பன்னிரெண்டு தமிழ் மாதங்கள்
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி வரை மொத்தம் பன்னிரெண்டு ஆகும். அந்த பன்னிரெண்டு தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்திற்கு அடுத்து வருவது புரட்டாசி மாதம் ஆகும். இந்த புரட்டாசி மாதம் மிகவும் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும், பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை (Non-Veg Food) தவிர்த்து, விரதம் (Fasting) இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று வர வேண்டும் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
இதன் பின்புலத்தில் உள்ள ஆன்மிகம் மற்றும் அறிவியல் காரணங்கள் என்னவென்று பார்க்கலாம். பொதுவாக புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்து மக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். மேலும் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்கள். தமிழ் மாதங்களில் மற்ற தமிழ் மாதத்தில் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், இந்த ஆறாவதாக வரும் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்கள்.
Purattasi Month
பொதுவாக புரட்டாசி மாதத்தில் (Purattasi Month) இந்து மக்கள் கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்குவார்கள் மற்றும் காய்கறி கடைகளுக்கு சென்று காய்கறிகளை வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுவார்கள். இந்த இரண்டு இடங்களிலும் புரட்டாசி மாதத்தில் கூட்டம் அலைமோதும். அதேபோல் இறைச்சி கடைகளை பார்த்தால் கூட்டம் குறைவாக தான் இருக்கும். இறைச்சி கடைகளில் அந்த புரட்டாசி மாதம் முழுவதும் ஈ ஒட்டி கொண்டு இருப்பார்கள். காரணம் என்னவென்றால் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதால் அந்த புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமலும், சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்து விரதம் மேற்கொள்வார்கள்.
புரட்டாசி மாதம் அசைவம் தவிர்ப்பது ஏன்?
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என்கிற அறிவியல் உண்மையும், ஆன்மிக காரணங்களையும் தெரிந்துக்கொள்ளலாம். புரட்டாசி மாதம் ஆரம்பித்து விட்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அதனால் கோழி, ஆடு, மாடு மாதிரி இறைச்சிக் கடைகளில் வியாபாரம் குறைந்து போய் இருக்கும். அது மட்டும் இல்லாமல் நிறைய பேர் அசைவம் தவிர்த்து, சைவம் மட்டும் சாப்பிடுவதால் காய்கறிகளின் விலை கொஞ்சம் ஏற ஆரம்பிக்கும். சரி வீட்டில் இருக்கும் பெரியோர்கள் புரட்டாசி மாதம் ஏன் அசைவம் தவிர்த்து சைவம் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள். நம்மில் பல பேருக்கு இதன் காரணம் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். புரட்டாசி திங்களில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது என்கிற அறிவியல் உண்மையை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
காலநிலை மாற்றம் (Climate Change)
பபுரட்டாசியில் மாதத்தில் வெயில், மழை குறைந்து காற்று அடிக்க ஆரம்பிக்கும். ஆங்கில வருடம் வரும் மே மாதத்தில் கத்திரி வெயில் அடிக்கும், தமிழ் வருடம் வரும் ஆடி மாதத்தில் காற்று அடிக்கும் போது பூமி சூடாக இருக்கும். புரட்டாசி மாதம் தொடங்கும் போது வெப்பமாக இருந்த பூமி, ஏற்கனவே இருந்த வெப்பத்தைவிட, அதிக வெப்பத்தை கொடுக்கும். ஆகையால் சாதாரணமாக கோடை காலங்களில் வரும் வெப்பத்தை விட இந்த வெயில் சூடு மிக அதிகமாக இருக்கும். அந்த சூடானது நம் உடம்பில் உள்ள சூட்டை மேலும் கிளப்பிவிடும். நாம் இந்த மாதிரி நேரத்தில் அசைவம் சாப்பிட்டால் நமது உடம்பில் சூடு இன்னும் அதிகமாக ஏற்பட்டு உடல்நலத்தை கெடுத்து விடும் என்று சொல்வார்கள். சாதாரணமாக மனித உடலின் வெப்பமானது 98 பாரன்ஹீட் வரை இருக்கும். இந்த மாதிரி நேரத்தில் உடலில் வெப்பம் அதிகமாகி 100 பாரன்ஹீட் மேல் போகலாம்.
அறிவியல் காரணம்
உடம்பில் எந்த மாதிரி தொந்தரவு வரும் என்று பார்த்தால் உடம்பில் நீர்ச்சத்து குறையும் அளவுக்கு வியர்வை அதிகமாக இருக்கலாம். வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். அது செரிமான பிரச்சினையை உருவாக்கலாம். அதுமட்டுமில்லாமல் உடல் உபாதைகள் வரலாம். வயதானவர்களுக்கு நெஞ்சுவலி, படபடப்பு, மூச்சு பிரச்சனை கூட வரலாம். இந்த மாதிரி காரணங்களால் தான் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட கூடாது என்று சொல்கிறார்கள். சரி இப்பொழுது ஆன்மிக காரணங்களை தெரிந்துக்கொள்ளலாம். இந்த நேரத்தில் எதற்காக பெருமாள் கோவிலுக்குப் போறோம் என்று பார்த்தால் பொதுவாகவே பெருமாள் கோவிலில் ஒரு தீர்த்தம் கொடுப்பார்கள். அதில் துளசி இலையை போட்டு வைத்திருப்பார்கள். பொதுவாகவே துளசிக்கு வெப்பத்தை குறைக்கிற ஆற்றல் இருக்கிறது.
ஆன்மிக காரணம்
அதனால் தான் இந்து மக்கள் பலர் புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு போய் தரிசனம் செய்த பிறகு அங்கு கொடுக்கிற தீர்த்தத்தையும் வாங்கி பருகுகிறார்கள். புரட்டாசி மாதத்திற்கும், ஆன்மீகத்துக்கும் என்ன சம்மந்தம் என்று பார்த்தால் ஜோதிடத்தில் ஆறாவது ராசி கன்னி ராசி. கன்னி இராசிக்கு அதிபதி புதன் பகவான் மகாவிஷ்ணு சொரூபமான புதன் பகவான் பார்க்கிறார். அது மட்டுமில்லாமல் புதன் பகவான் ஒரு சைவப் பிரியர். அதனால் தான் அவர் ஆட்சி செய்கிற கன்னி ராசியோட மாதமான புரட்டாசியில் நான்வெஜ் அதாவது அசைவத்தை தவிர்த்து சைவம் சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள்.
Related Tags
Tamil Devotional Story | Bhakthi Kathaigal | ஆன்மீக அறிவியல் | புரட்டாசி மாதம் அசைவம் தவிர்ப்பது ஏன்? | அறிவியல் வியக்கும் ஆன்மீகம் | ஆன்மீக தத்துவ கதைகள் | நீதிக் கதைகள் | ஆன்மீக கதைகள் | வாழ்க்கை தத்துவம் சொல்லும் நீதிக் கதைகள் | தத்துவ கதைகள் | ஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள் | Spiritual Stories In Tamil | குட்டி கதைகள் | ஆன்மீக மெய்ஞான தத்துவம் | வாழ்க்கையின் தத்துவங்கள் | God Motivational Story In Tamil | கிருஷ்ணரின் போதனைகள் | Bhagavad Gita In Tamil.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.