விமர்சனத்தைத் தாண்டி வாருங்கள் வெற்றி நிச்சயம்
உங்களுடைய செயல் மற்றும் பேச்சுப் பற்றி மற்றவர்கள் விமர்சனம் செய்கின்ற போது உங்களுக்கு சட்டென்று கோபம் வருகின்றதா?. எப்போதும் உங்களைப் பற்றி வருகின்ற விமர்சனங்களை ஒரு வேகத்தடையாக பார்க்க வேண்டும். ஆனால் ஒருபோதும் அந்த இடத்திலேயே நின்று விடக் கூடாது. நம் வாழ்க்கையில் வருகின்ற எந்த மாதிரி விமர்சனங்களாக இருந்தாலும் சுலபமாக கையாள கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக் கொண்டு செயலாற்றும் போது அதுவே நமக்கு வெற்றி படிக்கட்டுகளாக மாறும்!.
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!உங்களைப் பற்றி ஒருவர் தாறுமாறாக விமர்சனம் செய்கின்றார் அதற்காக நீங்கள் பயப்பட தேவை இல்லை. ஏனென்றால் விமர்சனங்கள் உங்களை வலிமையாக மாற்றும். எதிர்மறையான விமர்சனங்கள் உங்களுக்கு மனஉளைச்சலை கொடுக்கும். ஆனால் நீங்கள் அதை எப்போதும் நேர்மறையாக எடுத்து கொள்ள வேண்டும். விமர்சனம் என்பதை சில நேரங்களில் விமர்சனம் செய்கின்ற நபரால் அந்த காரியத்தை செய்து முடிக்க முடியாமல் இருக்கலாம். நீங்கள் அந்த மாதிரி செயல்களை செய்து முடித்து காட்டுகின்ற போது அவர்களின் கடுமையான விமர்சனத்துக்கு தள்ளப்படலாம். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து விமர்சனங்கள் மட்டும் செய்துக் கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலும் மனதிடம் குறைந்தவர்களாக இருக்கலாம். உங்களைப் பற்றி எழுகின்ற ஒவ்வொரு விமர்சனங்களையும் எதிர்கொண்டு நீங்கள் அதற்கு பதில் சொல்வதும் கூட ஒரு சிறந்த கலை தான்!.
விமர்சனங்கள் ஒருபோதும் உங்களை காயப்படுத்த கூடாது. நிறைய மனிதர்கள் இருக்கும் பொது இடங்களில் நீங்கள் விமர்சனங்களில் இருந்து விலகி இருக்க முடியாது. ஒரு கூட்டத்தில் நிறைய மக்கள் இருக்கலாம். அதில் நான்கு நபர்கள் உங்களைப் பற்றி விமர்சனம் செய்யலாம். ஆனாலும் நாற்பது நபர்கள் உன் செயலை போற்றிப் புகழலாம். உங்களை விமர்சிப்பதன் மூலம் அவர்களுக்கு ஏதோ ஓர் வகையில் மகிழ்ச்சி கிடைக்கிறது என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் அவர்களின் விமர்சனங்கள் உங்களுக்கு எதோ ஒரு வகையில் விளம்பரத்தைத் தேடித் தருகிறது என்று கூட சொல்லலாம். அவர்கள் உங்களை விமர்சித்து ஒரு வகையில் நன்மை தான் செய்கிறார்கள் என்றே நினைத்து கொள்ளுங்கள். இன்னும் சிலரோ செய்யும் விமர்சனங்கள் யாரையும் எந்த விதத்திலும் எந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பது அவர்களுக்கே தெரியும்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரைஇருந்தாலும் தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை நினைத்து நீங்கள் பரிதாபம் தான் அடைய வேண்டும். ஏனெனில் அவர்களின் வேலையெல்லாம் தவிர்த்து விட்டு உங்களைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் மனைவி, குழந்தைகளை கூட கவனிக்காமல் உங்களின் மீது தனி கவனம் செலுத்துவார்கள். ஆகையால் அவர்களின் குடும்பத்திற்குள் கூட பிரச்சினைகள் வரலாம். அவர்கள் தினந்தோறும் செய்யும் வேலையெல்லாம் மறந்து விடலாம். அதே மாதிரி அவர்கள் செய்கின்ற வேலையில் முழு கவனமும் செலுத்த முடியாமல் போய் விடலாம். இதெல்லாம் வைத்து பார்க்கின்ற போது உங்களுடைய முன்னேற்றத்திற்கு அவர்கள் ஒரு தடையாக இருக்கின்றார்கள் என்பது உண்மை தான். மற்றவர்களை விமர்சனம் செய்துக் கொண்டே இருப்பவர்கள் இருக்கட்டும். அவர்களால் ஒருபோதும் விமர்சிக்கப்படுகின்ற நிலைக்கு உயரவே முடியாது.
