இலட்சியத்தை அடைதல்
ஒவ்வொரு மனிதனும் நினைக்கும் இலட்சியத்தை அடைவது என்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. ஆனால் இலட்சியம் நிச்சயம் அடையக் கூடியது தான். நினைத்த இலட்சியத்தை அடைவதற்காக எத்தனை காலங்கள் ஆனாலும், சாதகமற்ற சூழல்கள் உருவானாலும், நாம் அந்த எண்ணங்களில் இருந்து மாறாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
முயற்சி இல்லாமல் எந்த இலட்சியத்தையும் நம்மால் அடையவே முடியாது. முயற்சி இல்லாத இலட்சியம் என்பது துடுப்பு இல்லாத படகு பயணத்தை போன்றதாகும். உங்கள் இலட்சியத்திற்காக நீங்கள் என்னென்ன முயற்சிகள் எடுத்தீர்கள் அல்லது என்னென்ன வழிகளை கண்டுபிடித்துள்ளீர்கள் என்பது தான் உங்கள் இலட்சியத்தின் படிக்கட்டுகளாக இருக்கும். உங்களுடைய இலட்சியம் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதனை அடையும் வழிகள் பலவாக இருக்கலாம். காலம் வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும். இலட்சியம் பலவாக மாறிக் கொண்டிருக்கும்.
இப்படியாக பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மேலும் சொல்லப்போனால் நம்முடைய உடல் சோர்வடையும்; மனம் பலம் குறையும். நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்கள் மற்றும் சூழ்நிலைகளை பார்க்கும் போதே நமக்குள் ஒருவித பயம் தொற்றிக்கொள்ளும். நம்மால் சாதிக்க முடியாது என்கிற எண்ணங்கள் மேலோங்கும். இவை அனைத்தையும் தாண்டி, நம்மால் வெற்றி பெற முடியும் என்ற குறிக்கோளுடன் தினமும் தொடர்ந்து போராட வேண்டும். அப்போது தான் நம் இலட்சிய வெறி வெற்றியாக மாறும். இலட்சியம் சின்னதாக இருந்தாலும் சரி; பெரியதாக இருந்தாலும் சரி அதில் வரும் சோதனைகளை கடந்து வெற்றி காண்பவன் தான் சாதனையாளன் ஆகின்றான். தோல்வியைக் கண்டு துவளாமை இருந்தால் தான் நினைத்த இலட்சியத்தை அடைய முடியும்.
தோல்வி என்பது முடிவல்ல என்று எண்ணுபவர்கள் தான் இலட்சியத்தை நோக்கிப் பயணிக்க முடியும். தோல்வி என்பதை நம் புதிய முயற்சியின் தொடக்கம் என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். தோல்வி என்பது ஓர் முடிவல்ல!. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தோல்வி என்பது வெற்றியை அடைவதற்கான முதல் படி ஆகும். பல படிகளை ஏறினால்தான் வெற்றி என்னும் உயரத்தை அடைய முடியும். நெஞ்சினில் உரமும், சிந்தையில் திடமும் கொண்ட மனிதர்களை தோல்வி என்றும் துவளச் செய்யாது. நாம் மனதில் மீசை கவி பாரதியாரின் வரிகளை சொல்லிக் கொள்ளுங்கள்.
"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்"
வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியுடன் செயல்பட வேண்டும்.
இலட்சியத்தை அடைய உறுதியாய் இரு
உலகில் உள்ள பெரிய நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டுக்கு அருகில் இருக்கும் குட்டி தீவுகள் மீது போர் தொடுத்து அதையெல்லாம் ஆக்கிரமிக்க தொடங்கிய காலகட்டம் அது. ஒரு கப்பலில் 500 வீரர்களை அனுப்பி 500 பேர் மக்கள் கொண்ட ஆதிவாசிகள் வாழ்கின்ற ஒரு தீவை தான் கைப்பற்ற அனுப்பி வைத்தார்கள். கப்பல் அந்த தீவை அடைந்து சில நாட்களில் திரும்பி வந்து விட்டது.
500 Army வீரர்களுமே கை, கால் உடைந்த நிலையில் தோற்றுப் போய் திரும்பி வந்து விட்டார்கள். ஆதிவாசிகள் அந்த வீரர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றார்கள். வீரர்கள் எல்லாரும் பயந்து திரும்பி வந்து விட்டார்கள். ஆகையால் 1000 வீரர்கள் அனுப்பி வைத்தார்கள் அந்த ஆயிரம் வீரர்களும் கை, கால் இழந்த நிலையில் பயந்து போய் திரும்பி வந்து விட்டார்கள். இதனை பார்த்து மறுபடியும் இந்த தீவுக்கு 2000 பேரை அனுப்பி வைத்தார்கள் அவர்களுக்கும் அதே நிலைமைதான்.
ஆகையால் மீண்டும் அனுப்பி ஆதிவாசிகளை வென்று ஆக வேண்டும் என்று நினைத்து 5000 பேரை அந்த தீவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்களுக்கும் அதே கதி தான் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. வெறும் 500 ஆதிவாசிகளுடன் சென்ற 5000 பேரையும் தோற்கடித்து கை, கால்களை உடைத்து திருப்பி அனுப்பி வைக்கிறார்களே அது எப்படி முடியும். அந்த தோல்விக்கு பின் பல கட்ட யோசனை நடந்தது ஏன் நம் வீரர்கள் தோல்வியை தழுவுகிறார்கள் என்று யோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதன் படி வெறும் 500 பேரை மட்டும் மீண்டும் கப்பலில் அனுப்பி வைத்தார்கள். அங்கே கப்பலில் இருந்து இறங்கி இரண்டு நாள் தொடர்ந்து தீவிர சண்டை நடந்தது.
500 Army வீரர்கள் வெறும் 500 ஆதிவாசிகளுடன் போர் தொடுத்து அவர்களை வென்று வந்தார்கள். இப்போது எப்படி வெற்றி சாத்தியமாயிற்று 5000 பேர் சென்று தோல்வி அடைந்து வந்தார்கள். வெறும் 500 பேர் சென்று எப்படி வெற்றி பெற்றார்கள். இது எப்படி நடந்தது என்றால் இந்த முறை ஒரே ஒரு மாற்றத்தை தான் செய்தார்கள். 500 பேர் தீவில் இறங்கியதுமே கப்பல் திரும்பி வந்து விட்டது. இனிமேல் இந்த தீவில் இருந்து திரும்பி செல்ல முடியாது உயிரோட வாழ வேண்டும் என்றால் அந்த ஆதிவாசிகளை வென்று ஆக வேண்டும் என்ற அந்த எண்ணம் மட்டும் தான் அவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இலட்சியத்தில் உறுதியாக இருப்பதை விட, அதை அடைவதற்கான முயற்சியில் மிகவும் உறுதியாக இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நன்றி!
Related Tags
இலட்சியத்தை அடைய உறுதியாய் இரு | The Way To Achieve Ambition | Latchiyathai Adaiyum Vazhi | இலட்சியத்தை அடைவது எப்படி? | இலட்சியத்தை நோக்கி செல்வதற்கான பாதை | இலட்சியமும் குறிக்கோளும் | இலட்சியத்தை அடையும் எளிய வழி | இலக்குகளை நிர்ணயித்தல் | திட்டமிட்டு செயல்படுதல் | காரணங்களை கண்டறிதல் | நேர்மறையான எண்ணங்களுடன் செயல்படுதல் | சரியான திட்டமிடல் | கனவு காணுங்கள் | எதிர்மறையான எண்ணங்களை நீக்குதல் | நம்பிக்கையுடன் செயல்படுதல் | சவாலைச் சமாளி | சரியான முடிவுகளை எடுத்தல் | சரியான வழிகாட்டுதல் | அச்சம் தவிர்.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.