மொழித்திறன் அவசியம்
இளைஞர்களுக்கு ஆங்கிலம், தமிழில் மொழித்திறன் வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்றால், வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்கள் அதிகம் வளரவேண்டும் என்ற உயரிய நோக்கில், அந்த திசையை நோக்கி தமிழக அரசு வேகமாக முயற்சிகளை எடுத்து வருகிறது. வேலைவாய்ப்புக்களுக்கு தகுதியான இளைஞர்கள் வேண்டும்.
Read Also: மென்திறன் அறிவும், அவசியமும்
அத்தகைய தகுதிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார். அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். மார்ச் 1-ந்தேதி அவருடைய பிறந்த நாளன்று, அவருடைய கனவு திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்து மாணவர்களையும் முதல்வன் ஆக்க உருவாக்கப்பட்ட திட்டம் தான் 'நான் முதல்வன்' திட்டம்.
மொழித்திறமையை வளர்த்துக் கொள்
நீங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளிமிக்கதாக மாற்றும்! மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியையும் பெற்று முன்னேறி, அனைவரும் அனைத்திலும் முதலாவது வந்தார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அனைத்து இளைஞர்களும் கல்வியில், ஆராய்ச்சியில், சிந்தனையில், செயலில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உணர்வோடு உருவாக்கப்பட்டுள்ளது இந்த திட்டம்.
'நான் முதல்வன்' திட்டம்
திறமையில் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இது. மாணவர்கள் கல்வித்திறனில் முதல்வன், அறிவில் முதல்வன், படைப்புத் திறனில் முதல்வன், பன்முக ஆற்றலில் முதல்வன், ஒருவரை மதிக்கத் தெரிந்தவன் சமத்துவமாக நடக்கத் தெரிந்த அனைவரும் பின்பற்று பண்பாட்டு அடையாளம் கொண்டவன், அனைவரையும் வழிநடத்தும் தலைமைத் திறன் கொண்டவன் என்ற சிறப்புகளை ஒவ்வொரு மாணவரும் பெற்றாக வேண்டும் என்ற இலக்கை அடைய உருவாக்கப்பட்ட திட்டம் இது.
Read Also: தாழ்வு மனப்பான்மை நீங்க நடிகர் சூர்யாவின் நிஜ வாழ்க்கை பதிவு
கல்லூரி கனவு நிகழ்ச்சி திட்டம்
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12-வது வகுப்பு படித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைத்த திட்டம், “கல்லூரி கனவு நிகழ்ச்சி” திட்டம் ஆகும். மாணவர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், எந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்?, எதிர்கால வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? என்று எடுத்துக்கூறி வழிகாட்டுவதற்கான வாய்ப்பு தான் இந்த கல்லூரி கனவு நிகழ்ச்சி திட்டம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திறன் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் இணைய தளம் மூலம் மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து பயிற்சி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நம்முடைய மொழித்திறன் அவசியம் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு மாணவர்களுக்கு நல்ல வழியைக் காட்டுவதாகவும், எதிர்காலத்தை ஒளிமிக்கதாக ஆக்குவதற்கு கொண்டு செல்வதாகவும் அமைந்துள்ளது. தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் தாய் மொழி, ஆங்கிலம் உலகத்தோடு இணைக்கும் மொழி. இந்த இரு மொழிகளிலும் எழுத, படிக்க, பேச மாணவர்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
மொழி ஆற்றலில் செழுமை வேண்டும்
மொழி ஆற்றல் நன்றாக இருந்தால் தான் மாணவர்களின், இளைஞர்களின் வளர்ச்சியை அது வானளவுக்கு உயர்த்தும். கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் கலை மற்றும் அறிவியல், பொறியியல் மாணவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது ஆங்கில பேச்சாற்றல். வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போதும் சரி, வேலை கிடைத்த பிறகும் சரி இன்றைய பணிச்சூழலில் ஆங்கில பேச்சாற்றல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆகையால், “ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியாகும் நாளிதழ்களையும், புத்தகங்களையும் தொடர்ந்து வாசியுங்கள். இதை ஒரு பழக்கமாகவே மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
Read Also: டேட்டா சயின்ஸ் படிப்பும் மற்றும் வேலைவாய்ப்பும்
மாணவர்களுக்காக முதல்-அமைச்சர் தொடங்கியுள்ள திட்டங்களும், அவர் கூறிய அறிவுரைகளும் நிச்சயமாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பயனளிப்பது மட்டுமல்ல, அனைவருக்கும் வேலை என்பது மட்டுமல்ல, அனைவருக்கும் தகுதியான வேலை என்ற பிரகாசமான எதிர்காலத்துக்கு கொண்டு செல்லும். அனைத்து மாணவர்களும் தமிழிலும், ஆங்கிலத்திலும் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மொழியின் சிறப்பு
மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தும் சிறப்பம்சம் மொழித்திறன் ஆகும். சமுதாய பண்பாடு உயர்ந்த நிலையை எட்டுவதற்கு மொழியே காரணமாகும். நமது சிந்தனை, செயல், கனவு, தியானம், மற்றவரோடு உரையாடுதல், தகவல் தொடர்பு என அனைத்திலும் மொழியே இடம் பெறுகிறது. மனிதர்களுக்கு இடையிலான தகவல் தொடர்பில் மொழியே சிறப்பிடம் பெறுகிறது. மொழி மனிதனின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றினையும் ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்று விளங்குகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்களும், அறிவுரைகளும் அடையும் வெற்றியும், தமிழ்நாட்டின் இளைய சக்தி இணையற்ற சக்தியாக மாறுவதும், கல்வித்துறை மற்றும் மாணவர்களின் கையில் தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்வதற்கு உள்ளம் உயர்வாக இருக்க வேண்டும். அதற்கு மக்களின் குறை நிறைகளை கண்டறிந்து செயல் படுவோரின் எண்ணம் எப்போதுமே உயர்வாகத் தான் இருக்கும்.
தற்போது நம் இந்தியாவில் இருக்கும் வேலை இல்லா திண்டாட்டத்தைப் போக்க அரசு பணிகளால் (Govenment Jobs) மட்டும் நிச்சயமாக முடியாது. இது யானை பசிக்கு சோளப்பொறி போன்றதாகும். இதில் தனியார் பங்களிப்பு தான் மிக மிக அவசியமானது. நிறைய வேலைவாய்ப்புகளை தரும் கனரக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைத் தனியார் தொடங்க சலுகைகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். மேலும் படித்தவர்கள் வேலை தேடி அங்கும் இங்கும் அலைந்து செல்பவர்களாக இல்லாமல், அவர்களே வேலை வாய்ப்புகளை உருவாக்கி மற்றவர்களுக்கு வேலை வழங்கும் சுய தொழில்களை தொடங்க வேண்டும். அதற்கேற்ற விழிப்புணர்வுகளையும், தேவையான சலுகைகளையும், உதவிகளையும் வழங்கிட வேண்டும்.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.
Read Also: Information For Entrepreneurs In Tamil, தொழில் முனைவோர்க்கான தகவல்கள்