மகனுக்குத் தந்தை கொடுத்த மகத்தான விருது
ஆதிகாலத்தில் இருந்தே Chola அரசர்கள் அடிக்கடி சேர நாட்டின் மீதும், ஸ்ரீலங்காவின் மீதும் படையெடுத்துச் சென்று யுத்தம் புரிந்தார்கள் என்பதை வரலாறு நமக்குக் காட்டுகின்றது. பழங்காலத்தின் கல்வெட்டுகள் (Inscription), செப்பேட்டுச் சாசனங்கள், இலக்கியங்கள் (Literature) ஆகியவை இந்தப் போர்களின் வெற்றி மற்றும் தோல்வி பற்றிய தகவல்களை (டேட்டா) கொடுக்கும் ஆவணங்களாகத் திகழ்கின்றன. But, அவற்றில் அந்த யுத்தங்களுக்கான காரணம் என்ன என்பது அநேகமாகக் குறிப்பிடப் படாமல் விடப்பட்டு இருக்கும்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
ஆட்சியைத் தக்க வைப்பதற்காக அல்லது ஆட்சியின் நிலப்பரப்பை விஸ்தரிப்பதற்காக (Extend) ஒரு சில சமயங்களில் யுத்தங்கள் (War) நடைபெற்றன என்றாலும், குறிப்பாக சேர தேசம் மீதும், ஸ்ரீலங்கா மீதும் நடைபெற்ற யுத்தங்களுக்கு முக்கியக் காரணமாகத் தென்படுவது அயல்நாட்டு வர்த்தகம் (Trade) தான். அந்தக் கால கட்டத்தில், வெளிநாட்டு வர்த்தகம் Trade மூலமாகத் தமிழக வணிகர்களுக்கும் மற்றும் மன்னர்களுக்கும் கொழுத்த லாபம் கிடைத்தது.
தமிழகத்தின் மேற்குப் பகுதியில் இருந்த சேர நாட்டின் கொல்லம், முசிறி ஆகிய துறைமுகங்கள் வழியாக எகிப்து, கிரேக்கம் போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு விலைமதிப்பு மிக்க ஏராளமான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மிளகு, பெருங்காயம், சீரகம், கடுகு,மஞ்சள், உப்பு, சுக்கு, ஆமணக்குக் கொட்டை, பாக்கு, பனை வெல்லம், கருப்பட்டி, புளி, எள், பருப்பு, அவரை, சந்தனம், துவரை, அகில், கற்பூரம், புனுகு, பன்னீர், ஜவ்வாது, மெழுகு, சிப்பி, முத்து, நூல் புடவை, பட்டு நூல், பருத்தி, இரும்பு, செம்பு, பொன், வெள்ளி ஆகிய பல பொருள்கள் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பழங்காலத்தில் வெளிநாட்டு வர்த்தகத்தில் சமையல் மற்றும் வாசனைப் பொருள்கள் முக்கிய இடம் பெற்றன.
இந்தப் பொருள்களுக்கு எல்லாம் மாற்று பொருளாக அந்த நாடுகளில் இருந்து தங்கக் கட்டிகள் தமிழகத்திற்கு வந்து குவிந்தன. அரேபிய நாடுகளில் இருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைத் (East Coastal) துறைமுகங்களான மாமல்லபுரம், கடலூர், நாகப்பட்டினம் போன்ற இடங்களில் இருந்து தென்கிழக்கு ஆசிய (South Asian) நாடுகளுக்கு முக்கியமான பொருள்கள் ஏற்றுமதி (Export) செய்யப்பட்டன.
இந்தத் துறைமுகங்களில் Harbor இருந்து புறப்படும் கப்பல்கள் Ship, தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரமாக (East Coastal) பயணித்து முதலில் ஸ்ரீலங்காவை அடையும். பின்னர் அங்கிருந்து நேர் கிழக்காகச் சென்று சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, வியட்நாம், கம்போடியா, சீனா ஆகிய நாடுகளைச் சென்றடையும். கிரேக்கத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது பானங்கள், அரேபிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட குதிரைகள், தமிழகத் துறைமுகங்கள் வழியாகவே தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படடன.
Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
கீழ்த்திசை நாடுகளில் இருந்து இறக்குமதி (Import) செய்யப்பட்ட கற்பூரம், அகில், பெருங்காயம் போன்றவை தமிழகத்தின் மேற்குப் பகுதி துறைமுகங்களில் (Port) இருந்து மேற்கத்திய (Western) நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறு மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரை வழியாக நடைபெற்ற வணிகக் கப்பல் (Commercial Ship) போக்குவரத்து காரணமாக சேர தேசத்தின் துறைமுகங்களும், ஸ்ரீலங்காவில் உள்ள துறைமுகங்களும் (Harbor) மிக முக்கியத்துவம் பெற்று இருந்தன.
சேர நாட்டினையும், ஸ்ரீலங்காவையும் கைப்பற்றுவதன் மூலம், அங்குள்ள எல்லாத் துறைமுகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கிழக்கு (ஈஸ்ட்) மற்றும் மேற்கத்திய நாட்டு வர்த்தகத்தில் (Trade) ஏகபோக உரிமை கொண்டாட வேண்டும் என்று Chozha மன்னர்கள் விரும்பினார்கள். இதன் காரணமாகவே, சேர தேசத்தையும், ஸ்ரீலங்காவையும் தங்கள் குடையின் கீழ்க் கொண்டு வருவதில் சோழ அரசர்கள் அதிக அக்கறை காட்டினார்கள்.
கிங் இராஜராஜன் காலத்திலும் அதே நோக்கம் காரணமாகவே சேர நாட்டின் மீதும், மற்றும் ஸ்ரீலங்கா மீதும் அடிக்கடி போர்கள் நடைபெற்றன. இப்போது ஒடிசா மாநிலம் என்று அழைக்கப்படும் கலிங்கம் வரை சோழ வீரர்கள் படையெடுத்துச் சென்றதற்குக் காரணம், தமிழ்நாட்டின் வடக்கே உள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் (East Coastal Harbor) அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்பது தான். So, அதற்காக நடைபெற்ற போர்கள் எல்லாத்திலும் இராஜராஜனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர், அவரது புதல்வன் இராஜேந்திரன் தான்.
கி.பி.988-ம் ஆண்டு, சேர நாட்டையும் இலங்கையையும் ஒரு சேரத் தாக்கிய மன்னர் ராஜராஜன், அதன் பிறகு வணிக நோக்கத்திற்காக சேர நாட்டின் மீது மீண்டும் படையெடுத்துச் சென்றார். இந்தப் படையெடுப்பில் திருச்சூர் மற்றும் கொல்லம் மாவட்டம் மலபார் கடற்கரையில் பெரிய ஆற்றின் கரையில் உள்ள கொடுங்களூர் ஆகிய துறைமுகங்கள் Harbor கைப்பற்றப்பட்டன. இந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றிகளை அடுத்து, கிருஷ்ணா நதிக்கும், கோதாவரிக்கும் இடையே உள்ள கூர்க் (Coorg) என்று அழைக்கப்படும் குடமலை நாடு மீது இராஜராஜன் போர் தொடுத்து, அந்தப் பகுதி அனைத்தையும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார்.
குடகு நாட்டினை சங்க காலத்தில், 'பொன்படு நெடுவரை’ என்று அழைக்கப்பட்டதாகவும் ஆவூர் மூலங்கிழாரின் புறநானூற்றுப் பாடல் மூலம் தெரிகின்றது. அதாவது அந்த நாடு, பொன் போன்ற தோற்றம் உடையதாம். பொன் போன்ற அப்பகுதியில் மழை பெய்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு வருவதன் காரணமாக, காவிரி நதிக்கு ‘பொன்னி ஆறு’ என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுபடுவதும் உண்டு.
Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
குடகு நாட்டின் வெற்றிக்குப் பிறகு, மன்னர் இராஜராஜன் படைகள், தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் இருந்த தடிகைபாடி, கங்கபாடி, நுளம்பபாடி ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது. தற்போதிய ராயலசீமா என்ற பகுதி, சோழர் காலத்தில் வேங்கி நாடு என அழைக்கப்பட்டது. 9-ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் அந்த நாட்டில் மகன்களுக்குள் ஏற்பட்ட வாரிசுப் போட்டியில் கிங் தாணார்வனன் என்பவர் கொல்லப்பட்டார்.
அவரின் மகன்களான சக்திவர்மனும், விமலாதித்தனும் அங்கு இருந்து உயிர் பிழைத்து, சோழ கிங் இராஜராஜனிடம் தஞ்சம் புகுந்தனர். சக்திவர்மனுக்கு அவரது வேங்கி நாட்டை மீட்டுத் தரும் வகையில், அந்த நாடு மீது கி.பி.999-ம் ஆண்டு ராஜராஜன் போர்தொடுத்தார். இந்தப் போரில் வேங்கியைக் கைப்பற்றிய கிங் இராஜராஜன், அங்கு சக்திவர்மனை மன்னராக ஆட்சியில் அமர்த்தினார்.
அப்போது கீழைச் சாளுக்கியர்களுடன் தொடர்ந்து உறவு Relation வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கிங் இராஜராஜன், தன்னுடைய மகள் குந்தவையை சக்திவர்மனின் தம்பி ஆன விமலாதித்தனுக்குத் கல்யாணம் செய்து கொடுத்தார். (பிற்காலத்தில் குந்தவைக்கும் மற்றும் விமலாதித்தனுக்கும் பிறந்த மகனுக்கு தனது மகளை இராஜேந்திரன் திருமணம் செய்து கொடுத்தார். அந்தத் தம்பதிக்குப் பிறந்தவர் தான் சோழர்களின் மற்றொரு புகழ் மிக்க மன்னரான முதலாம் குலோத்துங்க சோழர் என்பது குறிப்பிடத்தக்கது).
கோதாவரி ஆற்றுக்கும், மகாநதிக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியான கலிங்கம், கீழைச்சாளுக்கிய நாட்டின் வேங்கிக்கு வடக்கே உள்ளது. அந்த நாட்டை குலூதன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர், வேங்கி தேசத்து அரசர் விமலாதித்தனுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இதனால், விமலாதித்தனுக்கு உதவ, ராஜேந்திரன் தலைமையில் பெரிய படை கலிங்கத்தை நோக்கிச் சென்றது. விமலாதித்தன் படைகளும் இதில் சேர்ந்து கொண்டன. குலூாதனை வென்ற ராஜேந்திரன், கலிங்கத்தைச் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
ஏற்கனவே கங்க தேசத்தை வென்ற இராஜேந்திரன், இப்போது வேங்கியையும் வென்றதால், இந்த வெற்றிகளைப் போற்றும் வகையில், அவர் கங்கம், வேங்கி ஆகிய நாடுகளின் மாதண்ட நாயகனாக (அதாவது ஆட்சியின் காப்பாளராக) அறிவிக்கப்பட்டார். அத்துடன், “பஞ்சவன் மாராயன்" என்கிற சிறப்புப் பட்டத்தையும் தனது புதல்வன் இராஜேந்திரனுக்கு மன்னர் இராஜராஜன் வழங்கி பெருமைப்படுத்தினார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்து வட்டம் பாலமூரி என்ற இடத்தில் இருக்கும் கல்வெட்டில் கிங் இராஜராஜனின் புகழைக் கூறும் வாசகங்களுடன் Sentence, இராஜேந்திரன் பெற்ற வெற்றிகளும் விவரிக்கப்பட்டு Expain இருக்கின்றன. அந்தக் கல்வெட்டில் Inscription, "கங்க மண்டலம், வேங்கி மண்டலம் ஆகியவற்றின் மாதண்ட நாயகனாக இருந்த பஞ்சவன் மாராயன் மலயம், துளுவம் ஆகியவற்றை வென்றதோடு சேர மன்னனையும் வென்றார். தெலுகம், ரட்டிங்கம், பல்வால தேசம் ஆகியவற்றையும் தன் ஆற்றலால் வெற்றி கண்ட இவர் (இராஜேந்திரன்), மும்முடிச் சோழன் (இராஜராஜன்) பெற்றெடுத்த களிறு" என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
மன்னர் இராஜராஜன் மிகச் சிறந்த கடற்படையை (Navy) வைத்து இருந்தார். அந்தப் படையை நிர்வகித்ததிலும் அவரின் மகன் இராஜேந்திரனுக்கு மிக முக்கியப் பங்கு இருந்தது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாகக் கடலில் வெகு தூரம் பயணித்து, நடுக்கடலில் உள்ள மாலத்தீவில் போர் நடத்தி, வெற்றிவாகை சூடிய மன்னர் என்ற பெருமையை ராஜராஜனுக்குத் தேடித்தந்த கடல் போர் வித்தியாசமானது. அந்த யுத்தம், இராஜேந்திரன் பிற்காலத்தில் கீழ்த் திசையில் உள்ள நாடுகளை வெல்ல நல்லதொரு அஸ்திவாரமாக அமைந்தது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
வியப்பான வினோதம்
சோழ அரசர்கள் பரம்பரையிலேயே, அரும்பெரும் ஆக சிறந்த சாதனைகளைச் செய்தவர்கள் என்று கொண்டாடப்படுபவர்கள் கிங் இராஜராஜனும் அவரது மகன் இராஜேந்திரனும் ஆவார்கள். தமிழகத்துக் அவர்கள் காலத்தில், படைத் தளபதிகளும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும், மக்களும் அந்த மன்னர்களைப் போற்றி வணங்கினார்கள். அவர்களைப் பெருமைப் படுத்தும் விதமாக அவர்களின் உருவங்களைச் செப்புச் சிலைகளாகவும் (Statue) செய்து வைத்தார்கள். But, இந்த மன்னர்கள் எப்போது, எங்கே, எவ்வாறு மரணம் அடைந்தார்கள் என்ற நினைவுக் குறிப்புகள், எங்குமே யாராலும் பதிவு செய்யப்படவில்லை.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
இந்த மன்னர்கள் புதைக்கப்பட்ட இடம், அல்லது எரியூட்டப்பட்ட இடம் எது என்ற தகவல்கூட செப்பேடுகளிலோ, கல்வெட்டுகளிலோ காணப்பட வில்லை. மன்னர் இராஜேந்திரன் உடல் எரியூட்டப்பட்ட போது, அவரின் மனைவிகளில் ஒருவரான வீரமா தேவி என்பவர் உடன்கட்டை ஏறினார் என்கிற ஒற்றை வரிச் செய்தி மட்டுமே கிடைத்து இருக்கின்றது. காலாகாலத்திற்கும் இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோரின் நினைவு இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் இறந்த இடத்தில் அல்லது சமாதியின் மீது அந்தக் காலத்தில் எவருமே நினைவாலயம் எழுப்பாதது ஏன் என்பது வினோதம் தான். நன்றி தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு!
Related Tags About Chola Nadu
Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.