Life Motivation Story In Tamil | திட்டமிட்டு செயல்படுவது எப்படி?

திட்டமிட்டு செயல்படுவது எப்படி?

வாழ்க்கையில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவது எப்படி? எந்தவொரு செயல்களையும் செய்வதற்கு முன்பு சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயமாக நம் கைகளில் வந்து சேரும்.


அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு அழகான நகரம் ஒன்று இருந்தது. அந்த நகரத்தில் ஒரு சட்டம் இருந்தது அது என்னவென்றால் யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால் அந்த பதவியானது ஐந்து ஆண்டுகள் மட்டும் தான். அந்த நகரத்திற்கு பக்கத்தில் ஒரு ஆற்றங்கரை இருந்தது. அந்த ஆற்றங்கரை பக்கத்தில் ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது. மன்னனாக ஐந்து ஆண்டுகள் பதவி முடிந்தவுடன் அவரை அந்த அடர்ந்த காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள்.
Life Motivation Story In Tamil, திட்டமிட்டு செயல்படுவது எப்படி?
அந்தக் காட்டில் மனிதர்கள் யாருமே கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே இருக்கும். மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும் அந்த மிருகங்கள் கொன்றுவிடும். இச்சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. இந்த நிபந்தனைகளுக்கு யார் சம்மதித்து வருகிறார்களோ, அவர்தான் மன்னனாக முடிசூட்டப்படுவார்கள். ஆக மன்னனாக முடிசூட்டிக் கொண்டால் அவர்களுடைய தலையெழுத்து 5 ஆண்டுகள் மட்டும் தான். ஐந்து ஆண்டுகள் பதவி முடிந்தவுடன் கட்டாய மரணம் தான். இதுதான் அந்த நகரத்திற்கு எழுதப்பட்ட விதியாக இருந்தது.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு வர ஆசைப்படாமல் இருந்தது. அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருந்தாலும் ஒரு சிலர் எப்படி இருந்தாலும் நாம் சாக தானே போகிறோம். மன்னனாகவே செத்துமடிவோம் என்று நினைத்து பதவிக்கு சென்றார்கள். அப்படி பதவியை வகித்த மன்னர்களும் பாதிப்பேர் அவர்களின் அந்த மன்னனான காலகட்டத்தில் மாரடைப்பால் இறந்து போவதும் உண்டு. இப்படி வந்த ஒரு மன்னன் அவரின் ஆட்சி காலம் முடிந்து கடைசி நாளன்று அந்த மன்னன் அந்த ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும்.


அவனை வழியனுப்புவதற்காக நாடே திரண்டு இருக்கிறது. மன்னன் அங்கிருந்து வரும் அவனுடைய சிறப்பான ஆடைகளையும், நகைகளையும் அணிந்து முடிசூடி தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன்னாடி கம்பீரமாக வந்து நிற்கிறான். மக்கள் எல்லாரும் வாய்திறந்து அப்படியான பார்க்கிறார்கள். இன்னும் அரை மணி நேரத்தில் சாகப்போற அவனுக்கு எதற்கு இவ்வளோ அலங்காரம் என்று அங்கே கூட்டத்தில் இருக்கிற சில மக்கள் தங்களுக்குள்ளே பேசி கொள்கிறார்கள்.
மன்னன் அங்கிருந்து தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு ரொம்ப கோபத்தோடு சொன்னார். மன்னன் செல்லும் படகா இது? பெரிய படகைக் கொண்டு வாருங்கள். நான் நின்று கொண்டே போக முடியாது. என்னுடைய சிம்மாசனத்தை கொண்டு வாருங்கள் என்று பயங்கர கோபத்துடன் எங்கே அந்த சேவகர்கள் கேட்கிறார். சேவகர்களை பார்த்து சத்தம் போட்டு சொன்னார். கட்டளைகள் பிறப்பித்தார் காரியங்கள் எல்லாம் கடகடன்னு நடக்கிறது. கொஞ்ச நேரத்தில் ரொம்ப அழகான நல்ல பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு படகு ஒன்று ரொம்ப வேகமாக ஆற்று நீரை நோக்கி செல்கிறது.
அங்கே வரும் மக்களை பார்த்து கையை அசைத்துக் கொண்டே சென்றார். பயணம் தொடங்கியது; மக்கள் எல்லாரும் திகைத்துப்போய் பார்க்கிறார்கள். படகோட்டியும் அதிர்ச்சி அடைந்து அந்த மன்னனை பார்க்கிறான். பயங்கரமான அதிர்ச்சி அடைகிறான் ஏனென்றால் இதுவரைக்கும் இங்கிருந்து மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக போனதே இல்லை. அழுது புலம்பி புரண்டு வெம்பி ரொம்ப கஷ்டப்பட்டு வேதனையோடு மற்றும் கண்ணீருடன் தான் போவார்கள். ஆனால் இந்த மன்னனோ ரொம்ப மகிழ்ச்சியாக வருகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த மன்னரிடம் கேட்கிறான். எங்கே செல்கிறீர்கள் தெரியுமா? என்று கேட்கிறான். மன்னன் சொல்கிறான் தெரியும் அதோட மறுகரைக்கு நான் போகப்போகிறேன். அதற்கு அந்த படகோட்டி சொல்கிறான் அங்கு சென்ற யாரும் இந்த நகரத்துக்கு மறுபடியும் திரும்பி வந்தது இல்லை. மன்னன் சொல்கிறான் தெரியும் நல்லாவே தெரியும் நானும் திரும்பி இந்த நகரத்துக்கு வர போறது இல்லை என்றார்.
சரி எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்று வினவினான் படகோட்டி. அந்த படகோட்டி கேட்டதற்கு மன்னன் சொல்கிறான் அதற்கு நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வீரர்களை காட்டிற்கு அனுப்பினேன். அவர்கள் அந்த கொடிய விலங்குகள் எல்லாத்தையும் வேட்டையாடி கொன்று விட்டார்கள். இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகளை அங்கே அனுப்பினேன். அவர்கள் அங்கிருந்த காட்டை திருத்தி உழுது பயிரிட்டு ஏராளமான தானியங்கள், காய்கறிகள் கிடைக்கிறது. அதே மாதிரி மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்களை அங்கே அனுப்பி வைத்தேன்.


