Former Police DGP M.Ravi Has Warned About Cyber Crime | Cyber Crime Problems and Solutions

Information Technology

இந்தியாவில் தகவல் தொழிநுட்பம் (Information Technology) குறுகிய காலத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து விட்டது. இன்றைய கால கட்டத்தில் நாம் முன்னேற்றத்திற்கு இணையத்தின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அதற்கு ஏற்றார்போல் ‘சைபர் கிரைம்’ (Cyber Crime) என்று சொல்லப்படுகின்ற இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

Read Also: Information For Entrepreneurs In Tamil, தொழில் முனைவோர்க்கான தகவல்கள்

Cyber Crime Problems and Solutions

‘சைபர் கிரைம்’ (Cyber Crime) எச்சரிக்கைத் தொடரில் பல்வேறு 'சைபர்' குற்றங்கள் குறித்து எச்சரித்து எழுதி வந்துயுள்ளார் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி. சைபர் கிரைம் (Cyber Crime) எச்சரிக்கைத் தொடரின் கடைசி கட்டுரை இது என்பதால், அவர் இதுவரை எழுதிய அனைத்து 'ஆன்லைன்' ஆபத்துக்கள் மற்றும் ‘சைபர்’ குற்றங்கள் குறித்து இதில் தொகுத்து எழுதியுள்ளார். அவற்றை பற்றி சுருக்கமாக இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
Former Police DGP M.Ravi has warned about Cyber Crime

Social Media Networks

பெண்கள், இளைஞர்கள் போன்றோர் அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் (Social Media Networks) அளவுக்கு அதிகமாக நேரம் செலவிடுவதால் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள் குறித்து தொடக்கத்திலேயே விளக்கியுள்ளார். மாணவச் செல்வங்கள் 'ஆன்லைன்' விளையாட்டுக்களில் (Online Game) மூழ்கினால், அது மனச்சிதைவு நோயாக மாறிவிடும் ஆபத்து குறித்து கவலையோடு பகிர்ந்துள்ளார்.

Blackmailer

புதிது, புதிதாக முளைக்கும் கொரோனா வைரஸ் 'வேரியண்ட்டுகளைப் போன்று, ‘சைபர்’ கிரிமினல்கள் புதுப்புது தொழில்நுட்ப அவதாரம் எடுப்பதால், 'சைபர்' மோசடிகள் குறித்து அனைவரும் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். புகைப்படங்களை ‘மார்பிங்' செய்வதற்கான செயலிகள் எளிதாக கிடைப்பதால், முன்னாள் நண்பர்கள் கூட 'மார்பிங்' 'பிளாக் மெயிலர்’களாக மாறி சில பெண்களை வதைப்பது, வளைப்பது பற்றி விளக்கி உள்ளார்.

Read also: டேட்டா சயின்ஸ் படிப்பும் மற்றும் வேலைவாய்ப்பும்

Cyber Crime Hacker

உங்களது செல்போன் அல்லது Laptop கேமராக்களையே பயன்படுத்தி, உங்களது அந்தரங்க தருணங்களை 'ஹேக்கர்’கள் (Hackers) படம்பிடித்து உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் எச்சரித்துள்ளார். டி.ஜி.பி.க்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் பல பிரபலங்களின் பெயர்களில், அவர்களது புகைப்படங்களுடன் போலி அக்கவுண்டுகளை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் பற்றி எச்சரித்துள்ளார்.
Cyber Crime Problems and Solutions

ஆன்லைன் சூதாட்டங்கள்

ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி செயல்படும் பல 'டுபாக்கூர்’ கடன் செயலிகள், பயனர்களை 'பிளாக்மெயிலிங்' செய்து அநியாய வட்டி வசூலிப்பது பற்றி விரிவான தகவல்களுடன் பதிவிட்டு உள்ளார். ஆரம்பக் கட்டத்தில் உங்களுக்கு சிறு வெற்றிகள் தந்து ஆசைகாட்டும் 'ஆன்லைன்' சூதாட்டங்களில் உங்களுடன் ஆடுவது தனிநபர் அல்ல, ஆயிரம் பேரின் மூளை வலிமைகொண்ட ‘கம்ப்யூட்டர் புரோகிராம்' என்பதால், இறுதியில் தோற்பதும் ஓட்டாண்டி ஆகப்போவதும் நீங்கள் தான் - ஏமாறாதீர்கள் என்று விளக்கி உள்ளார்.

