எப்படி செய்யும் தொழிலில் வெற்றியை அடைவது?
"எண்ணம் போல் வாழ்வு" என்று சொல்வார்கள். நாம் வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பதற்கும், நாம் எடுக்கிற முயற்சிகள் அனைத்தும் முழுமையாக வெற்றி பெறுவதற்கும், நம்முடைய எண்ணங்கள் தான் அடிப்படை காரணம். நம்மை சுற்றி எப்போதும் நேர்மறையான விஷயங்கள் நடக்கின்ற போது நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!பல வியாபாரங்கள் செய்து தோல்வியடைந்த வியாபாரியின் ஊருக்கு ஒரு சன்னியாசி ஒருவர் வந்து இருந்தார். அந்த தோல்வியடைந்த வியாபாரி சந்நியாசி அவர்களைப் பார்த்து தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொன்னான். சன்னியாசி அந்த வியாபாரியோட நிலைமையை கேட்டு வியாபாரத்தில் தோல்வி அடைவது என்பது தவறு இல்லை என்று கூறுகிறார். ஆனால் என்ன தொழில் அல்லது வியாபாரம் செய்கிறோம் நிச்சயம் அந்த வியாபாரம் மக்களுக்கு அடிக்கடி தேவைப்படுகிறதா?, அதை வாங்குவார்களா?, உடனே அது தீர்ந்து விடுமா? என்று நன்கு அறிந்து ஆராய்ந்து செயல்பட்டால் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று கூறிவிட்டு, நான் இப்போது பாத யாத்திரைக்கு செல்ல வேண்டும் என்றார்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
திரும்பி வருவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும். அப்போது நீங்கள் மீண்டும் வந்து என்னைப் பார் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது தான் அந்த வியாபாரிக்கு ஒரு உண்மை புரிந்தது. மக்களின் தேவை என்னவென்று யோசிக்காமல், நமக்கு எது சுலபமானது என்று நினைத்து வியாபாரம் செய்த காரணத்தால் தான் தோல்வியில் முடிந்தது. காரணத்தை உணர்ந்துக் கொண்டு உடனே அவனுடைய மனைவி, நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடம் ஆலோசனை கேட்டு அந்த ஊரிலேயே காய்கறி கடை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்கிறார்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரைஅந்த வியாபாரி பக்கத்து ஊருக்கு சென்று காய்கறிகள் வாங்கி கொண்டுவந்து அவனுடைய கடையில் நியாயமான விலைக்கு விற்க ஆரம்பிக்கிறான். கொஞ்ச நாளிலேயே வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. அவனுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் வருகிறார்கள். உடனே அந்த வியாபாரி சன்னியாசியை மனதில் நினைத்து மனதார நன்றி சொன்னான். அவரின் வியாபாரத்தை பார்த்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவர் அந்த வியாபாரியின் கடைக்கு நேர் எதிரே இருக்கின்ற ஒரு காலி நிலத்தை வாங்கி ஒரு பெரிய கட்டிடத்தை கட்ட ஆரம்பித்தார்.
ஒரு புதிய கட்டடம் கட்ட ஆரம்பித்தார்கள். அவனுடைய கடைக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் ஏன் எதற்காக இங்கே புது கட்டடம் கட்டுகிறார்கள் என்று கேட்டார்கள். இங்கே ஒரு பல சரக்கு கடை ஒன்று வரப் போவதாகவும் அந்த மாளிகையில் இருந்து பழங்கள், காய்கறிகள், வீட்டு அலங்கார பொருட்கள் என்று பல பொருட்கள் விற்பனைக்காக வரப்போகுது என்று சொன்னார்கள். இந்த விஷயத்தை கேட்டதுமே அந்த வியாபாரியின் மனதிற்குள் ஒரு பயம் வந்துவிட்டது.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
என்ன இது!, இவ்வளோ நாட்களாக கடை நஷ்டத்தில் போய் கொண்டு இருந்தது. இப்போது தான் கடை ஓரளவு வருமானத்திற்கு வருகிறது. இப்போது இப்படி ஒரு போட்டியா?, இந்த கடையை அவர்கள் கட்டி முடித்தால் அனைவரும் அங்கே தான் போவார்கள். என்னுடைய இந்த கடையை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டார்கள். ஏன் கடவுளே!, இது என்ன சோதனை என்று நினைத்து மனம் வருத்தம் கொண்டான்.
அந்த சமயத்தில் யாத்திரைக்கு சென்ற சன்னியாசி திரும்ப வந்தார். இவன் சென்று அந்த சந்நியாசியை மீண்டும் பார்த்து இதுவரைக்கும் நடந்த எல்லா விஷயங்களை சொன்னான். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்று ஆலோசனை கேட்டான். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும் தினமும் நீங்கள் கடையை திறக்கும் போது இன்றைக்கு வியாபாரம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று மனதார கடவுளிடம் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்ய சொன்னார்.
அதே மாதிரி புது கடை திறந்து இருக்கும் அவருக்காகவும் அந்த பக்கம் திரும்பி கடவுளிடம் பிரார்த்தனை செய். இன்றைய தினம் அவருக்கும் நல்ல வியாபாரம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள். வெறும் ஒப்புக்காக உன்னோட பிரார்த்தனை இருத்தல் கூடாது. கடவுளிடம் ஒருமானதோடு பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்பொழுது தான் நல்லதே நடக்கும் என்று சொன்னார். என் போட்டியாளர் நல்லா இருக்க வேண்டும், அவரின் வியாபாரமும் நல்லா நடக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்ய வேண்டுமா? ஏன், எதற்கு என்று கேட்டான்.
நீங்கள் அவருக்காக செய்கின்ற ஒவ்வொரு பிரார்த்தனையும், நல்லெண்ணமும் உங்களுக்கு பன்மடங்காக திரும்பி வரும். அதே மாதிரி அவருக்காக நீங்கள் தீமை நினைத்தாலும் அதுவும் உங்களுக்கு பன்மடங்காக திரும்பி வரும் என்று சொன்னார். அதே மாதிரி அந்த எதிர் கடைக்காரரை எங்கேயாவது நீங்கள் எதிரே பார்க்க நேரிட்டால், அவரை ஒரு போட்டியாளராக பார்ப்பதை தவிர்த்து விட்டு ஒரு நலம் விரும்பியை மாதிரியோ அல்லது ஒரு நண்பனை மாதிரியோ பார்த்து ஒரு புன்னகை செய் என்று சொன்னார்.
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
அந்த சந்நியாசியின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து தினந்தோறும் அவர் சொன்னபடியே அவருக்கும், அவரின் எதிர்கடைக்காரர்க்கும் மனதார பிரார்த்தனை செய்தார். எப்போது எல்லாம் அந்த எதிர் கடைக்காரரை சந்திக்கின்றாரோ அப்போது எல்லாம் ஒரு புன்னகையை செய்து வந்தார். அதனால் ஒரு சில நாட்களிலேயே இரண்டு பேர் பேரிடமும் ஒரு நல்ல நட்பு உருவானது. ஆகையால் தன்னுடைய கடைக்கும் காய்கறிகள் கொள்முதல் செய்யும் பொறுப்பை இந்த வியாபாரிடமே கொடுத்து விட்டார். இதன் மூலமாக அவர்க்கு வியாபாரம் பன்மடங்காக பெருகியது.
நாளடைவில் இவனின் கடையும் ஒரு காய்கறி சந்தையாக உருவெடுத்தது. ஒரு நேர்மறையான சிந்தனையும், நல்ல பண்பும், மனோபாவமும் அவருடைய வாழ்க்கையில் அவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுபோல நமது எண்ணங்கள் தான் நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒருவரைப் பற்றி நாம் நினைக்கிற எண்ணங்கள் நல்லவையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற நினைத்தால் என்றைக்குமே, எப்போதுமே நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் நேர்மறையான எண்ணங்களுடன் செயல்படும் போது ஒரு நாள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் ஒரு கதையோடு சந்திப்போம்!. நன்றி!
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
Related Tags
Motivational Stories In Tamil For Entrepreneur | Business Motivational Story In Tamil | Motivational Short Story In Tamil | Motivational Kutty Story In Tamil | Motivational Life Story In Tamil | Motivational Moral Story In Tamil | Positive Energy Story In Tamil | Positive Thinking Short Stories In Tamil | Real Life Struggle Stories In Tamil | Motivational Story For Business in Tamil | Business Motivation Tamil | Zen Philosophy In Tamil | Success Story In Tamil | Life-Changing Stories In Tamil | Moral Inspirational Stories | Motivational Person Video In Tamil.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.