Decision Making Skills | சரியான முடிவுகளை எடுப்பது எப்படி? | ThaenMittai Stories

சரியான முடிவுகளை எடுப்பது எப்படி?

ஒரு ஊரில் பாழடைந்த கோவில் இருந்தது. அது எப்போது கட்டப்பட்டது? என்று யாருக்கும் தெரியாது. எந்த நேரத்திலும் இடிந்து விழுந்துவிடும் என்ற நிலையில் இருந்தது. அச்சத்தின் காரணமாக, அந்தக் கோவிலுக்கு மக்கள் செல்வதை அறவே நிறுத்தி விட்டனர். அந்த பாழடைந்த கோவில் வழியாக மக்கள் செல்ல நேர்ந்தால், சீக்கிரமாக நடந்து அந்த இடத்தைக் கடந்து செல்வது வழக்கம். அதற்கு காரணம் என்னவென்றால், நம் மீது அந்த கோவில் இடிந்து விழுவதற்குள், அந்த இடத்தைக் கடந்து விட வேண்டும் என்று நினைத்தது தான் காரணமாக இருந்தது.
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
ஆகையால் அந்த ஊர் பெரியவர்கள் சிலர் சேர்ந்து, கோவிலின் முன்னேற்றத்திற்காக, ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு நாள் அது பற்றி கலந்து ஆலோசிப்பதற்கு ஓர் இடத்தில் எல்லோரும் ஒன்று கூடினார்கள். அதுவும் அவர்கள் நடத்திய அந்த ஆலோசனை கூட்டமானது, கோவிலுக்குள் நடைபெறவில்லை. பாழடைந்த கோவிலுக்குள் கூட்டம் நடைபெறும் தருணத்தில், தங்களின் மீது கோவில் கட்டிடம் இடிந்து விழுந்து விட்டால் என்ன செய்வது? என்று பயம் தான் காரணம். எனவே கோவிலுக்கு அப்பால் சற்று தூரத்தில் தான் அவர்கள் கூட்டத்தை கூட்டிப் பேசினார்கள்.
அந்த ஆலோசனை கூட்டத்தில், கோவிலில் உள்ள மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளைச் சரிசெய்ய வேண்டும். சரிசெய்த பிறகு வெளிச்சுவருக்கு வெள்ளைச் சுண்ணாம்பு அடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி, கோவிலின் மிகவும் மோசமாக இருக்கும் சில பகுதிகள் செப்பனிடப் பட்டன. வெளிச்சுவருக்கு வெள்ளையடிக்கப்பட்டது. ஆனால், அப்படி பழுத்துப்பார்த்து வெள்ளையடிக்கப் பிறகும் கூட, சிலர் மட்டும் சில நாட்களுக்குக் கோவிலுக்குச் சென்று வந்தார்கள். பிறகு அதுவும் நின்று போயின.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
எனவே மீண்டும் அந்த கோவில் நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள். இதுவும் கோவிலுக்குச் சற்று துரத்தில் நடந்தது. அந்தக் கோவில் கூட்டத்தில், கோவில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி, 4 தீர்மானங்களை ஒரு மனதாக கொண்டு வந்தார்கள். அதில் முதலாவது தீர்மானம்: இந்தக் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த பழமையான கோயிலை இடிக்க வேண்டி இருக்கிறதே என்பதை நினைக்கும்போது, எங்கள் மனம் மிகவும் வருத்தம் அடையத் தான் செய்கிறது. என்றாலும், கோயிலின் நலனை கருதி அதை இடிக்க முடிவு செய்யப்படுகிறது.

Decision Making Skills, சரியான முடிவுகளை எடுப்பது எப்படி?, ThaenMittai Stories
அதில் இரண்டாவது தீர்மானம்: இந்தப் பழைய கோவிலுக்குப் பதிலாக, கூடிய விரைவில் வேறு ஒரு புதிய கோவிலை கட்ட இருக்கிறோம். அதில் மூன்றாவது தீர்மானம்: கோவிலில் உள்ள பழைய பொருட்களான பழைய கதவுகள், செங்கற்கள் ஆகியவற்றை புதிததாக கட்ட விருக்கும் கோவிலுக்குப் பயன்படுத்த வேண்டும். பழைய கோயிலை இடித்த பிறகு, அதன் அஸ்திவாரத்தை மட்டும் அப்படியே வைத்துக்கொண்ட எதுவும் மாற்றாமல், அதே இடத்தில் பழைய கோவில் முன்பு எப்படி இருந்ததோ அதே போன்ற அமைப்பில் புதிய கோவிலை கட்ட முடிவு செய்யப்படுகிறது. இந்த மூன்று தீர்மானங்களையும் நிறைவேற்றிய பின்பு, நான்காவதாக ஒரு வேடிக்கையான தீர்மானத்தை அவர்கள் கொண்டு வந்தார்கள்.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
அந்த நான்காவது தீர்மானம் இதுதான். வேறு ஒரு புதிய கோயிலைக் கட்டி முடிக்கும் வரையில், இந்தப் பழைய கோயிலை இடிக்காமல் அப்படியே வைத்திருக்கப் வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். இந்த நான்காவது தீர்மானம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்?. அந்த பழைய கோவில் கட்டிடத்தை இடிக்காமல், அதே இடத்தில் புதிதாக எப்படி ஒரு கோவிலை கட்ட முடியும்?.
இந்தக் கோவில் நிர்வாகிகள் எடுத்த முடிவைப் போல தான், இந்த உலகில் நம்மில் பல மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், நாம் வாழ்க்கையில் உயர்வதற்கு எது தடையாக இருக்கிறதோ; எது இடையூறாக இருக்கிறதோ; என்பதை அறிந்து அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் எந்த ஒரு முயற்சியையும் எடுக்காமல் இருக்கிறோம்.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
ஒரு ஆற்றை நாம் கடந்து போக வேண்டுமென்றால் அதன் கரையிலேயே நின்று பல யோசனைகளை மட்டும் பண்ணிக்கொண்டிருந்தால் போதாது. ஆற்றில் இறங்கினால் மட்டும் தான் எவ்வளவு ஆழம் இருக்கிறது அது நம்மை இழுத்துட்டு போகிற அளவுக்கு அங்கே நீரோட்டம் இருக்கிறதா? அல்லது இல்லையா? அதன் ஆழத்தினை ரொம்ப விரைவாகவே நாம் கடந்து விடலாம் என்கிற தெளிவு நமக்குக் கிடைக்கும். நாம் எடுக்கும் முடிவுகள் சரியான முறையில், சரியான நேரத்தில் திட்டமிட்டு எடுக்கிற முடிவுகள் நாம் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றும் என்பதை புரிந்து செயல் பட வேண்டும். அப்படி செயல்பட்டால் வெற்றி பெறுவது எளிது. நன்றி!

Related Tags

சரியான முடிவுகளை எடுப்பது எப்படி? | Motivational Short Stories In Tamil | Motivational Stories For Students In Tamil | Motivational Stories Tamil | Motivational Tamil Story | Success Motivational Story In Tamil | Tamil Motivational Story | Tamil Success Story | True Motivational Stories In Tamil | 1 Minute Motivational Story In Tamil |Business Motivational Story In Tamil | Business Success Stories In Tamil | Inspiration Story In Tamil | Inspiring Story In Tamil | How To Make The Right Decisions? | Decision Making Skills | திட்டமிட்டு செயல்படுவது எப்படி?.

Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook