Fear To Motivational Kutty Story In Tamil
அச்சம் என்பது மடமையடா என்றதொரு பாடல் உண்டு. அச்சம் என்பது மனச் சோர்வையும் நாம் மன உறுதியின்மையையும் காட்டுகிறது. அச்சம் தவிர் என்றார் மகாகவி பாரதியார். எப்பொழுதும் அச்சத்துடன் இருப்பது மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும் மற்றும் சந்தோஷத்திற்கும் ஒரு பெரிய தடைக்கல்லாக இருக்கும். பயத்தால் தினந்தோறும் செத்து செத்து பிழைப்பதை விட ஒரே முறை சாதல் நல்லது என்று சொல்வார்கள் நாம் முன்னோர்கள்.
அச்சம் என்பது பலவீனத்தின் அடையாளம் ஆகும். தன் மீது நம்பிக்கை இல்லாதவனே தொடர்ந்து அச்சப்படுகிறான். நம் அச்சத்தை முழுமையாக அகற்றிவிட்டால் தான் முன்னேற்றத்திற்கான வழியே தென்படும். அச்சம் ஏற்படும் போது ஒரு மனிதனின் ஆரோக்கியம், வளர்ச்சி, மற்றும் மகிழ்ச்சி என எல்லாம் பாதிக்கப்படுகிறது.
தன்னம்பிக்கை இல்லாத மனிதனை நாத்திகன் என்று கூறினார் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர். மனிதன் எதைப் பற்றி தீவிரமாக நினைக்கிறானோ? அவன் அதுவாகவே மாறி விடுகின்றான். அச்சப்படும் போது ஒரு மனிதனின் அறிவு, திறமைகள், மற்றும் ஆற்றல்களை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியாமல் போகிறது. ஆகையால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதே அச்சத்தை தவிர்ப்பதற்கான உறுதியான வழி. செய் அல்லது செத்துமடி என்றார் மகாத்மா காந்தியடிகள்.
நாம் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினால், தண்ணீரில் குதித்தால் தான் அது சாத்தியம் ஆகும். தண்ணீரைக்கண்டு அச்சப்பட்டு கொண்டு இருப்பவனால் என்றுமே நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. வாழ்க்கையில் எப்படி எதிர்நீச்சல் போடுவது?. துணிச்சலை நாம் வளர்த்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும் போது தான் அச்சத்திலிருந்து விடுபட முடியும். தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களோடு நட்பு கொள்ளும்போது அவர்களிடமிருந்து நமக்குள் இருக்கும் அச்சத்தை தவிப்பதற்கான வழியை காண முடியும்.
விடாமுயற்சி உடையவன் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று துணிந்து செயல்படுகிறான். துணிந்தவன் தூக்குமேடையையும் துச்சமென நினைக்கிறான். எழுந்து நடந்தால் இமயமும் கைகொடுக்கும். சிறு உளியால் பெரிய மலையையே உடைத்தெறிய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும் போது நமக்குள் இருக்கும் அச்சம் பறந்தோடிவிடும். வாழ்வில் ஏற்படும் சோதனைகளை கடந்து பல சாதனைகளை புரிய பிறந்தவன் மனிதன். நாம் சாதிக்க விரும்புவது Whatever முதலில் Fear தவிர்த்தாக வேண்டும்.
உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பது இல்லையே என்றார் மகாகவி பாரதியார். வாழ்க்கை என்பது பல சறுக்கல்களைக் கொண்டது, பல ஆபத்துக்கள் நிறைந்தது இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பல எதிர்பாராத ஏமாற்றங்களைக் கொண்டு வருவது தான். இவற்றையெல்லாம் கண்டு அச்சப்படாமல் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு சிறந்த வழி அச்சத்தைத் தவிர்த்தாக வேண்டும்.
அச்சம் தவிர்
தன்னம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கையில் நாம் எதையுமே அடைய முடியாது. நம்மில் பலபேர் தோற்றுவிட்டால் மரியாதை இழந்து விடுவோமோ என்று பயந்து போய் எந்த ஒரு செயலை செய்ய முயற்சிக்காமல் விட்டுவிடுகிறோம். வாழ்க்கையில் நாம் ஜெயிக்க வேண்டுமென்றால் தன்னம்பிக்கை நிச்சயமாக வேண்டும்.
ஒரு வளமான நாட்டை ஆட்சி செய்கிற ஒரு அரசன் தன் நாட்டு மக்களை போற்றி பாதுகாத்து வந்தான். தன் நாட்டு மக்களுடைய அறிவு, வீரம் இதெல்லாம் எப்படி இருக்கிறது என்று சோதனை செய்து பார்க்க நினைத்தார். அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு போட்டி ஒன்று அறிவிக்கிறான். அது என்னவென்றால் அரசர் இருக்கிற கோட்டை கதவுகளை திறக்க வேண்டும். அந்த போட்டியில் வெற்றி பெற்றால் அந்த நாட்டின் அரசனாக முடி சூடி கொள்ளமுடியும். ஒருவேளை தோற்றுவிட்டால் கதவை திறக்க முயற்சி செய்தவனின் கைகள் வெட்டப்படும் என்று சொல்லி போட்டியை அறிவிக்கிறார்கள். இதைக் கேட்ட மக்கள் தங்களுக்குள்ளே மாறி மாறி பேசிக்கொள்கிறார்கள் ஏதாவது ஆயிடும் நம்மால் முடியாது என்று பயந்து யாருமே போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை.
ஒரே ஒரு இளைஞன் மட்டும் முன்னால் வந்து போட்டியில் கலந்துக் கொள்ள தயாராக வந்தான். அவனை பார்த்த மக்கள் சொல்கிறார்கள் போட்டியில் நீ தோற்றுவிட்டால் உனது கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும் நீ ஏன் இந்த போட்டியில் கலந்துக் கொள்ள போகிறாய் என்று கேட்டார்கள். அதற்கு அந்த இளைஞன் சொல்கிறான். ஐயா, வெற்றி பெற்றால் நானும் ஒரு அரசன். அப்படி ஒருவேளை தோற்றுவிட்டால் கைகள் மட்டும் தானே போகும் உயிரில்லையே என்று சொன்னான் அந்த இளைஞன்.
தன்னம்பிக்கையோடு கதவை திறக்கிறான் என்ன ஒரு அதிசயம் கதவு சட்டென்று திறந்துவிடுகிறது. எப்படியென்றால் அந்த கோட்டைக் கதவு ஆனது தாழ்ப்பாள் போடாமல் திறந்துதான் இருந்தது. நம்மில் பல பேர் இப்படித்தான் எதையாவது தோற்றுவிடுவோமோ; எதையாவது இழந்து விடுவோமோ; என்று நினைத்துக்கொண்டு எதற்குமே முயற்சிக்காமல் எதையுமே செய்யாமல் விட்டால் நம் எல்லோருக்குமே தெரிந்த முயல் ஆமை கதையில் வருகிற முயல் தோல்விக்கு காரணம் முயலாமல் மட்டும்தான்.
Related Tags
Motivational Story In Tamil | How To Overcome Fear? | அச்சம் தவிர் | Motivational Kutty Story In Tamil | Motivational Moral Story In Tamil | Motivational Stories In Tamil | Motivational Short Story In Tamil | Motivational Story About Tamil | Tamil Stories | Kutty Story In Tamil | Failure To Success Story In Tamil | Life Story In Tamil | Success Story In Tamil | Positive Thinking Short Stories In Tamil | Motivational Video Tamil | Fear Motivational Story | Motivational Story In Tamil About Fear | Short Motivational Stories | Short Inspirational Stories.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.