Motivational Stories In Tamil for Students | வெற்று பேப்பரால் கிடைத்த வேலை

Motivational Stories in Tamil for Students

'கவனித்தல்' என்பது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். இந்த டிஜிட்டல் உலகத்தில் போட்டி போட்டு வேலை பார்த்து பணம், புகழ், நற்பேறு, சம்பாதிக்க நினைக்கிற நாம் நிறைய நேரங்களில் நம் கவனத்தை இழந்து தவிக்கிறோம். இதனால் நல்ல வாய்ப்புகளை கூட சில நேரங்களில் தவற விட்டுவிடுகிறோம். இதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற ஒரு அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது. அதை பார்த்த நிறைய நபர்கள் வேலை கேட்டு நேர்காணலுக்கு அங்கே சென்றார்கள். எல்லாருமே ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள். எல்லாருக்கும் வினாத்தாளும்; விடை எழுதுவதற்கான தாளும் கொடுத்தார்கள். இப்பொழுது அந்த நிறுவனத்தின் மேலாளர் பேசுகிறார். இந்த வினாத்தாளில் 10 கேள்விகள் இருக்கிறது பத்து கேள்விக்கும் உங்களுக்கு ஐந்து நிமிஷம் கால அவகாசம் வழங்கப்படும்.
Motivational Stories In Tamil for Students, வெற்று பேப்பரால் கிடைத்த வேலை
நீங்கள் இந்த கேள்விக்கான பதிலை ஐந்து நிமிஷத்துக்கு உள்ளே எழுதி முடிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஐந்து நிமிஷம் நேரம் வந்து வழங்கப்படுகிறது. நேரமும் ஆரம்பமானது, எல்லாருமே நேரம் குறைவாக கொடுத்து இருக்குகிறார்கள் என்று ஐந்து நிமிடத்திற்குள் கடகடவென்று பதில் எழுதி வேலை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரமாக பதில் எழுத ஆரம்பித்தார்கள். ஐந்து நிமிட (5 Minutes) நேரம் முடிகிறது.
ஐந்து நிமிடம் கழித்து அந்த மேலாளர் வந்து எல்லாரிடமும் விடைத்தாளை வாங்கி சென்றார். போட்டியில் கலந்து கொண்ட நபர்கள் அவர்களுக்குள்ளே பேசி கொள்கிறார்கள். நேரம் ரொம்ப குறைவாக கொடுத்ததால் என்னால் நான்கு கேள்விக்குத்தான் பதில் எழுத முடிந்தது. மற்ற நபர்களும் சொல்கிறார்கள் என்னால் ஐந்து கேள்விக்குத்தான் பதில் எழுத முடிந்தது. என்னால் ஏழு கேள்விக்கு மட்டும் தான் முடிந்தது. இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த மேலாளர் எல்லாரிடமும் விடைத்தாளை வரிசையாக வாங்கிக்கொண்டு வந்தார். அதில் இரண்டு நபர்கள் மட்டும் எந்த கேள்விக்கும் பதில் எழுதவில்லை. அந்த நபர்கள் வெற்றுத்தாளை (Empty Paper) மட்டும் கொடுத்தார்கள். இதை வாங்கி கொண்ட அந்த மேனேஜர் சொன்னார். எந்த கேள்விக்குமே பதில் எழுதாத இந்த இரண்டு பேர் தான் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள் என்று சொன்னார்.


இதை பார்த்த எல்லாருமே ரொம்ப அதிர்ச்சி அடைகிறார்கள். இது என்னங்க!, பதில் எழுதிய நாங்கள் அங்கே வேலை செய்ய தகுதி இல்லாதவர்கள் என்று சொல்கிறீர்கள். பதில் எழுதாமல் இவர்கள் இரண்டு பேர் மட்டும் தான் இருக்குறாங்கள். இந்த இரண்டு பேரும் மட்டும் தான் வேலைக்கு தகுதியானவர்கள் என்று சொல்கிறீர்கள் எப்படியென்று மேனேஜரைப் பார்த்து கேட்கிறார்கள். அதற்கு அந்த மேனேஜர் (Manager) சொல்கிறார் நீங்கள் எல்லாரும் உங்கள் கையில் இருக்கும் வினாத்தாளை பாருங்கள்.

அந்த வினாத்தாளை எடுத்து பத்தாவது கேள்வியை படியுங்கள் என்று சொன்னார். உடனே எல்லாருமே கையில் இருக்கும் வினாத்தாளை எடுத்து வேகமாக பார்த்தார்கள். அந்த வினோத கேள்வியானது அப்பொழுது தான் அவர்களுக்கு புரிந்தது. அதாவது பத்தாவது கேள்வியானது மேலே இருக்கிற எந்த கேள்விக்கும் பதில் சொல்ல தேவை இல்லை என்று இருந்தது. ஆகையால் இந்த அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் பதில் அளிக்க தேவையில்லை என்று சொன்னார்.
அந்த பத்தாவது கேள்வி படித்த எல்லாருக்குமே எந்த கேள்வியும் கேட்க முடியாமல் வாயடைத்து போய்விட்டார்கள். அடக்கடவுளே!,என்று ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாக போய்கிறார்கள். இந்த கதையினை படித்து நாம் சிரிக்கிற விஷயம் கிடையாது. உண்மையில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் தான். ஏனென்றால் இன்றைய நிலையில் நிறைய நபர்கள் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கவனத்தை எல்லாத்தையும் தொலைத்து விடுகிறோம். அதனால் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கவனிக்க கூட மறந்துவிடுகிறோம். நாம் என்ன செய்தாலும் ஒரு நிமிடம் பொறுமையாகவும் கவனமாகவும் அதை கையாளும் போது நாம் எந்த வாய்ப்புகளை நழுவவிடாமல் வெற்றியை நோக்கி முன்னேற முடியும். நன்றி!

Related Tags

Motivational Stories In Tamil for Students | Moral Stories for Youngsters In Tamil | Best Motivational Stories for Students | Motivational Short Stories for Students In Tamil | Motivational Story for Students | Top Motivational Stories for Students | Best Motivational Stories In Tamil | Motivational Short Stories In Tamil for Students | Motivational Stories In Tamil For Employees | Motivational Stories In Tamil For School Students | Motivational Stories For Students In Tamil | Motivational Stories In Tamil For Aspirants | Motivational Stories In Tamil For Exam Preparation | Motivation For UPSC Aspirants | IAS Inspirational Story | IAS Motivational Stories | Motivational Stories for Studies in Tamil | Motivational Story in Tamil for Students | Motivational Stories for NEET Aspirants | Motivational Stories for Sales Team | Motivational Stories for Competitive Exams | Interview Preparation Tips In Tamil | Powerful Motivational Story In Tamil | Motivational Stories for Corporate Employees.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.



Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook