பயத்தை நீக்கிப் பயணம் செய்
ஒரு நாட்டின் மிகப்பெரிய சக்கரவர்த்தி இருந்தார். அவருக்கு கீழ் பல சிற்றரசுகள் இருந்தன. ஒருமுறை இந்த நாட்டு மன்னனை பார்ப்பதற்காக பக்கத்து நாட்டில் இருந்து ஒரு அறிஞர் வந்திருந்தார். அவர் இந்த அரசருக்கு ஒரு பரிசு ஒன்று கொடுத்தார். அது என்னவென்று பார்த்தால் அது தாயை இழந்த 2 பஞ்சவர்ண கிளி குஞ்சுகளை பரிசாக கொடுத்துவிட்டு போனார். எல்லாரும் பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக பார்ப்பார்கள். அதனால் அரசர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளர் அழைத்து வர சொன்னார். பயிற்சியாளர் பார்த்து இந்த பஞ்சவர்ண கிளி குஞ்சுகளை நல்ல படியாக வளர்த்து எடுங்கள் என்று சொன்னார். அரசர் பஞ்சவர்ண கிளி குஞ்சுகளை பறப்பதற்கு நன்றாக பயிற்சி அளிக்க கட்டளை இட்டார். பயிற்சியும் (Parctice) ஆரம்பம் ஆனது. இப்படியே பல மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்ந்து இருக்கு, நன்றாக பறக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை தெரிந்துக் கொள்வதற்காக அந்த பயிற்சியாளரை அழைத்தார்.
பயிற்சியாளர் மன்னனை பார்ப்பதற்கு அரண்மனைக்கு செல்கிறார். அரசே!, இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறப்பதற்கு பழகி விட்டது. ஆனால் இன்னொரு கிளியை நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். இருந்தாலும் கூட அது உட்கார்ந்திருக்கும் கிளையிலிருந்து கொஞ்சம் கூட நகர வில்லை என்று சொன்னார். இதைக் கேட்ட மன்னர் உடனே நம் நாட்டில் இருக்கிற பிரபலமான கால்நடை மருத்துவர்களையும் மற்றும் பிரபலமான பறவையியல் நிபுணர்களையும் அழைத்து வந்து பறவைக்கு என்ன நடந்தது என்று பாருங்கள் என்று சொன்னார்.
அது ஏன் பறக்கவில்லை என்று சோதனை செய்து பாருங்கள் என்று கட்டளை இட்டார். அவர்களும் அந்த பறவையை முழுமையாக பரிசோதனை செய்தார்கள். பரிசோதனை செய்த பார்த்த பிறகு அந்தப் பறவைக்கு எந்தக் குறைபாடுகளும் கிடையாது. மன்னரே, அந்த பறவையின் உடலில் மீது எதாவது ஊனம் இருக்கிறதோ? என்று புரியவில்லை என்றார்கள். மன்னர், உடனே தனது அமைச்சர்களை அழைத்து சொன்னார் நீங்கள் என்ன செய்வீர்களோ? ஏது செய்வீர்களோ? தெரியாது. இந்த பஞ்சவர்ண கிளியானது இன்னும் இரண்டு நாட்களுக்குள் பறக்க வேண்டும் என்று சொன்னார்.
கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் அரசர் அவருடைய மாளிகையில் இருந்து அந்த மரத்தை பார்த்தார். அந்த மரத்தில் அந்த பஞ்சவர்ண கிளி அமர்ந்த படியே இருக்கின்றது. அது உட்கார்ந்த இடத்திலிருந்து கொஞ்சம் கூட நகரவில்லை. மன்னர்க்கு முகம் வாடி போனது. அதை பார்த்ததிலிருந்து என்ன தான் நடந்தது இந்த கிளிக்கு என்று பலத்த சிந்தனையில் இருந்தார். இந்த கிளிக்கு என்ன ஆகிவிட்டது எனக்கு தெரியவில்லையே?. நாம் என்ன செய்யலாம் என்று யோசித்து பார்த்தார்.
கிராமப் புறத்தில் உள்ள வயலில் வேலைச் செய்யும் விவசாயிகளை அல்லது மூத்த குடிமக்கள் யாரையாவது அழைத்து வந்து அவர்களிடம் இதைப் பற்றி கேட்கலாம் என்று யோசித்தார். அவர்களுக்கு ஒருவேளை இதைப் பற்றி தெரிந்து இருக்க கூடும். யோசித்துக் கொண்டே உடனே அங்கே இருக்கின்ற காவலாளிகளை அழைத்தார். நாட்டுப் புறத்திற்கு சென்று மூத்த விவசாயி அல்லது மூத்த குடிமக்கள் யாராவது இருந்தால் ஒருவரை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார்.
அடுத்த நாள் காலையில் அரசர் கண் விழித்து ஜன்னல் வழியாக அந்த மரத்தை பார்த்தார். அப்போது பார்க்கும் பொழுது அந்த பஞ்சவர்ணக் கிளியானது மரத்தை சுற்றி பறந்து கொண்டிருந்தது. அதை பார்த்த மன்னருக்கு ஒரே சந்தோஷம் அடைந்தார். இந்த அற்புதத்தை யார் செய்தார். உடனே அழைத்துக் கொண்டு வாருங்கள். நான் பார்க்கணும் வேண்டும் என்று மன்னர் சொல்கிறார். மன்னரின் அரண்மனைக்குள் விவசாயி ஒருவர் பணிந்து வந்து வணங்குகிறார். மன்னர் கேட்டார், நிறைய மனிதர்கள் முயற்சி செய்து தோற்றுவிட்டார்கள். ஆனால் நீங்கள் மட்டும் எப்படி அந்த கிளியை பறக்க வைத்தீர்கள் என்று கேட்டார்.
அந்த விவசாயி அரசன் முன் தலை வணங்கி சொன்னான். அரசே!, அது ரொம்ப ஈஸியான காரியம் அரசே என்றான். அதாவது அந்த மரத்தின் மீது ஏறி பஞ்சவர்ண கிளி அமர்ந்திருந்த கிளையை வெட்டி விட்டேன் என்று சொன்னார். அதே போல தான் கடவுளும், சில நேரங்களில் அந்த விவசாயி போல தான் செயல்பட்டு நம் சக்தியை உணர செய்வார். அப்போது அவர் சில சோதனைகளை தருவார். அது நம்முடைய நன்மைக்கு தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய ஆற்றலை உணர வேண்டிய நிலை வருகின்ற போது நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும்.
நாம் எல்லாருமே உயர பறப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள். ஆனால் சில சமயங்களில் நம்மிடம் இருக்கின்ற சக்தியை உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றோம். அதுவும் ஒரே இடத்திலிருந்து ஏற்கனவே பழக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்துக் கொண்டு இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா? அல்லது முடியாதா? என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை; முடிவற்றவை.ஆனால் நம்மில் நிறைய பேருக்கு அது கண்டுபிடிக்கப் படாமலேயே போய் விடுகின்றார்கள்.
'செக்குமாடு' சுத்துவது போல ஒரே இடத்தில் இருந்து கொண்டு மிக சுலபமான ஒரே வேலையை செய்வதில் தான் சிலர்க்கு ஆர்வம் இருக்கின்றது. அதனால் தான் சில பேரின் வாழ்க்கை ஒரு உற்சாகமான, திரில்லிங்கான, மனநிறைவே என்பது இல்லாமல், மிக சாதாரணமான நாளாகவே கழிந்து விடுகின்றது. நம்மிடம் இருக்கும் 'பயம்/அச்சம்' என்ற கிளையை வெட்டி எறிந்து விட்டு உயரப் பறக்க வேண்டும். சுதந்திரப் பறவைகளாக!. நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் என்கிற மனப்பாங்கு எப்போதும் இருக்க வேண்டும். நன்றி வணக்கம்!.
Related Tags
Fear Motivational Story In Tamil | Life Success Stories | Failure To Success Story In Tamil | Overcoming Fear To Achieve the Victory | How To Overcome Fear In Life | Short Motivational Story In Tamil | முயற்சி இல்லாமல் எதையுமே சாதிக்க முடியாது | அச்சம் தவிர் - துணிந்து செல் | Motivation Story About Confidence | Short Inspirational Stories | Motivational Story About Avoid Fear | How to overcome Fear of Failure In Tamil | Motivational Video In Tamil | Short Moral Stories with Proverbs.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.