நீங்கள் எதிர்கொள்கின்ற விமர்சனங்களை ஒரு கலையாக நினைத்து செயல்பட்டால் அதைப் பற்றிய அச்சம் இல்லாமல் போய்விடும். யாரால் விமர்சிக்கப் படுகின்றோம் என்று பார்க்காமல் விமர்சிக்கப்படும் கருத்து என்னவென்று பார்க்க வேண்டும். அது என்னவென்று கண்டறிந்து கவனம் செலுத்தத் தொடங்கினால் அது உண்மையான அக்கறையோடு கூறப்பட்ட விமர்சனமா? என்பது உங்களால் புரிந்து கொள்ள முடியும். உண்மையான அக்கறையோடு கூறப்படுகின்ற பயனுள்ள விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்ள வேண்டும்.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அவரின் சொந்த நாட்டிலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதுவும் அவர் காதுகளில் கேட்கும் படியாக விமர்சினம் செய்தார்கள். அந்த விமர்சினம் எல்லாத்துக்குமே சரியான பதிலடி கொடுத்தார் லிங்கன். தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட எட்வர்ட் என்பவர் ஒரு தடவை ஆபிரகாம் லிங்கனை பார்த்து மகா முட்டாள் என்று கூறியுள்ளார். அதற்கு லிங்கன் சரியான பதிலடி கொடுத்து பேசினார். என்னை முட்டாள் என்று தெரிந்து வைத்திருக்கும் எட்வர்ட் அதி புத்திசாலி ஆவார்.
ஆனால் என்ன செய்வது ஒரு மகா முட்டாள் வந்து தான் தங்களை வழிநடத்த செல்ல வேண்டும் என்று அமெரிக்க மக்களே தீர்மானித்து விட்டார்கள். நான் என்ன செய்வது என்று அமெரிக்க மக்களையும் தன்னோடு இணைத்து இப்படி பதிலடி கொடுத்தார் லிங்கன். அதற்கு பதில் சொல்ல முடியாமல் எட்வர்ட் தலை கவிழ்ந்தார். அதன் பின் ஆப்ரஹாம் லிங்கன் கிட்ட மன்னிப்பு கேட்டார். அப்போதும் கூட அவர் சரியென்று விட்டு விடவில்லை. ஒரு முட்டாளிடம் ஒரு அதி புத்திசாலி மன்னிப்பு கோருவது அமெரிக்காவில் மட்டும் தான் நடக்கிறது என்றார். கொஞ்சம் கூட கோபப்படாமல் அமைதியாக இருந்து நிதானமாக பதிலடி கொடுத்தார். இப்படித்தான் நாம் பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்மிக சாதாரண மனிதனாக பிறந்து சாதாரண மனிதர்களோடு வளர்ந்து அமெரிக்கா நாட்டிற்கே ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நினைத்தார். அதற்கு அவர் என்ன செய்தார் என்றால் தேர்தலில் போட்டியிட்டார். தான் போட்டியிட்ட அடிப்படை தேர்தலில் தோல்வியை சந்தித்தார். அடுத்த தேர்தலிலும் தோல்வியைத் தழுவினார். ஒன்று, இரண்டு தடவை அல்ல 13 தடவை தோல்வியை சந்தித்த பிறகு அமெரிக்கா நாட்டிற்கே அதிபர் ஆனார். அவர் தான் சாதாரண செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாக வாழ்க்கையை ஆரம்பித்த ஆபிரஹாம் லிங்கன் ஆவார்.
ஆபிரகாம் லிங்கன் அவர்கள் ஒரு தலைமை பொறுப்பில் போய் உட்கார்ந்து இருந்தார். அந்த கூட்டத்தில் அவருடைய இருக்கையில் அமர்ந்து இருந்தார். அதே கூட்டத்தில் அமர்ந்திருந்த பெரும்பாலான மனிதர்கள் அடிப்படையிலேயே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த மாதிரி சூழலில் செருப்பு தைத்து சரி செய்து கொடுக்கும் ஒரு சாதாரண தொழிலாளியின் மகனாக வந்து இருக்கிறாய் என்று சிலர் கேலி கிண்டல் செய்தார்கள். இதனை பார்த்த சிலருக்கு மனவருத்தம் ஏற்படுகிறது.
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறுஅதற்கு லிங்கன் பதில் அளித்தார். அன்று என் அப்பா தைத்துக் கொடுத்த செருப்பினை தான் இன்றும் நான் அணிந்து இருக்கின்றேன் என்றார். மேலும் லிங்கன் அவரின் தொழிலை இழிவுப்படுத்தி பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார். ஆபிரகாம் லிங்கன் உயர்ந்த பதவியில் இருந்தார். ஆகையால் மிக நிதானமாக அவர்கள் கேட்கும் கேள்விகளை நன்றாகப் புரிந்துகொண்டு லிங்கன் பதில் சொன்னார். உண்மை தான், என் அப்பா தைத்துக் கொடுத்த செருப்பு இவ்வளவு காலம் உழைக்கின்றது. அதிலிருந்து உங்களுக்கே தெரியும் அவரின் தொழில் திறமை என்னவென்று. நீங்கள் அணிந்திருக்கும் காலணிகளில் என்றாவது ஒருநாள் பழுது ஏற்பட்டால் அதை என்னிடம் கொடுங்கள் நான் சரி செய்து கொடுக்கின்றேன் என்றார். ஏனென்றால் எனக்கு காலணிகளை தயாரிக்கவும் தெரியும். இந்த உலகை ஆளவும் தெரியும் என்று கூறி மிக சரியான பதிலடி கொடுத்தார்.
விமர்சனம் செய்ய எந்த தகுதியும் தேவை இல்லை. ஆனால் விமர்சிக்கப்படுகின்ற நீங்கள் தகுதியானவர்களாக இருப்பீர்கள். காய்ந்த மரம் தான் கல் அடி படும் என்று கூறுவார்கள். அதுபோல நேர்மறையான அல்லது எதிர்மறையான விமர்சனங்கள் வரும் போது அதை பக்குவமாக கையாள தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்படி செயல்படும் போது வெற்றி கனியை நம்மால் எளிதில் பறித்து விடலாம்!. நன்றி வணக்கம்!
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லாRelated Tags
விமர்சனத்தைத் தாண்டி வாருங்கள் வெற்றி நிச்சயம் | Success Story In Tamil | விமர்சனத்தை வெல்வது எப்படி? | விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி? | Real Life Motivational Story In Tamil | Tamil Motivational Story | Motivational Short Stories In Tamil | Motivational Story In Tamil for Students | Motivation Story Tamil | Life Motivational Story In Tamil | Inspiring Story In Tamil | Inspirational Stories In Tamil | Best Motivational Story In Tamil | Motivation Story In Tamil | Tamil Motivation Story | Motivation Kathai In Tamil | Life Story In Tamil | Students Motivational Story In Tamil.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.