வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு, முதலில் நம்முடைய இலக்கு என்னவென்று தீர்மானித்துக் கொள்ளுதல் வேண்டும். தினந்தோறும் வாழ்வில் ஏற்படும் சவால்களையும், தேவைகளையும் திறம்பட சமாளித்து வெற்றி பெற கற்றுக் கொள்ள வேண்டும். குறிக்கோள் என்னவென்று தீர்மானித்துக் கொண்ட பிறகு, அந்த குறிக்கோளை அடைவதற்கு முழுநம்பிக்கையுடன் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
அதற்காக திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும். அதை நோக்கி செல்வதற்கு சிறிது காலம் ஆகும் என்பதால் பொறுமையாக இருந்து செயல்பட வேண்டும். இலக்கை நோக்கி பயணிக்கும் போது பொறுமையாக செயல்பட வேண்டும். இந்த விஷயத்தை நன்கு உணர்ந்து கொண்டு செயல்பட்டால் நாம் எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி அடையலாம் என்பதே நிதர்சனமான உண்மை என்றால் மிகையாகாது.
நம்மில் நிறைய பேர் சில நேரங்களில் என்னடா வாழ்க்கை? என்று நினைப்பது உண்டு. அந்த மாதிரி நேரங்களில் இங்கே சொல்லப் படுகின்ற வழிகளை செய்து பாருங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நாம் சந்தோஷமாகவும், வெற்றிகரமாகவும் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்கிற சில வழிமுறைகளை இக்கட்டுரையில் பார்ப்போம். அந்த மாதிரி நேரங்களில் இந்த மாதிரி யுக்திகளை கடைப்பிடித்து பாருங்கள் நம்முடைய கனவு மெய்ப்படும். நமது இலட்சியம் பெரியதாக இருக்கலாம். ஆனால் அந்த நீண்ட காலத் திட்டத்திற்கான நமது இலட்சியத்தை படிப்படியாக அடைவதற்கான குறுகிய கால இலக்குகளை உருவாக்க வேண்டும். நாம் ஒவ்வொரு சின்ன இலக்குகளை எட்டி பிடிக்கும் போது ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
நமது இலட்சியத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நேரங்களில் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும். முழுமனதோடு விரும்பி செய்ய ஆரம்பிக்கும் பணி எதுவாக இருந்தாலும் அதில் மகிழ்ச்சி நிச்சயமாக கிடைக்கும். நாம் நேசித்து ஒரு வேலையை செய்யும் போது ஆக்கபூர்வமாக சிந்தித்து தொடங்குவோம். நாம் செய்யும் தொழிலில் யாரெல்லாம் முன்னோடியாக திகழ்கிறார் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களுடைய தொழில்முறை என்ன அதை எப்படி அவர் கையாண்டார் என்கிற அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அது உங்களை ஊக்கப்படுத்தி மேலும் முன்னேற உதவும். அது மட்டுமில்லாமல் அவரே சில நேரங்களில் உங்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்கள். உங்களுடைய இலட்சியத்தை அடைவதற்கு தேவையான அனைத்து திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றுக்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். எதையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இருப்பதற்கு ஊக்கமளிக்கும் அதாவது மோட்டிவேஷன் புத்தகங்களை படிக்கலாம்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
அடிக்கடி நாம் பார்க்க கூடிய இடங்களில் நேர்மறையான வாக்கியங்களை ஒட்டிவைத்து கொள்ளலாம். அதனை பார்க்கும் போது நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் எப்போதும் உங்களுக்காகவும் நீங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். உங்களுடைய உடலுக்கும், மனதுக்கும் ஆறுதல் தரக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் சந்தோஷமாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் எதையும் எளிதாக செய்ய முடியும். சந்தோசமாக இருப்பது தான் நாம் வெற்றி பெறுவதற்கான முதல் படி.
உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் அடைய விரும்பும் இலக்கினை தீர்மானித்து கொள்ள வேண்டும். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை சிந்தித்து கனவு காணுங்கள். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா அவர்களின் மனைவி மிட்செல் ஒபாமாவின் புகழ்பெற்ற வார்த்தைகளில் ஒன்றான பெண்களாகிய நாம் எதையுமே அடைய முடியும் என்பதற்கு எல்லையே இல்லை!. எனவே எதிர்கால வாழ்க்கைப் பற்றி இன்றே கனவு காணத் தொடங்குங்கள்.
உங்களுக்கு பிடித்த உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சினை செய்யுங்கள். அது உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி படைப்பாற்றலை அதிகரிக்கும். மேலும் இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும். உங்களுடைய மனைவி கூட இருக்கின்ற நேரத்தை முதலில் திட்டமிட்டு கொள்ள வேண்டும். இது உங்களுடைய திருமண உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவும். உங்களுடைய துணையோடு அடிக்கடி பயணங்களை மேற்கொள்வது ரொம்பவே அவசியம். அது உங்களுக்கான நேரம் என்றே சொல்லலாம்.
உங்களின் திறமைகளை மிளிர செய்ய பயிற்சி செய்வதின் மூலமாகவும், உங்களின் குறிக்கோளை உணர்ந்து செயல்படுவதின் மூலமாகவும் உங்களுக்கு தன்னம்பிக்கை மேலும் அதிகரிக்கும். பயிற்சியே உங்களை முழுமையாக்கும். கடின உழைப்புக்கு குறுக்குவழி என்று எதுவுமே கிடையாது. விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். ஏதேனும் ஒரு சில விடயங்கள் உங்கள் மனது கேட்கின்ற மாதிரி நடக்காமல் போனால் அதனை பொறுமையாக இருந்து கையாளுங்கள்.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருந்தாலும், உங்கள் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். எவ்வளவு பிசியாக இருந்தாலும் அவர்களிடம் கொஞ்சம் பேசுவதற்கு நிச்சயம் நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள். உங்களுடைய அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தின் மகிழ்ச்சி உங்களுடைய வெற்றிக்கு மிக அவசியம். தினமும் அலுவலகம் செல்கின்ற பயண நேரத்தை திறன்பட பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாம் பயணிக்கும் போது உத்வேகம் தருகிற மாதிரி புத்தகங்களை வாசிக்கலாம், ஆடியோக்களை கேட்கலாம், இல்லையென்றால் இசை கேட்கலாம். மன அழுத்தத்தை குறைக்கின்ற சக்தி இசைக்கு உண்டு. தினமும் உங்களுக்காக ஒரு டைரியை வைத்துக்கொண்டு அதில் அன்றைய தினத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை எழுதி வையுங்கள். குறைந்தது 10 நிமிடமாவது அந்த டைரியில் எழுதியதை பொறுமையாக மறுபடியும் வாசித்து பாருங்கள். உங்களிடம் நீங்களே பேசி கொள்வதற்கு இந்த டைரி எழுதுகின்ற பழக்கம் ரொம்பவே உதவியாய் இருக்கும். நன்றி!
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.