Crypto Currency

'பிட் காயின்’ (Bitcoin) போன்ற ‘கிரிப்டோ கரன்சிகளை' எலான் மஸ்க் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் ஆதரித்தாலும் கூட, எந்த ஒரு அரசாங்கத்தாலும் கட்டுப்படுத்தமுடியாத 'கிரிப்டோ கரன்சி’களில் (Crypto Currency) ஏழை, நடுத்தர குடும்பத்தினர் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அழகிய பெண்களின் புகைப்படங்களுடன் சில ‘ஆன்லைன்' திருமண தகவல் மையங்கள் (Matrimony Sites) விதவிதமாக மோசடி செய்வது குறித்த பல தகவல்களுடன் அம்பலப்படுத்தி உள்ளார்.

Online Job Scams

பிரபல வங்கிகளின் தலைமையகத்திலிருந்து பேசுவது போல் பேசி, உங்களது வங்கி விவரங்களை கேட்டுவாங்கி கொள்ளையடிக்கும் 'சைபர்' கிரிமினல்களைப் பற்றி பல சம்பவங்களுடன் விளக்கி உள்ளார். நல்ல சம்பளத்துடன் வேலைவாங்கித் தருவதாக ஆசைகாட்டி, 'அட்வான்ஸ்' தொகை கட்டச்சொல்லி பணம் பறிக்கும் 'ஆன்லைன்' வேலைவாய்ப்பு மோசடிகள் (Online Job Scams) குறித்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளார்.
Cyber Crime Issues and Challenges

Remote Desktop Applications

உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, நமது கம்ப்யூட்டர்களின் குறைபாடுகளை சரிசெய்வதற்கான தொலைநிலை அணுகல் (Remote Desktop Applications) TeamViewer, AnyDesk போன்ற செயலிகளை தவறாகப் பயன்படுத்தி, நமது கம்ப்யூட்டரில் உள்ள வங்கி கணக்கு (Bank Account) உள்ளிட்ட ரகசிய தகவல்களை திருடும் 'சைபர்' கிரிமினல்கள் பற்றி எச்சரித்துள்ளார்.

Dating App

'வாட்ஸ் அப்' (WhatsApp) போன்ற தளங்கள் மூலமாக, முன் பின் தெரியாத யாராவது ஒருவர் 'கியூ.ஆர்' குறியீடுகளை (QR Code - Quick Response Code) அனுப்பி அதனை 'ஸ்கேன்' செய்யுமாறு கேட்டால் திட்டவட்டமாக மறுத்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார். 'டேட்டிங்' செயலிகள் (Dating App) வெளியிடும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து இளைஞர்கள் ஏமாறவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுடன், இந்த 'டேட்டிங்' செயலிகளை பின்தொடர்ந்து வரும் 'பிளாக்மெயில்' (Blackmail) கும்பல்களிடம் உங்கள் பணத்தையும் மானம், மரியாதையையும் இழக்காதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.

Payment App

ஆபாசப் படங்களை ‘ஆன்லைனில்’ (Online) பார்த்ததால், உங்களது பிரவுசர் (Browser) முடக்கப்பட்டுள்ளதாக பயனரை எச்சரிக்கும் போலியான 'பாப்-அப்' (Pop Up) விளம்பரங்கள் மூலமாக நடைபெறும் 'பிளாக்மெயில்' (Blackmail என்பது பயமுறுத்தி பணம் பறித்தல்) மோசடிப் பற்றி விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். 'ஜிபே' (GPay), 'பேடிஎம்' (Paytm) போன்ற 'யூபிஐ' (UPI) 'பேமெண்ட்' (Payment) செயலிகளை பயன்படுத்தி ‘சைபர்' கிரிமினல்கள் பணம் பறிப்பது பற்றி சம்பவங்களுடன் விளக்கியுள்ளார்.
'பேமெண்ட்' செயலிகளின் 'பாஸ்வேர்ட்’ 'கியூ.ஆர்' கோடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். 'சைபர்'கிரிமினல்களிடம் சிக்கிக்கொண்ட ஏராளமானவர்களின் வழக்குகளை காவல்துறைப் பணியின்போது கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில், இனியாவது மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்ற அக்கறையுடன் இந்த தொடரை எழுதி உள்ளார்.
The Challenges and Solutions of Cyber Security, ThaenMittai Stories
சாதாரண மனிதர்களாகிய எங்களுக்கு இந்த தொடர், மிகச்சிறந்த எச்சரிக்கை உணர்வை விதைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது! நான் ஒரு வாசகராக வாரந்தோறும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். "சைபர் க்ரைம்" கிரிமினல் செயல்பாடுகளில் அடுத்து என்ன விடயத்தை பற்றி எழுத உள்ளீர்கள் என்று வாரந்தோறும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். இதுவரை 20 வாரங்களாக "சைபர்" குற்றங்கள் குறித்து எச்சரித்து எழுதி உள்ளீர்கள். நன்றி முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Kerala Coolie Cracks IAS Exam Uses Free Wi-Fi at Railway | IAS கனவை நனவாக்கிய போர்ட்டர்
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook