தர்மம் தலை காக்கும்
தானம் என்பது ஏதேனும் பலன் வேண்டிச் செய்வதைக் குறிப்பதாகும். தர்மம் என்பது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, இல்லாதவர்க்கு உதவி செய்வதைக் குறிப்பதாகும். ஒருவன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது மற்றும் சுயநலமின்றி செய்யும் உதவி மனிதனுக்கு புண்ணியத்தைச் சேர்க்கும். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்' என்றார் முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள். நாம் அடுத்தவர்களுக்கு செய்யும் உதவி ஆனது ஏதேனும் ஒரு வகையில் அது நமக்கே திரும்ப வந்து சேரலாம். அந்தப் புண்ணியம் ஆனது நமது தலைமுறையை வாழ வைக்கும்.
Read Also: Vinayaka Chaturthi Story In Tamil, ஏன் விநாயகர் சிலையை நீரில் கரைக்கிறார்கள்?
நாம் வாழ்க்கையில் எதைப் பற்றியும் யோசிக்காது செய்யும் உதவி நமது தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் காக்கும் என்பதால் தான் தர்மம் தலை காக்கும் என்று சொன்னார்கள். தர்மம் என்ற பதத்திற்கு அர்த்தம் 'முறையான நெறி' என்ற பொருளும் உண்டு. இப்படித் தான் வாழ வேண்டும் என்ற நியதியின் படி மாறாமல் வாழ்ந்து வருபவனை தர்ம சிந்தனை உடையவன் என்று போற்றுவார்கள்.
மகனின் உயிரை காப்பாற்றிய தர்மம்
நீ செய்த பாவம் உங்களிடம் இருக்கும்; நீங்கள் செய்த புண்ணியம் உங்களிடமே திரும்பும். இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை விட இல்லாதவருக்கு கொடுங்கள்; கடவுள் யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்பதில்லை; நாம் செய்கிற தானமும் தவமும் என்றாவது ஒருநாள் எதோ ஒரு ரூபத்தில் காக்கும் என்று சொல்வார்கள். அது எந்தளவுக்கு உண்மை அப்படிங்கிறதைப் பற்றி தான் நாம் இந்த கதையில் பார்ப்போம். இயற்கை குணம் உள்ள பெண் ஒருவர் தினந்தோறும் இரண்டு இட்லிகளை வைத்து பசியோட வருகிறவர்கள் யாராவது இதை எடுத்து சாப்பிட்டு கொள்ளும்படி சுவரின் மேல் வைப்பார். வழியில போகிற ஒரு கூன் முதுகு கிழவன் எடுத்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்துக்கொண்டு போறான்.
இந்த விஷயம் தினந்தோறும் நடக்கிறது. ஒருநாள் அந்த கிழவன் அப்படி என்னதான் சொல்கிறான் என்று தெரிந்துக் கொள்வதற்காக அந்தம்மா அவருக்கு பின்னாடி இருந்து கேட்கிறாள். அந்த கிழவன் சொல்கிறான் நீங்கள் செய்த பாவம் உன்னிடம் இருக்கும்; நீங்கள் செய்த புண்ணியம் உன்னிடமே திரும்பும்.
தினந்தோறும் இட்லி வைக்கிறேன் எடுத்துக்கொண்டு போறான். நீ மகராசி இருக்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிடவில்லை என்றாலும் பரவாயில்லை. இட்லி நல்லா இருக்கிறது என்று பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. மிக்க 'நன்றி' என்று சொல்லக்கூட நினைக்கவில்லை ஏதோ நீங்கள் செய்த பாவம் உங்களிடம் இருக்கும்; நீங்கள் செய்த புண்ணியம் உங்களிடமே திரும்பும் என்று சொன்னான்.
அந்த கிழவன் இப்படி சொன்னதை நினைத்து இந்த அம்மா ரொம்பவே கோபத்தில் புலம்புகிறாள். இவன் என்ன பித்தனா? இல்ல சித்தனா? பரதேசி என்று சொல்லி கோபத்தில் அந்த கிழவனை திட்டுகிறாள். நன்றி கூட சொல்லவில்லை என்று நினைத்து மன உளைச்சலுக்கும் ஆளாகி போகிறாள். நாளடைவில் அவளின் கோபம் தலைக்கேறி போகிறது. ஆகையால் ஒருநாள் கோபத்தில் அந்த இட்லி மேல விஷத்தை கலந்து வைத்து செத்துத் தொலையட்டும் அந்த கிழவன் என்று நினைத்து அந்த மதில் மேல் வைக்கப் போனாள்.
ஆனால் அந்த அம்மாவுக்கு மனசு கேட்கவில்லை. மனசு ஏதோ கலங்கி போகிறது, கை நடுங்குகிறது. அந்த கிழவன் அப்படி சொன்னாலும் நாம் எதற்கு அப்படி நடந்து கொள்ள வேண்டும் நினைக்கிறாள். ஆகையால் அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் தூக்கி போட்டுட்டு வேற நல்ல இட்லியை அந்த சுவரின் மேல் வைத்துவிட்டு வீட்டுக்குள்ள வந்து மன அமைதியோடு உட்கார்ந்தாள். அந்த கூன் முதுகு கிழவனும் வருகிறான் இட்லியை எடுத்துட்டு வழக்கம்போல நீ செஞ்ச பாவம் உன்கிட்ட இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் என்று சொல்லிவிட்டு போறான்.
அந்த அம்மாவின் வீட்டில் அன்றைக்கு மதியம் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்க்கிறாள். A young man in the doorway comes in with a crumpled dress. யாரென்று பார்த்தாள், ஒரு மாதத்திற்கு முன்பு வேலை தேடி வீட்டை விட்டு வெளியே சென்ற அவளோட ஒரே மகன்தான். அவனுடைய அம்மாவிடம் சொல்கிறான் அம்மா வீட்டுக்கு திரும்பி வரும்போது என்னுடைய பணப்பை(Money Purse) காணாமல் போய்விட்டது. அதனால் கையில் காசு இல்லை மேலும் தெரிந்தவர்கள் யாரும் கண்ணில் தென்பட வில்லை. மணிக்கணக்கில் நடந்தே வந்து கொண்டிருந்தேன். கடும் வெயில் வேற ஆகையால் மயங்கி விழுந்துவிட்டேன். கண் விழித்து பார்த்தபோது யாரோ ஒரு கூன் முதுகு கிழவன் என்னை தூக்கி உட்கார வைத்து இரண்டு இட்லி கொடுத்து சாப்பிட சொன்னார்.
இட்லியை சாப்பிட்ட பின்பு தான் என் உயிரே வந்தது என்று அவளின் மகன் கூறியதை கேட்டதும் அவளுக்கு பேய் அறைந்தது போல இருந்தது. அதிர்ச்சி அடைகிறாள் அந்த விஷம் கலந்த இட்லியை கிழவனுக்கு கொடுத்திருந்தால் அது என் மகனின் உயிரை பறித்து இருக்குமே கடவுளே என்று நினைத்து நெஞ்சம் பதைபதைக்கிறது. கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது. நீ செய்த பாவம் உன்னிடம் இருக்கும். நீ செய்த புண்ணியம் உன்னிடமே திரும்பும். அந்த கூனன் கிழவனின் பொருள் இப்போது நன்கு புரிந்தது. உண்மைதான் எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை; புரியும் வகையில் யாரும் வாழ்வதும் இல்லை; செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும் ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். நன்றி!
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.