செல்பி மரணம் பற்றிய விழிப்புணர்வு கதை
அவன் ஒரு YouTuber அதுவும் Motivational கதைகளை சொல்லும் YouTuber. அவன் மற்றும் அவனுடைய மனைவியும் ஒரு வெளியூர்க்கு சுற்றுலாச் சென்றார்கள். அந்த சுற்றுலாவில் இயற்கையின் அழகை பார்த்து ரசித்தார்கள். அங்கே அடர்ந்த காடுகளும், உயர்ந்த Trees, மரங்களைச் சுற்றி செடி கொடிகளும் இருந்தது. அது ஒரு இளவேனில் காலம் என்பதால் அந்த செடி, கொடி, மரங்களில் இருந்த பூக்கள் எல்லாம் பூத்து குலுங்கியது.
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
பூக்களிலிருந்து வரும் வாசனை சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லை இந்த கதையில் வரும் தேனீக்களையும் கவர்ந்திழுக்கின்றன. அதனை அந்த YouTuber மற்றும் மனைவியும் பக்கத்தில் இருந்த சிறிய பாறையின் மீது ஏறி இயற்கையின் அதிசயங்களை பார்த்து ரசிக்கிறார்கள். அவர்கள் மட்டும் ரசிக்கவில்லை. அவர்களது கைகளில் தவழும் கைபேசியும் அந்த எழில் நிறைந்த காட்சிகளைப் பார்த்து ரசித்தன.
மேலும் அவர்கள் மலர்ந்த பூவினை நுகர்ந்த படியே அவர்களின் செல்போன்களில் அந்த பூக்களை வீடியோவாக பதிவு செய்தார்கள். வீடியோவாக எடுத்துக் கொண்டிருக்கும் போதே தேனீக்கள் ரீங்காரமிட்டு அந்த பூக்களில் உட்கார்ந்து தேனீனை உறிஞ்சிக்கிறது. இந்த காட்சியினை அவர்களின் செல்போனில் ZOOM செய்து வீடியோவாக எடுத்தார்கள். தேனீக்கள் பறந்து சென்று தேனீனை உயரமான பாறை இடுக்குகளில் உள்ள தேன்கூட்டில் வைக்கிறது. இந்த காட்சிகளையும் அந்த YouTuber செல்போனின் வழியே படம் எடுத்தார்.
இதேபோல மற்ற சுற்றுலாப் பயணிகளும் இயற்கையின் அந்த இரம்மியமான காட்சிகளை கண்டு கழித்தார்கள். உயரமான அருவியிலிருந்து கொட்டும் நீர்விழ்ச்சிகளையும், ஆற்றில் துள்ளிக்குதித்து விளையாடும் மீன்களையும் அவரவர் செல்போன்களில் போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்தார்கள். அதில் ஒரு சுற்றுலாப் பயணி ரொம்ப உச்சியிலிருந்து/உயரமான இடத்திலிருந்து செல்பி எடுக்க நினைத்தான்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
அந்த உயரமான பாறையின் மீது ஏறி சலசலவென கொட்டும் நீர்வீழ்ச்சிக்கு மிக அருகிலேயே ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்று முயல்கிறான். அந்த உயரமான பாறைகளில் ஏறும்போது கொஞ்சம் கால் தவறினாலும் மரணம் தான் முடிவாக மாறக்கூடும் என்பதையும் அந்த YouTuber தெரிந்துக் கொள்கிறான். இத்தனை காட்சிகளையும் அந்த YouTuber தனது செல்போன் வழியாக வீடியோ எடுக்கும்போது எதார்த்தமாக பார்த்தான். அதே உயரமான பாறை இடுக்குகளில் தான் அந்த தேனீக்களால் கட்டப்பட்ட தேன்கூடும் இருக்கிறது.
அந்த YouTuber, அந்த தேன்கூட்டினை (Honeymoon) Cell Phone வழியாக Video எடுக்கும் போது தான் தெரிந்துக் கொள்கிறான். அந்த உயரமான பாறையின் கீழ்பக்கத்தில் ஓர் அறிவிப்பு பலகை இருக்கிறது. "இந்த பறையானது மிகவும் ஆபத்து நிறைந்தது ஆகும். அதில் யாரும் ஏற வேண்டாம்" என்று எழுதப்பட்டிருந்தது. But அந்த ஆபத்தை உணராமல் அந்த Tourist Person பாறையின் மீது ஏற முயற்சிக்கிறான்.
இதைப் பார்த்த யூட்டுபேர் (YouTuber) அந்த சுற்றலாப் பயணியை உயரமான பாறையின் மீது ஏறாமல் தடுத்தாக வேண்டும் என்று யோசித்தான். அவனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று யோசிக்கிறான். அந்த YouTuber இருக்கும் இடமும், அந்த சுற்றலாப் பயணி இருக்கும் இடமும் கொஞ்சம் தூரம் என்பதால் அருகில் செல்ல முடியவில்லை. அந்த சுற்றலாப் பயணியை அந்த பாறையில் ஏறாமல் தடுப்பதற்கு அந்த YouTuber-க்கு ஒரு யோசனை தோன்றியது.
அவனுடைய மனைவியை அந்த சிறிய பாறையிலிருந்து கீழே இறங்க சொல்கிறான். கீழே இறங்கிய பிறகு அங்கிருந்த சின்னச் சின்ன கற்களை எடுத்து கொடுக்க சொன்னான். அந்த கற்களை கையில் வாங்கி அந்த உயரமான பாறை இடுக்குகளில் இருந்த தேன்கூட்டினை நோக்கி எறிந்தான். அந்த தேன்கூடானது கலைக்கப்பட்டு தேனீக்கள் முதலில் அந்த உயரமான பாறையில் ஏற முயற்சித்துக் கொண்டிருந்த அந்த சுற்றலாப் பயணியை கொட்ட தொடங்கியது.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்அந்த குறிப்பிட்ட சுற்றலாப் பயணி கடவுளே! 'தப்பித்தோம், பிழைத்தோம்' என்று ஓடோடி வந்தான். தேனீக்கள் தொடர்ந்து கொட்ட தொடங்கியதால் அந்த சுற்றுப் பகுதியில் இருந்த YouTuber, அவனுடைய மனைவி மற்றும் மற்ற சுற்றலாப் பயணிகளும் அங்கிருந்து ஓடுகிறார்கள். பிறகு தீயணைப்பு துறைக்கு போன் செய்தார்கள். தீயணைப்பு வீரர்கள் வந்து அவர்கள் எல்லோரையும் காப்பாற்றுகிறார்கள்.
YouTuber மனதுக்குள் நினைத்துக் கொள்கின்றான். Selfie எடுக்க நினைத்த அந்த Tourist Person-யை காப்பாற்ற நினைத்தார். ஆனாலும் மற்ற சுற்றலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டு விட்டார்களே என்று நினைத்தார். ஆகையால் அந்த தேன்கூட்டினையும் கலைத்து விட்டமே என்றும் வருத்தப்படுகின்றார். இருந்தாலும் ஒரு மனிதனின் உயிரை காப்பாற்றிவிட்டோமே என்ற மன நிம்மதியில் YouTuber மற்றும் அவன் மனைவியும் வீட்டுக்கு திரும்பினார்கள்.
அந்த YouTuber மறுநாள் செய்தியில் பார்க்கிறான். பார்த்தவுடன் ரொம்பவே அதிர்ச்சி அடைகிறான். ஏனென்றால் அவன் நேற்று சென்று வந்த அதே சுற்றலா தளத்தில் அதே உயரமான பாறையிலிருந்து செல்பி எடுக்கும் போது ஒரு சுற்றுலாப் பயணி தவறி விழுந்து மரணமடைந்து விட்டார். அங்கேயே தேனீக்கள் சுற்றிக் கொண்டிருப்பதால் தீயணைப்பு வீரர்கள் அவரின் சடலத்தை தேடும் பணியில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்கள். எப்படி மரணம் ஏற்பட்டது என்று யோசிக்கிறான்.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
அவன் தேன்கூட்டினை கலைத்து விடுவதற்கு முன்பே வேற ஒரு சுற்றலாப் பயணி அந்த உயரமான பாறையின் மீது ஏறி செல்பி எடுத்த புகைப்படங்களை அவனுடைய நண்பர்களுக்கு அனுப்பியுள்ளான். அவனுடைய நண்பர்கள் அவனுக்கு போன் செய்கிறார்கள். "அந்த பறையானது மிகவும் ஆபத்து நிறைந்த பாறையாகும், உடனே கீழே இறங்கி விடு" என்று சொல்வதற்காக போன் செய்கிறார்கள். அந்த சுற்றுலாப் பயணி செல்போனை எடுத்து பேசுவதற்கு முன்பே தவறி விழுந்து இறந்து விடுகிறான்.
இயற்கையை கண்டு ரசிப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஆனால் இயற்கையின் பேராபத்தை உணராமல் 'செல்பி' என்னும் மோகத்தால் உயிரை மாய்த்து கொள்ளுவதை அந்த இயற்கையே(தேனீக்கள்) விரும்புவதில்லை. நாம் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இயற்கையை நேசிப்போம். செல்பி மரணங்களை தவிர்ப்போம்!.Selfie-Deaths, SafeSelfie
Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.