்கள். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், "உலகத்தை இணைத்து அதைத் திறக்கச் செய்தல்" என்ற பொன்மொழியை அடிக்கடி குறிப்பிடுகிறார். ஃபேஸ்புக் மூலம் உலகை இணைக்கும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் நோக்கம் மிகவும் லட்சிய நோக்கங்களில் ஒன்றாகும். உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் ஒரு தளத்தை உருவாக்க அவர் விரும்பினார்.
வாழ்க்கையில் நீங்கள் சந்திக்க பல விஷயங்கள் உள்ளன - சில பெரியவை, சில சிறியவை. நீங்கள் தடைகள், தடங்கல்கள், பின்னடைவுகள், தோல்விகள், போராட்டங்கள், வலிகள், புறக்கணிப்புகள் மற்றும் சவால்களை சமாளிக்க வேண்டும். அவற்றை நீங்களே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சவால்களை எப்படி சமாளித்தோம்?, அதை சமாளிக்க என்ன செய்தோம்? என்பதை ஒரு கதையில் சுருக்கமாக சொல்ல வேண்டும்.

Read Also: How To Get Rid of Stress and Succeed?, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?
கதையில் வரும் கதாபாத்திரத்தின் முடிவைச் சொல்ல வேண்டும். அவர்கள் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும், அவர்கள் என்ன செய்தார்கள்?, என்ன சாதித்தார்கள்? போன்றவற்றை தெளிவாக கொடுக்க பட வேண்டும். கதை எளிமையாக இருக்க வேண்டும். மற்றவர்களும் அதை விரைவாக நினைவில் கொள்ள வேண்டும். கதைகளை மகிழ்ச்சியுடன் சொல்லுங்கள். கதைகளை அன்புடன் சொல்ல வேண்டும். ரசித்து, ருசித்து கதையை சொல்ல வேண்டும்.
ஊக்கமளிக்க கூடியதாக இருக்க வேண்டும். ஊக்கப்படுத்தாதவர்களின் கதைகளைக் கேட்க எவரும் தயாராக இல்லை. எவரின் கதைகள் நமக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் மற்றும் தூண்டுதல்களையும் அளிக்கும் நபர்களின் கதைகளைக் கேட்கவும், படிக்கவும் விரும்புகிறார்கள். இந்தக் கதைகள் தரும் உத்வேகம் நம் மனதில் நீண்ட காலத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நிச்சயமாக, சாதனையாளர்கள், அவரது துறையில் அவர் செய்த சாதனைகளை நாம் மறக்க முடியாது. அதேபோல், ஒரு தொழில்முனைவோரின் வாழ்க்கைக் கதை மற்றவர்களுக்கு உத்வேகத்தையும், தூண்டுதல்களையும், மற்றும் ஊக்கத்தையும் அளிக்க கூடியதாக வேண்டும்.

உதாரணத்திற்கு, நீங்கள் KFC ஐ விரும்பாவிட்டாலும், கர்னல் ஹார்லேண்ட் சாண்டர்ஸின் (Colonel Harland Sanders) கதையை கேட்டால் நீங்கள் ரசிப்பீர்கள். அவரது பயணம் உழைக்கும் மக்களுக்கு வெற்றி பெறுவதற்கான தூண்டுதலை கொடுக்கும். விடாமுயற்சியுடன், உங்கள் இலக்குகளை அர்ப்பணித்து, கடினமாக உழைக்க வேண்டியது அவசியம் என்பதை அவரது வாழ்க்கைப் பயணம் நமக்குச் சொல்கிறது. இவற்றைச் செய்தால் எந்த வயதிலும் வெற்றி பெறலாம். கர்னல் சாண்டர்ஸ் தனது கென்டக்கி ஃப்ரைட் சிக்கன் கடையை உலகம் முழுவதும் திறந்துள்ளார்.
கர்னல் சாண்டர்ஸ் KFC சிக்கன் ஃபிரான்சைஸிகளை விற்க ஆரம்பித்தபோது அவருக்கு வயது 65. அவர் தனது முதல் KFC சிக்கன் உரிமையை விற்பதற்கு முன்பு, 1009 உணவகங்களால் நிராகரிப்பு செய்யபட்டார். ஏனெனில் அவர்களுக்கு KFC சிக்கன் உரிமை எங்களுக்கு தேவையில்லை என்று கூறினார்கள். 1009 தோல்விகளுக்கு பிறகு ஒரு உணவகத்திடம் கேஎப்சி (KFC) சிக்கன் உரிமையை விற்றார். கேஎப்சி சிக்கன் சுவையில் மக்களை மயங்கியதால் உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

Read Also: தொழில் முனைவோர்க்கான தகவல்கள்
சாண்டர்ஸ் தனது ஆரம்பகால வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார், ஆனால் அவர் அனைத்தையும் சமாளித்தார். அவரது ஐந்து வயதில் அவரது தந்தை இறந்தார், மேலும் அவரது தாயார் அவருக்கு பன்னிரெண்டு வயதாக இருந்தபோது மறுமணம் செய்து கொண்டார். ஆகையால் அவர் அவருடைய மாமா வீட்டில் வளர்ந்தார். 15 வயது இருக்கும் போது ராணுவத்தில் சேர்ந்து கழுதையை பிடிக்கும் தொழிலாளி ஆனார்.
ஆனால் வெறும் 4 மாதங்களுக்குப் பிறகு, அவர் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். வாழ்க்கையின் முதல் பாதியில் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலை என்று மாறி மாறி செய்தார். காப்பீடு விற்பனை, நீராவி இரயில் என்ஜினில் எரிபொருள் நிரப்புதல், டயர்கள் விற்பனை, விளக்குகளை உருவாக்குதல், மற்றும் படகு ஓட்டுனர் போன்ற பல வேலைகளை செய்தார்.

Read Also: சாதிக்க தூண்டும் தங்க தூண்டில் கதை
1930 இல், 40 வயதில், திரு. KFC கென்டக்கியில் ஒரு உணவகத்தின் மேலாளராகப் பணியாற்றத் தொடங்கினார். இன்று பிரபலமாக இருக்கும் கென்டக்கி ஃப்ரைட் சிக்கன் Kentucky Fried Chicken (KFC) என்ற சிக்கன் டிஷ் செய்தார். அவர் 1956 இல் ஓய்வு பெற்றார், மேலும் அவரது பல வருட பணிக்காக $105 ஓய்வூதியம் பெற்றார்.
இரண்டு ஆண்டுகளாக தங்கள் சிக்கன் உரிமையை விற்க முயற்சித்த அவர் 1009 உணவகங்களின் நிராகரிப்பு பின், KFC சிக்கன் உரிமையை ஒரு ஒரு உணவகத்திற்கு விற்றார். 1965 இல் கர்னல் சாண்டர்ஸ் KFC ஐ பிரவுனுக்கு $2 மில்லியனுக்கு விற்றார். அடுத்த ஒன்பது ஆண்டுகளில், 600 புதிய உணவகங்கள் திறக்கப்பட்டன.

Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
Kentucky Fried Chicken என்பது உலகம் முழுவதும் 20,000 க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்ட ஒரு உணவகம். மெக்டொனால்டுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய உணவக சங்கிலி இதுவாகும். நம்பிக்கை, கனவுகள், விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் எதையும் அடைய முடியும் என்பதற்கு கர்னல் சாண்டர்ஸின் கதை ஒரு எடுத்துக்காட்டு. எந்த வயதிலும் கடினமாக உழைத்து வெற்றியை அடைந்தார்.

வாழ்விற்கு வழிகாட்டும் சிந்தனை வரிகள்
முடியவில்லை என்று மூலையில் முடங்கினால்
மூளை வளர்வதில்லை!
முடியும் என்று முயன்று செய்தால் எந்த மூலையும்
நமக்கு சாலையாக தோன்றும்.
சரியான சாலையில் பயணிக்கும் போது நம்
வாழ்க்கை அழகிய சோலையாக மாறும்!!

Related Tags About Success Person

KFC | Success Stories In Tamil | மார்க் ஜுக்கர்பெர்க் | Facebook | வேலுமணி | Thyrocare | Structure of a Story | Brand Awareness | Story Telling | Colonel Harland Sanders | Kentucky Fried Chicken

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook