A Young Woman Revolutionizing The Dairy Farming | பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்

பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம்பெண் Shraddha

எருமை மாடுகள் வளர்த்து பால் வினியோகம் செய்வதை இலாபகரமான தொழிலாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினர்க்கு அவர் ஒரு ரோல் மாடலாக திகழ்கிறார். மிக இளம் வயது பெண் (22) ஷ்ரத்தா தவான் ஆவார். பால் வியாபாரம் தான் இவர்களின் குடும்ப தொழில். இவர்கள் வீட்டில் 6 எருமை மாடுகளுக்கு மேல் இருந்ததில்லை. ஷ்ரத்தாவின் முயற்சியால் 80-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் கொண்ட பண்ணை உருவாக்கி உள்ளார்கள்.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
இவரின் தந்தை பால் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்பட்ட நிலையில் இன்று பால் பண்ணையாக (Dairy Farming) உருமாற்றிவிட்டார். அதனை லாபம் ஈட்டும் மற்றும் தன்னுடைய குடும்ப தொழிலாகவும் மாற்றி சாதித்துக் கொண்டிருக்கிறார். ஷ்ரத்தா தவானின் பூர்விகம் மகாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரில் இருந்து 60 KM தொலைவில் இருக்கும் நிகோஜ் கிராமம் ஆகும். 1998-ம் ஆண்டு அவர்களின் குடும்பத்தில் (Family) ஒரே ஒரு எருமை மாடு மட்டுமே இருந்தது. அதுதான் அவருடைய அப்பா சத்யவானுக்கு வருமானம் தரும் ஒரே நம்பிக்கையாக இருந்திருக்கின்றது.
எருமை பால் வியாபாரம் மூலம் எருமை மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினாலும் அவரால் 6 எருமை மாடுகளுக்கு மேல் வாங்க முடியவில்லை. அவர் ஒரு மாற்றுத் திறனாளியாக இருந்த காரணத்தால், எருமை மாட்டு பால் கறப்பதற்கும் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். வயது அதிகரிக்க தொடங்கியதும் அவரால் சுறுசுறுப்புடன் இயங்க முடியவில்லை. அவர் பால் கறந்து விற்கும் பொறுப்பை தன்னுடைய மகள் ஷ்ரத்தாவிடம் ஒப்படைத்திருக்கிறார்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
என் தந்தையால் இருசக்கர வாகனம் ஓட்ட முடியாது. என் சகோதரன் என்னை விட வயது குறைந்தவன். அதனால் அவனிடம் பொறுப்புகளை ஒப்படைக்க முடியாது. அப்போது எனக்கு 11 வயது. அந்த வயதிலேயே கடினமான வேலைகளை செய்ய பழகிவிட்டேன். எங்கள் கிராமத்தில் இளம் வயதிலேயே குடும்ப பொறுப்புகளை சுமந்த பெண் நானாக தான் இருப்பேன் என்கிறார் ஷ்ரத்தா. இவரது பள்ளி தோழிகள் அனைவரும் காலையில் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகும் வேளையில், ஷ்ரத்தா இருசக்கர வாகனத்தில் பல்வேறு பால் பண்ணைகளில் எருமை பாலை கொடுக்க செல்வார். குடும்ப வருமானத்திற்காக தினமும் பால் வியாபாரம் செய்து கொண்டே பள்ளி படிப்பை தொடர்ந்திருக்கிறார்.

80 எருமை மாடுகள்

எவ்வித தயக்கமுமின்றி பால்பண்ணைத் தொழிலில் ஆர்வமுடன் முழுமையாக ஈடுபட்டு வந்திருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இரண்டு மாடிக் கட்டிடத்தில் 80 எருமை மாடுகளை வளர்த்து வரும் அளவிற்கு அவரை உயர வைத்திருக்கிறது. அந்த சுற்று வட்டார பகுதிகளிலேயே ஷ்ரத்தாவின் மாட்டுக் கொட்டகைதான் மிகப்பெரியது. கான்கீரிட் கட்டிடத்தில் எருமை மாடுகள் வளர்க்கப்படுவதும் அதனை ஒரு பெண் நிர்வகிப்பதும் பெருமை கொள்ள வைத்திருக்கிறது. ஷ்ரத்தாவின் தன்னம்பிக்கையையும், உழைப்பையும் பலரும் பாராட்டுகிறார்கள். இன்று அவரது குடும்பத்தின் வருமானம் அதிகரித்துள்ளது.

Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
Dairy Farming பொறுப்புகளை Daddy என்னிடம் ஒப்படைத்த நேரத்தில் தான் அந்த தொழில் நன்றாக வளர தொடங்கியது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டதால் அதிக எருமை மாடுகள் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாகிவிட்டன என்று விவரிக்கும் ஷ்ரத்தாவுக்கு, 2013-ம் ஆண்டு பெரிய பால் கேன்களை எடுத்துச்செல்வதற்கு மோட்டார் சைக்கிள் அவசிய தேவையாக இருந்திருக்கிறது. உடனே மோட்டார் சைக்கிள் வாங்கிவிட்டார். அதே ஆண்டில் எருமை மாடுகளின் எண்ணிக்கை அதிகமானதால் அதனை பராமரிப்பதற்காக ஒரு ஷெட்டும் கட்ட வேண்டியிருந்தது. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.
ஷ்ரத்தா தவான் பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம்பெண், ThaenMittai Stories

பைக் ஓட்டும் பெண்ணை பார்த்ததில்லை

2016-ம் ஆண்டு எங்களிடம் 45 மாடுகள் இருந்தன. ஒரு பெண் மோட்டார் சைக்கிள் ஒட்டிச்சென்று பால் விற்பதை நான் இதுவரை எங்கள் ஊரில் பார்த்ததில்லை. கிராமத்தில் சிலர் என்னை நினைத்துப் பெருமைப்படுவார்கள். உற்சாகப்படுத்துவார்கள். என் வேலையை நான் நேசிப்பதற்கும், தன்னம்பிக்கையோடு செயல்படுவதற்கும் அவர்களுடைய வார்த்தைகள் உதவியாக இருக்கின்றன என்று நெகிழ்வுடன் சொல்கிறார் ஷ்ரத்தா. எருமை மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க கூடுதல் வேலைகளும் சேர்ந்து கொண்டன. தீவனத் தேவைகள் அதிகரித்தன. தீவனத்தின் தேவை குறைவாக இருந்தபோது அதை ஷ்ரத்தா குடும்பத்தினரே தயாரித்துக் கொண்டார்கள். கூடுதலாகத் தீவனம் வாங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டதால் அதற்கான செலவும் அதிகரித்தது. அதனால் கிடைக்கும் லாபம் குறைந்தது.

மாதம் 6 லட்சம் ரூபாய்

இருந்தபோதிலும் எருமை மாடுகளுக்கு இயற்கை வழி தீவனங்களையே கொடுத்து வருகிறார்கள். தினமும் இரண்டு முறை மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்கிறார்கள். எருமை மாடுகளிடம் இருந்து பால் கறப்பதற்கும் ஷ்ரத்தா கற்றுக்கொண்டுவிட்டார். ஒவ்வொரு நாளும் 20 மாடுகளில் பாலைக் கறக்கிறார். இப்போது ஷ்ரத்தாவின் பண்ணையில் 80 எருமை மாடுகள் உள்ளன. தினமும் 450 லிட்டர் பால் விற்பனை செய்கிறார். அவரின் மாத வருமானம் ரூபாய் 6 இலட்சங்களுக்கு மேல் உயர்ந்துள்ளது.

Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
இளம் தொழிலதிபரான ஷ்ரத்தா, அவரது கிராமத்தில் இருந்தே இயற்பியல் பாடப்பிரிவில் முதுகலை படித்து வருகிறார். அவர் வெளியூர் சென்று கல்வி கற்க முடியவில்லையே என்ற எந்த ஒரு கவலையும் இல்லை. தொடக்கத்தில் படிப்பையும் பார்த்துக்கொண்டு பால் பண்ணையைப் பராமரிப்பது பெரும் சவால் நிறைந்த பணியாக இருந்தது. இப்போது பழகிவிட்டேன். என்னிடம் தாழ்வுமனப்பான்மை இல்லை. என் வெற்றியைத் தடுக்கும் எந்த விஷயமும் என்னிடம் இல்லை. எல்லா பயங்களில் இருந்தும் என்னால் மீண்டு வர முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார், இளம்பெண் ஷ்ரத்தா!.
எந்த தொழில் செய்தாலும் தன்னம்பிக்கையோடு, விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட்டால் எத்தகைய கடினமான சுழ்நிலையும் கடந்து கற்றுக்கொண்டு நிச்சயம் வெற்றி பெற முடியும். மீண்டும் மீண்டும் செய்கிற சின்ன சின்ன வேலைகள் கூட உங்கள் தன்னம்பிக்கையை ஊற்றாக அதிகரிக்க செய்யும். எருமை மாடுகள் ஷ்ரத்தாவை பெருமை பட வைக்கிறது என்றால் ஆச்சரியமில்லை!.

Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்

Related Tags

Motivational Stories Tamil | Short Motivational Stories In Tamil | Motivation Stories In Tamil | Moral Stories In Tamil for College Students | Success Stories In Tamil | Motivational Stories In Tamil for Students | True Motivational Stories In Tamil | Inspiring Story In Tamil | Tamil Story Motivation | Motivation Tamil Story | Student Motivational Story In Tamil | Motivational Success Stories In Tamil | Tamil Motivational Short Stories | Positive Stories In Tamil | Motivational Success Stories | Tamil Motivation Stories | Real Life Motivational Story In Tamil | Motivational Real Life Stories In Tamil | Business Motivational Story In Tamil.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook