The Power of Positive Thinking
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவரது தொழில் இரும்பு சாமான்களை செய்து விற்று அதில் வரும் பணத்தில் தான் வாழ்க்கையை நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி ஒருவள் இருக்கின்றாள். அந்த கொல்லனின் வாழ்க்கை உழைப்பும் காதலும் ஊடலுமாக மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்தன. எல்லா கதைகளிலும் வருகிற மாதிரி மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த கொல்லனோட வாழ்க்கையிலும் சோதனை காலம் வருகிறது. என்னவென்றால் நவநாகரீக காலத்தின் துவக்கமாக இருந்த நேரம் என்பதால் கொல்லப்பட்டறை தொழில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நலிவுற்றது. அதனால் வருமானமே கொஞ்சம்கூட இல்லை ஒவ்வொரு நாளும் சுத்தமாக வருமானம் இல்லாத கரணாத்தால் சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைமை உருவாகிவிட்டது.
ஆதலால் கொல்லனுக்கு ஊடலிலும் காதலிலும் கொஞ்சம் கூட நாட்டமே இல்லை. விரக்தி மனதில் குடிக்கொண்டிருந்த காரணத்தால் ரொம்ப சோகத்தில் மூழ்கி இருந்தான். ஒருநாள் மாலை நேரத்தில் மனைவியோட மடியில் தலை சாய்த்து வானத்தில் உள்ள நட்சத்திரங்களை சோகமாக பார்த்துக் கொண்டிருக்கிறான். மனதில் எதிர்காலத்தை நினைத்து கவலையெல்லாம் ஒன்றாய் சேர்ந்து கண்ணீர் துளிகளாக கரைந்து ஓடுகிறது. அதை பார்த்த மனைவி சொல்கிறாள் எதுக்காக அழறீங்க கண் கலங்காதீர்கள். இந்த தொழில் இல்லையென்றால் நமக்கு இன்னொரு தொழில் இருக்கும் என்கிறாள். பக்கத்தில் இருக்கும் காட்டிற்கு சென்று விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்திலுள்ள கிராமத்தில் விற்றால் நமக்கு நாலு காசு கிடைக்கும் அதை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று சொன்னாள்.
கொல்லனின் (Kollan) மனதில் புது நம்பிக்கை புது உற்சாகம் பிறந்து விறகு வெட்டும் தொழிலுக்கு சென்றான். விறகுவெட்டி ஆயிட்டான் அந்த தொழிலில் ஓரளவு வருமானமும் கிடைத்தது. வீட்டில் தினமும் சோள கஞ்சி மற்றும் கொள்ளு துவையல் கூடவே மனைவியோட சிரித்த முகம் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தந்தாலும் மனசுல பழையபடி அவனுக்கு கஷ்டமாக இருக்கிறது. கொல்லனோட முகத்தை மனைவி பார்த்து கேட்கிறார். ஏன் மாமா இன்னும் மனசுல ஏதோ கஷ்டம் இருக்கிற மாதிரி எனக்கு தோன்றுகிறது என்று சொல்லி கேட்கிறாள். பட்டறை தொழில் நல்ல இருந்தபோது நம் வீட்டில் தினமும் நெல் சோறும், கறி குழம்பும் இருக்கும். ஆனால் இப்பொழுது இப்படி வயிற்றை கட்டிட்டு வாழ்கிறோமே அதை நினைத்து கஷ்டமாக இருக்கிறது என்று சொல்கிறான்.
நான் இப்படி விறகு வெட்டி சுமந்துகிட்டு ஊர் ஊராக சுற்றி விற்று கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியாக வாழ்வதற்கு போதுமானதாக இல்லை என்று மனைவியிடம் சொல்கிறான். அதற்கு மனைவி சொல்கிறாள் என்னுடைய நகைகளை விற்றால் கொஞ்சமாவது காசு கிடைக்கும். அதனை நாம் மூலதனமாக போட்டு ஒரு விறகு கடை வைத்துவிடலாம். காட்டில் விறகு வெட்டி விற்க கொண்டுவரும் ஜனங்களுக்கு கூலி கொடுத்து விலைக்கு வாங்கி போடுவோம். அதை நல்ல விலைக்கு விற்றால் நமக்கு நல்ல வருமானம் வரும் கிடைக்கும் என்று சொல்கிறாள். மறுபடியும் கொல்லனுக்கு புத்துணர்ச்சி வருகிறது ரொம்பவே சந்தோசமாக வேலையை செய்கிறான்.
விறகுவெட்டியாக இருந்த கொல்லன் விறகு கடைக்கு முதலாளி ஆகிவிட்டான். நல்ல வருமானம் ஈட்டினான். அப்பறம் என்ன கொல்லன் வீட்டில் கறி சோறுதான்!. ஆனாலும் வாழ்க்கை நமக்கு அடுத்தடுத்த சோதனைகளை கொடுக்காமல் விட்டுவிடுமா? என்ன வந்தது மறுபடியும் கெட்ட நேரம் கடையில் தீ விபத்து ஆகிவிடுகின்றது. அத்தனை மூலதனமும் எரிந்து கருகி விட்டது என்று தலையில் அடிச்சிட்டு அழுகிறான் மற்ற கடை முதலாளிகள் மற்றும் நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொல்கிறார்கள். நண்பா! கலங்காத ஏதோ கெட்ட நேரம் இப்படி நடந்து விட்டது மறுபடியும் முதலில் இருந்து தொழில் ஆரம்பிக்கலாம் என்று பலபேரும் ஆறுதல் சொல்லிட்டு போனார்கள்.
மனைவி மட்டும் அவனுடைய கண்ணீரைத் தொடைத்து விட்டு இப்ப என்ன ஆச்சுனு இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்து இருக்குறீங்க என்று சொல்கிறாள். விறகு எரிந்து வீணாகவா போய்விட்டது காரியாகத் தானே இருக்கிறது. நாளையிலிருந்து நாம் கரி வியாபாரம் பண்ணலாம் என்று சொன்னதும் தன்னுடைய தலையை நிமிர்த்தி அவளின் முகத்தைப் பார்க்கிறான். மறுபடியும் மனசுல ஒரு உற்சாகம் தன்னம்பிக்கை கிடைக்கிறது. கொல்லன் மற்றும் மனைவியும் சேர்ந்து சந்தோஷத்தோட புது தொழில் ஆரம்பிக்கிறார்கள். கரி வியாபாரம் செய்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. ஆம்! "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை இந்தப் பூமியில்". நாமும் புது முயற்சி செய்து பார்ப்போம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!.
Related Tags
Thannambikkai Story In Tamil | Motivational Kutty Story In Tamil | Best Motivational Story In Tamil | Motivational Moral Story In Tamil | Self Motivational Stories In Tamil | Student Motivational Story In Tamil | Motivational Life Stories In Tamil | Motivational Small Stories In Tamil | Motivational Success Stories In Tamil | Motivational Short Stories In Tamil | Tamil Motivational Videos.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.