அவர்கள் அங்கு வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார் செய்து வைத்தார்கள். நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகளை அங்கே அனுப்பி வைத்து நிர்வாகத்தை ஏற்படுத்தினேன். நிர்வாகம் எல்லாம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகள் எல்லாரும் அங்கே போய் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை என்னுடைய நாட்டுக்கு தான் போகிறேன். நீங்கள் எல்லாம் நினைக்கிற மாதிரி நான் வாழ தான் போகிறேன் அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன். மன்னனாக என்னோட நாட்டையும் ஆளப்போறன். உனக்கு ஒருவேளை அரண்மனையில் படகோட்டி வேலை வேண்டுமென்றால் நிச்சயம் இந்த படகோடு வாருங்கள். இப்படியே வேலைக்கு சேர்ந்திடுங்கள் என்று அந்த படகோட்டியை பார்த்து மன்னர் சொன்னார்.
இப்பொழுது இங்கே ஒரே ஒரு கேள்வி மட்டும் நாம் எடுத்துக்கொள்ளலாம் மன்னன் வெற்றிக்கு காரணம் என்ன நினைக்கிறீங்க?. பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டு காரணங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீண்ட காலம் உயிர்வாழ நினைத்தது அதுவும் நன்றாகவே வாழ வேண்டும் என்று முடிவெடுத்தது. இரண்டாவது அந்த முடிவை அடைவதற்காக திட்டமிட்டு செயல்பட்டது அந்த மன்னனுடைய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதுபோல் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் நமக்கு என்று ஒரு இலக்கு வேண்டும். ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும் திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைக்கிறது. அது தான் உங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது வெற்றியை உருவாக்குகின்றது.

ஒரு ஆண்டாக படிக்கும் மாணவன் கஷ்டப்பட்டு ஒரு தேர்வுக்கு பயிற்சி எடுக்கிறார் என்றால் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது அவனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தைக் கொண்டுவரும். இந்த மாதிரி திட்டமிட்டு உழைப்பது அது தான் அவர்களுடைய நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்வது என்பது நம் வாழ்க்கையை மேன்மை அடைய செய்யும். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு திட்டமிடுதல் என்பது அவசியம் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். இந்தத் திட்டத்தை நம்மால் நிறைவேற்ற முடியுமா? என்பதை உணர்ந்து பிறகு அதை செயல்படுத்துவதற்கு முயற்சி எடுத்து கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயமே! நன்றி.

Related Tags

திட்டமிட்டு செயல்படுவது எப்படி? | How To Prepare for Strategic Planning? | Impossible To Possible Stories | Inspirational Career Stories | Best Ways To Make The Impossible Possible | How To Make Impossible To Possible | Impossible Things Made Possible | New Motivational Story In Tamil | Self Motivation Story In Tamil | Short Motivational Story In Tamil | விமர்சனத்தை வெல்வது எப்படி?| Story For Motivation In Tamil | Tamil Motivation Story In Tamil | Confidence Story In Tamil | Stories In Tamil for Reading | Life Motivation Story In Tamil.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook