உலக புகழ் பெற்ற இலக்கிய மாமேதை
ஒரு 13 வயது பையன் ரொம்ப கஷ்டப்படுகிற குடும்பம். பள்ளிப்படிப்பு கூட படிக்க முடியவில்லை. தொடர்ந்து வீட்டில் பயங்கரமான ஏழ்மை அதனால் தொடர்ந்து பல நாட்களாக பசி சாப்பிடவே இல்லை; உணவு கிடைக்கவில்லை. வேலை தேடித் தேடி அலுத்துப் போறான். அலுத்துப்போய் கண்கள் எல்லாம் சொருகி பசி மயக்கம் அடைந்து போனான். ஒரு நாடகக் கொட்டகை வாசலில் கண்கள் எல்லாம் சுருங்கி போய் தடதடவென வந்து சோர்ந்து உட்கார்ந்து இருந்தான்.
அப்பொழுது அந்த நாடகக் கொட்டகைக்கு நாடகம் பார்ப்பதற்காக குதிரை வண்டியில் ஒரு பணக்காரர் வந்து போவது வழக்கம். ஒரு நாள் அந்த பணக்கார மனிதன் அந்த சின்ன பையனைப் பார்த்து சொன்னார். டேய் தம்பி, இங்கே கட்டி வைத்து விட்டு போகிற குதிரைகள் எல்லாம் காணாமல் போய் விடுகிறது; நான் நாடகம் பார்ப்பதற்காக உள்ளே போறேன். ஆகையால் என்னுடைய குதிரையையும் மற்றும் வண்டியையும் நீ பத்திரமாக பார்த்துக்கொள். நான் நாடகத்தினைப் பார்த்துவிட்டு வெளியே வருகிற போது உனக்கு கொஞ்சம் காசு (Penny) தருகிறேன் என்று சொன்னார்.
உடனே இந்த பையனுக்கு ரொம்ப சந்தோஷம் ஆகிவிட்டான் ஆஹா! இப்படி ஒரு வேலையா என மனதில் சொல்லிக்கொண்டு ரொம்ப ஆர்வமாக செய்து முடிக்கிறான். அந்த பணக்கார மனிதன் நாடகம் முடிந்து வெளியே வந்ததும் குதிரையை பார்த்துவிட்டு ஆச்சிரியப்படுகிறான். அவன் நினைக்கிறான் நான் விட்டுச் சென்ற குதிரையா? இது என்கிற ஒரு சந்தேகம் வந்துவிட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி அதனை பளபளவென தொடைத்து வைத்திருந்தான். அந்தப் பையனை பார்த்த உடனே ரொம்ப சந்தோஷமாகி அவன் தோளில் தட்டிக்கொடுத்து கொஞ்சம் அதிகமாகவே அவனிடம் பணத்தை கொடுத்து போனார். சில்லரை கிடைக்குமென எதிர்பார்த்திருந்த அந்த சிறுவனுக்கு பணமாக நிறைய கிடைத்தது. கையில் பணம் இருந்ததை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றான்.
அடுத்த நாள் அதே பணக்கார மனிதன் நாடகம் பார்க்க வந்த போது அந்த சிறுவனின் ஞாபகம் வந்தது. ஆகையால் அவனிடமே குதிரையை கொடுத்து விட்டு சென்றார். இதனை பார்த்த மற்ற நபர்களும் குதிரையை அவனிடமே விட்டுவிட்டு பார்த்துக்கொள் என்று சொல்லி விட்டு நாடகம் பார்க்க உள்ளே சென்றார்கள். அவற்றை அவன் பாதுகாத்து சுத்தப்படுத்தி கொடுக்கிறான் வருமானம் அதிகரித்தது. உதவி வேலைக்கு ஆள் வைத்து குதிரை லாயம் அமைத்து தான் முதலாளி ஆயிட்டான்.
அதோடு விட்டுவிடாமல் எப்போது அவனுக்கு நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் உள்ளே சென்று நாடகங்களை கவனிக்கிறான். அதன் பிறகு எழுத ஆரம்பித்தான். பின்னாளில் மிகப் பெரிய இலக்கிய மேதை ஆகிவிட்டான் அந்த சிறுவன். அவன் தான் உலகப்புகழ் பெற்ற இலக்கிய மாமேதை வில்லியம் ஷேக்ஸ்பியர்!. மனிதர்களுக்கு எப்போ எப்படி வேண்டுமானாலும் வாய்ப்புகள் வரலாம். அதனை கெட்டியாகப் பிடித்து செயல்படும் போது கண்டிப்பாக வெற்றி அடைய முடியும்!.
இங்கிலாந்து நாட்டின் எழுத்தாளர் மற்றும் ஆங்கில கவிஞர், உலகின் மிகப் பெரிய நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் லண்டனில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்டில் 1564 - இல் பிறந்தார். ஷேக்ஸ்பியரின் தந்தை, ஜான் ஷேக்ஸ்பியர் ஆவார். அவர் ஒரு வணிகர் ஆவார். அவருடைய குடும்பம் நல்ல செழிப்புடன் வாழ்ந்து வந்தது. கையுறைகள் (க்ளோவ்ஸ்) தயாரிப்பில் அவரது பணி முக்கியத்துவம் வாய்ந்தது. இது தவிர, ஜான் நகரத்தில் அரசாங்க வேலை செய்தார். ஷேக்ஸ்பியரின் அம்மா, மேரி ஒரு ஏழைப் பணியாளரின் மகள் ஆவார்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்கள் இலவசமான ஒரு மாகாண பள்ளியில் கல்வி பயின்றார். அவர் 1580 இல் பட்டம் பெற்றார். அதன் பிறகு தான் ஷேக்ஸ்பியரின் இளமைக்கால வாழ்க்கை ஆரம்பம் ஆனது. அவர் இரண்டாம் நிலை கல்வியை கற்ற பிறகு, மேலும் இளம் மாணவர்க்கான படிப்பை பயில விரும்பவில்லை. 18 வயதில் அவர் திருமணம் செய்து கொண்டார். வில்லியம் ஷேக்ஸ்பியரை விட எட்டு ஆண்டுகள் வயது வித்தியாசம் கொண்ட அன்னே ஹெத்வே என்பவரை திருமணம் செய்து கொண்டார். வில்லியம் ஷேக்ஸ்பியரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. வயது வித்தியாசம் பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்கள் முழு பரஸ்பர புரிதலுடன் திருமண வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது.
இளம் வயதிலேயே வில்லியம் ஷேக்ஸ்பியர் கவிதை எழுதும் திறமை கொண்டிருந்தார். வில்லியம் ஷேக்ஸ்பியர், இரவும் பகலும் எழுதினார். அவருடைய பேனாவிலிருந்து வந்த நாடகங்கள் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. வில்லியம் "வீனஸ் அண்ட் அடோனிஸ்" என்ற பாடலை எழுதினார். அது உடனடியாக அப்பாடல் Best Seller வரிசையில் சேர்ந்தது. Best Seller ஆக மாறிப்போன அந்த பாடல் 8 முறை வெளியிடப்பட்டன. நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் வில்லியம் ஷேக்ஸ்பியரின் புகழ் மென்மேலும் அதிகரித்துள்ளது. ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாற்றில் நகர்ப்புற அச்சுப்பொறிகள் அவரது படைப்புகளை அச்சிட நேரம் இல்லை என்றது. ஒரு திறமையான ஆசிரியரின் புத்தகங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகின்றன.
நடிகர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்பியர் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமானது என்றால் 1585 முதல் 1610 ஆண்டு வரை எனலாம். அந்த காலக்கட்டத்தில் தான் ஹேம்லட், ஓதெல்லோ, கிங் லியர் மற்றும் மாக்பெத் போன்ற பல அழியாத படைப்புகளை உருவாக்கினார். உலக புகழ் பெற்ற நாடகமான "ரோமியோ ஜூலியட்", 1595 இல் எழுதப்பட்டது. வில்லியம் ஷேக்ஸ்பியர் அவரின் உடல்நிலை மோசமடைந்து ஏப்ரல் திங்கள் 23, 1616 - இல் இறந்தார்.
Related Tags
Motivational Story In Tamil | வலிகள் தான் உன்னை செதுக்கும் உளிகள் | William Shakespeare Biography In Tamil | Biography of William Shakespeare | வில்லியம் ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாறு | வில்லியம் ஷேக்ஸ்பியர் கதைகள் | Life of William Shakespeare | Real Life Inspiring Stories That Touched Heart | Real Life Inspirational Stories Of Success | Real Life Struggle Stories | Real Life Struggle Stories In Tamil | William Shakespeare Life Story In Tamil | Real Life Inspirational Stories Of Success.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.