மாற்றி யோசி வெற்றி ஈஸி
ஒரு கோவில் அருகே யானை ஒன்று கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன மனிதர்கள், அந்த யானை கட்டப்பட்டு இருப்பதை பார்த்துக் கொண்டே சென்றார்கள். அந்த யானையின் காலில் ஒரே ஒரு மெல்லிய இரும்பு சங்கிலி மட்டும் தான் கட்டப்பட்டு இருந்தது. இவ்வளவு மிகப்பெரிய பலம் கொண்ட யானை ஆனது அதை அறுத்து கொண்டு போய்விடாத.!? என்று வியந்தார்கள். அந்த குட்டி யானையின் அருகில் இருந்த யானை பாகனிடம், அந்த வழியாக சென்ற ஒருவன் கேட்டான். இந்த யானைக்குட்டி இரும்பு சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விடாதா?!". அதற்கு அந்த யானையின் பாகன் சிரித்தபடி பதில் சொன்னான். இந்த யானை குட்டியாக இருக்கும் போது இதே மெல்லிய இரும்பு சங்கிலியில் தான் கட்டி வைத்தோம். அப்போது அந்த குட்டி யானை எவ்வளவோ இழுத்து இழுத்துப் பார்த்தும், இந்த இரும்பு சங்கிலியை அறுக்க முடியவில்லை.
இந்த குட்டி யானை பெரிதாக வளரும் போது தன்னால் இதை அறுக்க முடியாது என்கிற எண்ணமும் சேர்ந்தே வளர்ந்தது. இப்போதும் அந்த எண்ணம் மனதில் பதிந்து, இந்த மெல்லிய இரும்பு சங்கிலியை அறுக்கும் முயற்சியை கைவிட்டு விட்டது. இரும்பு சங்கிலியை அறுத்து செல்ல முயற்சிப்பதே இல்லை. இதை கேட்டவுடன் அந்த மனிதன் ரொம்பவே ஆச்சரியப்பட்டான். இந்த யானை ஒரு நிமிடத்தில் இந்த மெல்லிய இரும்பு சங்கிலியை அறுத்து கொண்டு போய்விடலாம். ஆனால் அதற்கான முயற்சியை அந்த யானை செய்வதே இல்லை.
அதனாலேயே இந்த யானை கட்டுண்டு கிடக்கின்றன. இந்த யானை மாதிரி நம்மில் எத்தனை பேர் "முன்பு எதோ சில முறை தோற்று விட்டதால், மீண்டும் முயற்சி செய்யாமலேயே துவண்டு போகிறோம். முயற்சி செய்வதையே கைவிட்டு விடுகிறோம். இந்த யானை மாதிரி இல்லாமல் நமக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் சவால்களை மாற்றி யோசனையை செய்து வெற்றி பெற வேண்டும். ஒரு பெரிய கார் கம்பெனியில் ஏற்பட்ட பிரச்சினையை மாற்று யோசனையின் (Think Different) மூலம் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.
Motivational Stories in Tamil for Business
ஒரு பிரபலமான மகிழுந்து நிறுவனத்தில் இளைஞன் ஒருவன் பணிக்கு சேர்ந்தான். அவன் பயங்கரமான சுட்டிக்காரன் சுட்டி மட்டுமல்ல நல்ல புத்திசாலியும் கூட. அவன் ஒரு கலை வடிவம் பற்றி யோசிக்கிறான் அதே மாதிரி ஒரு காரின் மாடலையும் வடிவமைத்துக் கொண்டு போய் அவனுடைய மேலாளரிடம் காட்டினான். அதனை பார்த்த அவனுடைய மேலாளர் ரொம்ப அற்புதமாக இருக்கிறது மற்றும் ரொம்ப நல்லதாகவும் வந்திருக்கிறது என்று பாராட்டினார். இந்த மாதிரி வேறு எந்த கம்பெனியும் கார் தயாரிப்பில் ஈடுபடவில்லை. இந்த மாதிரி கார் தயாரிப்பினை உடனே நாம் முயற்சி செய்து உருவாக்கலாம் என்று அவனுடைய மேலாளர் கூறினார். உடனே அந்த இளைஞன் சொன்னபடி அதே மாதிரி கார் ஒன்று தயார் செய்தார்கள். அதனை பார்த்த முதலாளி ரொம்ப சந்தோஷம் அடைகிறார்.
ஒரு நாள் அந்த காரினை மார்க்கெட்டிங் பிரிவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். ஆகையால் காரை வெளியே எடுத்து வருவதற்கு முயற்சி செய்தார்கள். அப்போது அந்த இடத்தில் ஒரு பிரச்சினை வருகிறது என்னவென்று பார்த்தால் காரின் உயரம் ஐந்து அடி உயரத்தை விட அதிகமாக இருக்கிறது. என்ன செய்தால் காரினை வெளியே கொண்டுவர முடியும். பலபேர் யோசனை சொன்னார்கள் வாயில் மேற்பகுதியினை உடைத்து விடலாம். காரினை வெளியே எடுத்து வந்த பிறகு அப்புறம் வாயில் மேற்பகுதியினை கட்டிக்கொள்ளலாம்.
காரினை வெளியே எடுத்து வருவதற்கு மேலாளர் சொல்கிறார். கஷ்டப்பட்டு காரை அந்த வாசல் வழியாக எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்று மேற்பகுதியில் ஒரு சில கீறல் மட்டும்தான் விழும். அதனை பெயிண்டிங் அடித்து சரி பண்ணிக்கலாம் என்று ஒரு பெயிண்டர் யோசனை சொன்னார். முதலாளிக்கு இருந்தாலுமே மனது ஒப்புக் கொள்ளவில்லை. எல்லாரும் சொல்வது ஒரு புது ஐடியாவாக இருந்தாலும் முதலாளியின் மனதுக்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு சில கீறல் விழுவது அவருக்கு சரியான யோசனையாக படவில்லை.
இப்படி அருமையாக காரினை தயார் செய்து அதை எப்படி வெளியே எடுத்துக்கொண்டு போக முடியவில்லை என்று சொல்லி அவர்களே ஒரே குழப்பமாக இருக்கிறார்கள். என்ன செய்வது அழகான காரை வெளியே எடுத்துக்கொண்டு போக முடியவில்லையே என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது, அங்கே இருந்த வயதானவர் அதே கம்பெனியில் வேலை பார்க்கிற ஒரு வாட்ச்மேன் சொல்கிறார். அவர் அப்படியே மெதுவாக தயங்கி அந்த முதலாளியிடம் வந்து ஐயா, நான் ஒன்று சொன்னால் கேட்ப்பீர்களா? நான் அதை சொல்லலாமா? என்று அனுமதி கேட்கிறான்.
இந்த கிழவன் என்ன நாம் சொல்லாத புதிய யோசனையை சொல்லிடப் போறான். நாம் தான் எல்லோருடைய யோசனையையும் கேட்டோம் இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்கிறார். இந்த உயரத்தை விட ஒரு இன்ச் தான் காரோட உயரம் அதிகமாக இருக்கிறது. இந்த காரோட நான்கு டயர்கள் இருக்கிற காற்றினை கழற்றிவிட்டால் காற்று வெளியே சென்று விடும் பிறகு காரினை சுலபமாக வெளியே எடுத்துக்கொண்டு போகலாம். அதன் பின் காரின் டயரில் காற்றினை நிரப்பி கொள்ளலாம் என்று சொன்னார். அடடா! எவ்வளவு சுலபமான வழி எந்த சேதாரமும் இல்லாமல் காரை வெளியே எடுத்திடலாம்.
அங்கிருந்த எல்லாருமே கைதட்டி சந்தோஷப்படுகிறார்கள். முதலாளிக்கு ரொம்பவே சந்தோஷம் வந்து விட்டது. அந்த வாட்ச்மேன் சொன்ன மாதிரியே காரில் இருக்கிற நான்கு பக்கமும் இருக்கிற டயர்களில் காற்றை பிடுங்கிவிட்டு காரை ஒரு வழியாக அவர்கள் நினைத்த மாதிரி மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட்க்கு கொண்டு போகிறார்கள். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம் ஆகிவிட்டார்கள். அந்த இளைஞன் நினைத்த மாதிரி அவனுடைய கனவும் நிறைவேறியது. இந்த ஒரு இன்ச் குறைத்ததால் காரினை வெகு சுலபமாக வெளியே கொண்டு வர முடிந்தது. இதேபோல் நம்மிடம் இருக்கும் ஈகோ எல்லாத்தையுமே தூக்கி எறிஞ்சிட்டு வாழ்க்கையில் வருகிற எல்லா இடர்பாடுகளையும் கடந்து முன்னேறினால், நல்ல வெற்றியாளர்களாக நிச்சயமாக வரமுடியும். நன்றி!
Related Tags
Motivational Stories In Tamil For Business | Positive Thoughts | Success Mindset | Tamil Motivational | தமிழ் மோட்டிவேஷனல் | முயற்சியே வெற்றியின் முதல் படி | மாற்றி யோசி | Motivational Stories In Tamil For Employees | Motivational Stories In Tamil for Entrepreneur | Motivational Stories for Business In Tamil | Business Motivational Stories In Tamil | Tamil Motivational Videos | Tamil Motivation Stories | Positive Thinking Short Stories In Tamil.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.