Real Life Motivational Story In Tamil | சாதிக்க நினைப்பவர்களுக்கு நிறம் ஓர் தடையல்ல!

சாதிக்க நினைப்பவர்களுக்கு நிறம் ஓர் தடையல்ல

இன்றைக்கு நம் ஊர்களில் நிறையப் பேர் நாம் கருப்பாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர தயங்குகிறோம். கருப்பு நிறம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமே இல்லை. காட்டுலேயும், மேட்டுலேயும், கழனிலேயும், வீட்டிலேயும் பாடுபட்டு உழைக்கும் வர்க்கத்தின் தோல் கருத்துப் போவது, உழைப்பைப் பாராட்டி சூரியன் கொடுத்த பட்டமளிப்பு அல்லது பாரம்பரியத்தின் பரிசளிப்பு என்றே சொல்லலாம்!.


கருப்பாக இருப்பது ஒரு பாவமும் இல்லை, பழியும் இல்லை பாரத கௌரவம் மற்றும் பாரம்பரியத்தின் பண்பு என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். மேலும் சலவை கல்களில் Jet Black தான் விலை அதிகம் என்று சொல்வார்கள். அதை போல் சிலைகளில் கூட கருப்பு கல்லில் தான் கலை அதிகம் என்று சொல்வார்கள். நமக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தள்ளி வைத்தால் வெற்றி நிச்சயம்!.
Real Life Motivational Story In Tamil, சாதிக்க நினைப்பவர்களுக்கு நிறம் ஓர் தடையல்ல!
அமெரிக்காவில் ஒரு பள்ளிக்கூட வாசலில் ஒரு பலூன் வியாபாரி தன்னிடம் இருக்கும் பலூன்கள் எல்லாத்தையுமே கட்டி மொத்தமாக காற்றில் பறக்கவிட்டு கொண்டிருந்தார். இது எதற்காக என்றால் எப்பொழுது அவரிடம் வியாபாரம் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறாரோ அப்பொழுது தன்னிடமிருக்கும் ஒரு சில கலர் பலூன்களை எடுத்து அந்த பலூன்களில் காற்றை ஊதிக் கட்டி காற்றில் பறக்க விடுவார். அப்பொழுது குழந்தைகள் எல்லாம் ரொம்ப ஆசையாய் அவரிடம் பலூன் வாங்குவதற்கு ஓடி வருவார்கள். இது அவருடைய வியாபார யுக்தி என்றே சொல்லலாம். அவரின் மிதிவண்டியில் மஞ்சள், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, கருப்பு கலர் என்று கலர் கலரான பலூன்களைக் கட்டி காற்றில் பறக்க விடுகிறார். அந்த பலூன்கள் காற்றில் தலையை அசைத்துக் கொண்டிருக்கிறது.
இதை பார்க்கின்ற குழந்தைகள் ரொம்ப சந்தோஷமாக ஓடி வந்து அவரிடம் கை காட்டி வெவ்வேறு கலர் கலரான பலூன்களை வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் அங்கிருந்த ஒரு கருப்பு கலர் பலூனை மட்டும் யாருமே வாங்குவது இல்லை. அது மட்டும் ரொம்ப சோகமாக காற்றில் தலையை அசைத்துக் கொண்டிருந்தன. அவர் நினைத்த மாதிரியே அன்றைய தினம் வியாபாரம் ரொம்ப நல்லவே போனது. எல்லா பலூன்களும் விற்பனையாகிவிட்டது. வியாபாரம் ரொம்பவே பிரமாதமாக நடந்தது. ஆனால் அந்த ஒரே ஒரு கருப்பு பலூன் மட்டும் யாருமே வாங்கவில்லை. அந்த பலூன் மட்டும் தனியாக சைக்கிளில் இருக்கிறது. இதை பார்த்த ஒரே ஒரு குழந்தை மட்டும் பக்கத்தில் வந்து அந்த பலூன் கடைக்காரர்க்கிட்ட கேட்கிறது. கருப்பு பலூன் மற்ற பலூன்கள் மாதிரி உயரமாக காற்றில் பறக்க முடியாதா? ஏன் இதை மட்டும் யாருமே வாங்கவே இல்லை என்று கேட்டது.


அந்த குழந்தை கருப்பு பலூனை பார்த்து சோகமாக கேட்டது, இதை பார்த்த அந்த பலூன் வியாபாரி சிரிச்சிட்டே சொன்னார் கருப்பாக இருப்பது ஒரு குறையும் இல்லை; அது உயர பறப்பதற்கு ஒரு தடையும் இல்லை; மற்ற கலர் பலூன்கள் மாதிரியே இந்த கருப்பு பலூனும் உயர பறக்க முடியும். உயரம் என்பது ஒரு தடையல்ல உள்ளே இருக்குகின்ற சரக்கு தான் முக்கியம் என்று சொன்னார். உள்ளே இருக்குகின்ற காற்றுதான் அது உயர பறப்பதற்கு மூலகாரணம் என்று சொன்னார். இதை கேட்டதும் உடனே அந்த குழந்தை அப்படி என்றால், அந்த கருப்பு பலூனை என்னிடம் கொடுங்கள் என்று சொல்லி மகிழ்ச்சியாக வாங்கிட்டு போனாது. அந்த குழந்தை வேறு யாரும் கிடையாது அமெரிக்கா நாட்டில் நிறவெறியை எதிர்த்து போராடிய மார்ட்டின் லூதர் கிங் என்பவர்தான்.
நம் இந்தியர்களின் கருப்பு நிறத்தை கேலி செய்து ஒரு வெள்ளைக்காரர் பேசியபோது நமது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் என்ன தெரியுமா? கடவுள் கேக் செய்துக் கொண்டிருந்த போது அவசர அவசரமாக வெந்து விட்டதா? இல்லையா? என்று அடிக்கடி திறந்து பார்த்து எடுத்தார்கள். அப்படி கேக் வெந்து விட்டது என்று நினைத்து எடுத்த கேக் எல்லாமே வேகவில்லை. அதுவும் வெள்ளை வெள்ளையாக இருந்தது. அந்த கேக் எல்லாமே அரைவேக்காடுகள் தான்.

ஆனால் கொஞ்சம் முறுகலாக வெந்த பிறகு எடுத்த கேக் எல்லாம் கொஞ்சம் கருப்பாக இருந்தது. ஆனால் அந்த கேக் எல்லாமே நல்லா வெந்து கமகம வாசனையுடன் ரொம்ப பக்குவமாக இருந்தது. நாங்கள் கடவுள் படைப்பில் கருப்பு கேக்குகள் அதனால் பக்குவமாய் இருக்கிறோம். வெள்ளை கேக்குகள் தான் அரைவேக்காடுகள் என்று சொன்னார். நாம் தாழ்வு மனப்பான்மையை நினைக்காமல் ஓரமாக வைத்துவிட்டு உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயமே!. சாதிக்க நினைப்பவர்களுக்கு நிறம் ஓர் தடையல்ல!

Related Tags

சாதிக்க நினைப்பவர்களுக்கு நிறம் ஓர் தடையல்ல | Biography of Martin Luther King Jr | Thomas Alva Edison Biography In Tamil | Biography of Sarvepalli Radhakrishnan | World Best Short Stories In Tamil | Very Short Moral Stories In Tamil | Short Stories In Tamil With Moral | Small Stories In Tamil To Read | Success Story of Apj Abdul Kalam | Short Success Story of Steve Jobs | Inspiring Real-Life Stories Indian | Biography of Helen Keller.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.


Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook